பெண்களுக்கு எதிரான வன்முறையின் (VAW) துறையில் அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கு அறிவூட்டுவதும், வசதியளிப்பதும் அத்துடன் ஊக்கமளிப்பதுமே Act nowஇன் நோக்கமாகும். இலங்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறை விஸ்தாரமாகப் பரவியுள்ளதாக புள்ளிவிபரம் எடுத்துக்காட்டுகின்றது. இதுவே இலங்கையில் உள்ள பெண்களுக்கு எதிரான வன்முறை மீதான தரவின் களஞ்சியமொன்றையும் வழங்குகின்றதும், வன்முறையினால் பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்தவர்களுக்கான ஆதரவிலான வரைச்சட்டமொன்றை வழங்குகின்றதுமான ஒரேயொரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனமாகும். இப்போது செயற்படுவதற்கும், சிறந்த எதிர்காலமொன்றுக்கு ஐக்கியப்படுவதற்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையின் பாதிக்கப்பட்ட உயிர்வாழ்பவர்களையும், பார்வையாளர்களையும் அதிகாரமளிப்பதை இட்டு நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த இணையதளம் பெண்கள் ஆராய்ச்சி நிலையத்தின் (CENWOR) முன்னெடுப்பிலும், Women Defining Peace (WDP)ன் ஆதரவுடனும் வடிவைமக்கப்பட்டுள்ளது. Canadian International Development Agency (CIDA) நிதிப்படுத்துகின்ற ஒரு கருத்திட்டமே WDP என்பதுடன், இது World University Service of Canada (WUSC), Co-water International இனாலும் அமுல்படுத்தப்படுகின்றது. Young Researcher's Collective (YRC) ன் ஆதரவுடன், வோல்ட்டேஜ் (பிறைவேற்) லிமிற்றெற்றினால் இவ் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

…வீடியோ கவனயீர்ப்பு……
பொதுவாக பாதிக்கப்பட்ட தப்பிப்பிழைத்தவர்கள் தம் மீது கொண்டுள்ள கட்டுப்பாட்டினைப் பயன்படுத்துவதற்கு தாக்குதலுக்குட்பட்ட பெண்களினால் விபரிக்கப்பட்ட உத்திகளை விளக்குவதற்காக பின்வரும் அதிகாரத்திலானதும், கட்டுப்பாட்டிலானதுமான சக்கரம் விருத்திசெய்யப்பட்டது.
Act Now இலிருந்து கடிதம்

8 டிசம்பர் 2011 பிற்பகல் 3:30 லிலாங்கி வணசுந்தர கருத்துக்கள்

அன்பான தைரியசாலியான வாசகர்களே,

உங்கள் பிரச்சனைகளை விசேடமாக உங்களுக்கு எதிரான வன்முறையை எவ்வாறு எதிர்கொள்வீர்கள் அல்லது துஷ்பிரயோகத்திலான அல்லது மூர்க்கத்தனமான சம்பவமொன்றிலிருந்து தப்புவதற்கு உங்கள் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவருக்கு நண்பர் ஒருவருக்கு அல்லது அந்நியர் ஒருவருக்கு நீங்கள் எவ்வாறு உதவினீர்கள் என்பது பற்றிய உங்கள் அனுபவத்தை பரிமாறிக் கொள்வதற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.இக் கதைகளை ஏனையோரை உயிர்ப்பூட்டும் என்பதுடன், பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கும் எதிராக தீர்மானமொன்றை எடுப்பதற்கு அவர்களுக்கு ஊக்கமளிக்கும். தயவுசெய்து உங்கள் கதையை Act Now குழாமுடனும், இந்த தளத்தின் வாசகர்களுடனும் பரிமாறிக்கொள்ளுங்கள்.தங்கள்

Act Now பணியாளர்