பாதுகாப்புத் திட்டம்

வன்முறையை எதிர்நோக்கும் போது, கிட்டுகின்ற தெரிவுகளைத் தெளிவாக அடையாளங் காண்பது அனேகமாக கஷ்டமானதாகும். இத்தகைய சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கு முன்கூட்டியே தயாராவதும், திட்டமிடுவதும் உதவியாக இருக்கும். பாலியலுக்கும், வீட்டு வன்முறைக்கும் எதிரான கன்சாஸ் கூட்டமைவின் (Kansas Coalition) ஊடாக கீழே வழங்கப்பட்டுள்ள தகவல் பெறப்பட்டுள்ளதுடன் (http://www.kcsdv.org/plan.html) இலங்கையின் நிலைவரத்திற்கு பொருந்தத்தக்கதாக சரிப்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டு வன்றைச் சம்பவமொன்றின் போது பாதுகாப்பு

வெளிவாயிலொன்று உள்ள பகுதியொன்றுக்குச் செல்லுங்கள்.
ஒரு குளியலறை (கடினமான மேற்பரப்புகளுக்கு அருகில்), சமையலறை (கத்திகள்) அல்லது ஆயுதங்கள் ஆகியவற்றுக்கு அருகில் அல்ல.
தொலைபேசியொன்றுள்ள அறையொன்றில் தங்கியிருங்கள் அல்லது எப்பொழுதுமே உங்களுடன் உங்கள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருங்கள்.
சாத்தியமென்றால் 119 அல்லது 2444444 என்ற எண்களை, நண்பர் ஒருவரை அல்லது அயலவர் ஒருவரை அழையுங்கள். வீட்டில் ஆயுதங்கள் இருந்தால் அவர்களுக்கு அறிவியுங்கள். இந்த எண்களை விரைவான சுழற்சியில் (speed dial) வைத்திருங்கள்.
நீங்கள் தப்பும் வழியை அறிந்து வைத்திருங்கள்
உங்கள் வீட்டிலிருந்து பாதுகாப்பாக எவ்வாறு வெளியேறுவது என்று பயி;ற்சி செய்யுங்கள். நீங்கள் தப்பும் வழியை கற்பனை செய்யுங்கள்.
நீங்கள் எங்கே செல்கின்றீர்கள் என அறிந்து வைத்திருங்கள்
நீங்கள் செல்வது அவசியமில்லை என்று நீங்கள் நினைக்காவிட்டாலும் கூட, வீட்டிலிருந்து வெளியேறுவதென்றால் நீங்கள் எங்கு செல்வீர்கள் எனத் திட்டமிடுங்கள்.
பொதிப்படுத்தப்பட்ட பையொன்றைத் தயாராக வைத்திருங்கள்
விரைவாக வெளியேறுமுகமாக அதை எட்டக்கூடிய இடமொன்றில் மறைத்து வைத்திருங்கள் அல்லது உங்கள் வீட்டில் துஷ்பிரயோகிப்பவர் தேடுதல் நடத்தினால் பையை வேறு எங்காவது வைத்திருங்கள்.
ஒரு குறியீட்டுச் சொல்லை அல்லது சமிக்ஞையைத் திட்டமிடுங்கள்
நீங்கள் அபாயத்தில் இருக்கும் போது ஏனையோருக்கு அறிவிப்பதற்காக குறியீட்டுச் சொல்லொன்று பற்றி உடன்படுங்கள். அவர்கள் குறியீட்டுச் சொல்லை அல்லது சமிக்ஞையைப் பெற்றவுடன் பொலிசை அழைக்குமாறு உங்கள் பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு, அயலவர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு கூறுங்கள்.

 

 

தங்கியிருப்பதற்கு ஒரு பாதுகாப்பான இடத்தை வைத்திருங்கள் -அது உங்களை, உங்கள் பிள்ளைகளை அல்லது பேரப்பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான இடமொன்றா என நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
வீட்டு வன்முறைக்கு பாதிக்கப்பட்டவர்/தப்பிப்பிழைத்தவர் சேவைச் செயற்றிட்டமொன்றுக்கு அழைப்புவிடுங்கள் - உங்களுக்கு சேவைகளும், வாழிடங்களும் அவசியமென்றால் அவை எங்கு கிட்டுகின்றன எனக் கண்டறியுங்கள் (தாபனங்களின் விவரக்கொத்துக்கான தொடர்பு). சகல வேளைகளிலும் கைக்கு எட்டியதாக அவற்றின் விலாசங்களையும், தொலைபேசி எண்களையும் வைத்திருங்கள். கையடக்கத் தொலைபேசி இலக்கமொன்றை நீங்கள் கொண்டிருந்தால், அதை விரைவான சுழற்சியில் (speed dial) வைத்திருங்கள்.
நீங்கள் நம்பும் யாரேனும் ஒருவரைக் கண்டறியுங்கள் - முன்கூட்டியே அவர்களிடம் பணம், மேலதிகமான சாவிகள், முக்கியமான ஆவணங்களின் பிரதிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றைக் கொடுத்து வைத்திருங்கள். இதனால் அவசியப்பட்டால் நீங்கள் விரைவிலேயே வெளியேற முடியும்.

சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பியுங்கள் - உங்கள் சுதந்திரத்தை அதிகரிப்பதற்காக உங்கள் பெயரை மட்டும் இடுங்கள். உங்கள் சம்பளத்திலிருந்து அல்லது கொடுப்பனவு காசோலையிலிருந்து நேரடியாக வைப்பிலிடுவதைக் கரிசனைக்கெடுங்கள்.

உங்கள் பாதுகாப்புத் திட்டத்தை மதிப்பாயுங்கள் - துஷ்பிரயோகிப்பவரை விட்டு விலகுவதற்கான பாதுகாப்பான வழியை அறிந்து கொள்ளுமுகமாக, சாத்தியமானளவு அடிக்கடி உங்கள் திட்டங்களை ஆய்ந்து, சோதனை செய்யுங்கள்.

 

வெளியேறுவதற்கான அவசியம் உங்களுக்கு ஏற்பட்டால், பின்வருவன போன்ற முக்கியமான ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்:

அடையாள அட்டை
திருமண சான்றுப்பத்திரம்
சாரதி உத்தரவுப்பத்திரங்கள்
பிறப்புச் சான்றுப்பத்திரங்கள் – உங்களினதும், உங்கள் பிள்ளைகளினதும் பிறப்புச் சான்றுப்பத்திரங்கள்
பணம், காசோலைப் புத்தகங்கள், கடன் அட்டைகள், ATM அட்டைகள், வாகனக் காப்புறுதி மற்றும் பதிவுப் பத்திரங்கள்
கடவுச்சீட்டு
விவாகரத்து, பாதுகாவல் பத்திரங்கள் மற்றும் தடுத்துவைத்தல் கட்டளை
காப்புறுதிப் பத்திரங்கள் மற்றும் மருத்துவப் பதிவேடுகள்
வீட்டு உறுதி அத்துடன்/அல்லது குத்தகை, வாடகை உறுதி/ஆவணம்
பிள்ளைகளின் பாடசாலை மற்றும் சுகாதாரப் பதிவேடுகள் (உதாரணம்: நோய் பாதிக்கப்படாமை அட்டைகள்)

 


 

உங்கள் சொந்த வீட்டில் பாதுகாப்பு (உங்களுடன் துஷ்பிரயோகிப்பவர் வாழாவிட்டால்)

உங்கள் பாதுகாப்பு முறைமையைத் தரமுயர்த்துங்கள்
சாத்தியமான விரைவில் கதவுகளினதும், யன்னல்களினதும் சாவிகளை மாற்றுங்கள். பாதுகாப்புச் சேவை, யன்னல் சட்டங்கள், சிறப்பான வழியில் ஒளியேற்றல், புகை கண்டுபிடிக்கும் கருவிகள் மற்றும் தீயணைப்புக் கருவிகள் ஆகியவற்றைக் கரிசனைக்கெடுங்கள்.
பாதுகாப்புத் திட்டமொன்றைக் கொண்டிருங்கள்
பொலிசாரை அல்லது அவர்கள் நம்பும் யாரேனும் ஒருவரை எவ்வாறு வரவழைப்பது என்பதையிட்டு உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் போதியுங்கள். தொந்தரவையிட்டு அறிவிப்பதற்கும், பிள்ளைகளை அழைத்து வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் நீங்களும், உங்கள் பிள்ளைகளும் உடன்படக்கூடியதாக சாங்கேத குறியீட்டுச் சொல்லொன்றைக் கொண்டிருங்கள்.
உங்கள் தொலைபேசி இலக்கத்தை மாற்றுங்கள்
பதிலளிக்கும் இயந்திரமொன்றை அல்லது அழைப்பவரை அடையாளங்காணும் வசதியொன்றை நீங்கள் கொண்டிருந்தால். உங்களுக்கு வரும் அழைப்புக்களை நினைவில் வைத்திருங்கள். பயமுறுத்தல்களுடனான சகல செய்திகளை அல்லது ஏதாவது கட்டளைகளை மீறுகின்றவற்றை பாதுகாத்து வைத்திருங்கள். வெளியிடப்படாத இலக்கமொன்றைப் பெறுவதையிட்டு உங்கள் தொலைபேசி நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
அயலவர்களுடனும், வீட்டு உரிமையாளருடனும் பேசுங்கள்
துஷ்பிரயோகிப்பவர் தொடர்ந்துமே உங்களுடன் வாழவில்லை என்றும், உங்கள் வீட்டுக்கு அருகில் துஷ்பிரயோகிப்பவரை அவர்கள் கண்டால் அவர்கள் பொலிசுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவியுங்கள்.
சட்ட ஆலோசனையைப் பெறுங்கள்
உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் பாதுகாக்கின்ற பாதுகாவலையும், மேற்பார்வையிடச் செய்தலையும், விவாகரத்து ஏற்பாடுகளையும் ஆராய்வதற்காக வீட்டு வன்முறை பற்றிய அறிவைக்கொண்ட வழக்கறிஞர் ஒருவரைக் கண்டறியுங்கள். விருப்பொன்றாக இடைக்காலப் பாதுகாப்புக் கட்டளையொன்றைப் பெறுவதையிட்டு கலந்துரையாடுங்கள். வீட்டு வன்முறையினால் பாதிக்கப்பட்டவர் ஆதரவுச் சேவையை வழங்கும் தாபனமொன்றுடன் தொடர்பு கொள்ளுங்கள் (தாபன விவரக்கொத்துக்கான தொடர்பு).


பாதுகாப்பும், உணர்வுப்பூர்வமான ஆரோக்கியமும்


ஆதரவைப் பெறுங்கள். உங்கள் விருப்புக்களையும், உங்களால் அடையக்கூடிய சேவைகளையும் அடையாளம் காண்பதற்காக வீட்டு வன்முறை நெருக்கடிநிலை உதவி இலக்கத்தை (WIN 0114718585) அழையுங்கள்.
உங்களுக்கு எது பாதுகாப்பானதோ அதைச் செய்யுங்கள். துஷ்பிரயோகிப்பவருடன் நீங்கள் தொடர்பாடலைக் கொண்டிருக்க வேண்டுமென்றால், தொலைபேசி, ‘மெயில்’ (mail) மூலமாகவோ அல்லது இன்னொரு நபர் உடனிருக்கவோ நீங்கள் பாதுகாப்பானது என உணர்கின்ற வழியில் அதைச் செய்வதற்கு ஒழுங்கு செய்யுங்கள்.


பாதுகாப்பும், உங்கள் பிள்ளைகளும்


பாடசாலைகளுக்கும், சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கும் அறிவியுங்கள். உங்கள் பிள்ளையை/பிள்ளைகளை ஏற்றிவருவதற்கு யார் அனுமதியைக் கொண்டுள்ளார் என அவர்களுக்கு அறியச் செய்வதுடன், உங்கள் குறியீட்டுச் சொல்லை அவர்களுக்கு வழங்;குங்கள். உங்களையும், உங்கள் பிள்ளையையும்/பிள்ளைகளையும் பாதுகாப்பதற்கான வேறு விசேட ஏற்பாடுகளையிட்டு கலந்துரையாடுங்கள். சாத்தியமென்றால் துஷ்பிரயோகிப்பவரின் படமொன்றை வழங்குங்கள்.
பாதுகாப்பான இடமொன்றில் பிள்ளையை/பிள்ளைகளைப் பரிமாறுங்கள்: மேற்பார்வை செய்வதற்காக பிள்ளையை/பிள்ளைகளைப் பரிமாறிக்கொள்வதற்கு பாதுகாப்பான இடமொன்றைக் கண்டறியுங்கள். இந் நோக்கத்திற்காக சில தாபனங்கள் குறிப்பான அமைவிடங்களைக் கொண்டுள்ளன. நீங்கள் உதவியை நாடவுள்ள தாபனத்துடன் ஆலோசனை நடத்துங்கள்.


தொழில் மீதான பாதுகாப்பு


நீங்கள் நம்புகின்ற யாரேனும் ஒருவருக்குச் சொல்லுங்கள். விசேடமாக நீங்கள் ஓர் இடைக்கால அல்லது பாதுகாப்பு உத்தரவொன்றைக் கொண்டிருந்தால், உங்கள் நிலைமையையிட்டு உங்கள் வேலைத்தளத்தில் உள்ள யாருக்கு அறிவிப்பீர்கள் எனத் தீர்மானியுங்கள். கிட்டுகின்றதென்றால், இது அலுவலகத்தின் பாதுகாப்பினை உள்ளடக்கக்கூடும். சாத்தியமென்றால் துஷ்பிரயோகிப்பவரின் படமொன்றை வழங்குங்கள்.
உங்கள் அழைப்புக்களை விபரப்படுத்துங்கள். சாத்தியமென்றால் உங்கள் தொலைபேசி அழைப்புக்களை விபரப்படுத்தி, குறித்துக் கொள்வதற்கு யாரேனும் ஒருவரை ஒழுங்குசெய்யுங்கள்.
பாதுகாப்பான திட்டமொன்றைச் செய்யுங்கள். உங்கள் வேலைத்தளத்திற்கு பிரவேசிக்கும் போதும், அதிலிருந்து வெளியேறும் போதும் பாதுகாப்புத் திட்டமொன்றை உருவாக்குங்கள். உங்கள் வாகனத்திற்கு அல்லது வேறு வாகன சேவைக்கு உங்களுடன் வழித்துணைக்கு வருவதற்காக யாரேனும் ஒருவரைக் கொண்டிருங்கள்.
நீங்களும், துஷ்பிரயோகிப்பவரும் ஒரே இடத்தில் வேலை செய்வதென்றால், அட்டவணைப்படுத்தல், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள், ஊழியர்/குடும்ப நன்மைகள் ஆகியன தொடர்பில் உங்கள் விருப்புக்களையிட்டு உங்கள் மேற்பார்வையாளருடன் கலந்துரையாடுங்கள்.

 

ஆட்கடத்தல் தொடர்பான பாதுகாப்பு ஆலோசனைகள்

இலங்கையில் தொழில் வாய்ப்புக்களை ஆண்களும் பெண்களும் நாடுகின்ற இடங்களிலும், நகரத்தில் அல்லது வெளிநாடொன்றில் சிறந்த வாழ்க்கையொன்றை நாடுகின்ற இடங்களிலும் ஆட்கடத்தலும், சுரண்டலும் அடிக்கடி இடம்பெறுகின்றன:


நீங்கள் அணுகியுள்ள தொழில் முகவர் நிலையம் பதிவு செய்யப்பட்டதா என சரிபாருங்கள். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
தொழில் முகவர் நிலைய உத்தியோகத்தர்களை நீங்கள் சந்திக்க செல்லும் வேளை உங்கள் நடமாட்டம் பற்றி குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அறிவியுங்கள்.
தொழிலுக்கு செல்வதற்கு முன், விசேடமாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் தொழில் வழங்குனரின் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் போன்றவை பற்றிய விபரங்களை எப்பொழுதும் கேட்டறிந்து கொள்வதுடன், இத்தகவலை நம்பிக்கையான குடும்ப உறுப்பினர்களுடன் அல்லது நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ளுங்கள்.
உங்கள் கடவுச்சீட்டினை, தேசிய அடையாள அட்டையை யாரேனும் ஒருவருக்கு, உங்கள் மேலதிகாரிக்குக் கூட வழங்க வேண்டாம்.
முன்னெச்சரிக்கையொன்றாக சகல வேளைகளிலும் உங்கள் கடவுச்சீட்டினதும், தேசிய அடையாள அட்டையினதும் புகைப்படப் பிரதிகளை வைத்திருங்கள்.
தொழிலுக்காக வெளிநாட்டுக்கு பிரயாணம் செய்வதற்கு முன் மேலும் தகவலுக்கும் ஆலோசனைகளுக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள சஹன பியஸ சேமநலன் சேவை நிலையத்துக்கு வருகை தாருங்கள்.
வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன் அந்நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் தொலைபேசி இலக்கத்தையும், விலாசத்தையும் குறித்து வைத்திருங்கள்.
மேலும் தகவலுக்கு இலங்கை வெளிநாட்டுத் தொழில் பணியகத்தை +94 11 2879900 Ext 902 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.


வெளியே செல்லும் போது

நிகழ்ச்சிகளுக்கு, விசேடமாக விருந்துகளுக்கு நீங்கள் செல்லும் போது, நீங்கள் நம்பிக்கை வைத்திருப்பவர்களுடன் செல்லுங்கள்.
நண்பர்களைக் கொண்ட குழுவொன்றுடன் விருந்தொன்றுக்கு அல்லது பொது நிகழ்ச்சியொன்றுக்கு நீங்கள் செல்லும் போது, ஒன்றாகச் சென்று, ஒருவரையொருவர் கவனிப்பதுடன், ஒன்றாகவே வெளியேறுங்கள்.
உங்கள் குடிபானத்தைக் கவனிக்காமல் விட்டு விட வேண்டாம் அல்லது அந்நியர் ஒருவரிடமிருந்து அல்லது திறந்த ‘கவுன்டரில்’ (counter) இருந்து பானமொன்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
நீங்கள் நன்கு அறியாத யாரேனும் ஒருவருடன் நீங்கள் வெளியே சென்றால், உங்கள் திட்டங்கள் பற்றியும், மாலையில் எங்கு வெளியே போவதற்கு எதிர்பார்த்திருக்கின்றீர்கள் என்பது பற்றியும் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு அறிவியுங்கள்.
வீட்டுக்குச் செல்வதற்கு எப்பொழுதுமே மேலதிகமான பணத்தைக் கொண்டிருங்கள். உங்களுக்கு உதவி அவசியம் என்றால் நீங்கள் அழைப்பு விடுக்கக்கூடிய யாரேனும் ஒருவருக்கான திட்டமொன்றைக் கொண்டிருங்கள்.
சகல வேளைகளிலும் உங்கள் சுற்றுச் சூழல்களைப் பற்றி அவதானமாக இருங்கள்.
நீங்கள் அறியாத அல்லது நம்பாத நபர் ஒருவருடன் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டாம்.
இருட்டிய பின்னர் வெளிச்சமுள்ள பகுதிகளில் மட்டுமே நடவுங்கள்.
நீங்கள் வாகனத்தைச் செலுத்தினால் அல்லது தனிப்பட்ட வாகனமொன்றில் நண்பர்களுடன் சென்றால், நீங்கள் ஏறியதிலிருந்து நீங்கள் அடைய வேண்டிய இடம் வரை கதவுகள் சாவிபோட்டு பூட்டப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
வாடகை வண்டிகளில் (கார்கள் அல்லது வேன்கள்) அல்லது முச்சக்கரவண்டிகளில் பிரயாணம் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருங்கள்.
நீங்கள் செல்லும் இடத்திற்கான திசைகளில் எப்பொழுதுமே செல்வதற்கு முயலுங்கள். சாரதி (வாடகை வண்டி அல்லது முச்சக்கர வண்டி) இருட்டான, தனிமையான, அல்லது பரீச்சயமற்ற வழிகளில் சென்றால், வண்டியைத் திருப்புமாறு அவரைப் பணியுங்கள். அவர் உடனடியாக நிறுத்தாவிட்டால், உதவி கேட்டு 119 என்ற பொலிஸ் “ஹொட்லைனுக்கு’ அல்லது நம்பகமான குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அல்லது நண்பர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுங்கள்.
உங்கள் தொலைபேசியில் விரைவு சுழட்டலில் குடும்ப உறுப்பினர்களின், நண்பர்களின் எண்களை, 119 என்ற பொலிஸ் ‘ஹொட்லைன்’ எண்ணை அவசர நேரத்தில் பயன்படுத்தவதற்காக வைத்திருங்கள்.
(மூலம்: பாதுகாப்பான உதவி வழி
மூலம்: https://www.safehelpline.org/ways-to-reduce-your-risk-of-rape-in-the-military#active-bystander-intervention

 

ஏனையோருடன் தொடர்பாடலைக் கொண்டிருத்தல்

 

நீங்கள் யாரேனும் ஒருவருடன் இருக்கும் போது, ஆரம்பத்திலிருந்தே உங்கள் எல்லைகள் அவருக்குத் தெரியும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு தெளிவாக உரையாடுங்கள். செய்தி புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கு வாய்மொழியிலானதும், வாய்மொழிசாராததுமான (உடல் மொழி) உரையாடல் பயன்படுத்தப்பட முடியும்.
நீங்கள் பின்வருமாறு நடந்திருந்தாலும் கூட, “இல்லை” என்று கூறுவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது:
 
முதலில் “ஆம்” என்று கூறி, பின்னர் உங்கள் மனதை மாற்றுதல்
இந்தத் துணைவருடன் முன்னர் பாலியல் உறவைக் கொண்டிருத்தல்
அத்தகைய நபரை முத்தமிட்டிருத்தல்
“உணர்ச்சியைத் தூண்டும்” ஆடைகளை அணிந்திருத்தல். நீங்கள் ஆடையணிந்த விதம் பாலியலுக்கான அல்லது துஷ்பிரயோகத்திற்கான அழைப்பு அல்ல என்பதை நினைவில் வைத்திருங்கள்.
நீங்கள் அசௌகரியத்தை உணர்ந்தால், பயப்பட்டால் அல்லது வற்புறுத்தப்பட்டால், சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு விரைவாகச் செயற்படுங்கள். “இதை நிறுத்துங்கள்" எனக் கூறிவிட்டு, வெளியேறுங்கள் அல்லது உதவியைக் கோருங்கள்.
தகவலைப் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கடமைகள்

தகவளிப்பவரின் மொழியில் வழங்கப்பட்டுள்ள தகவலைப் பதிவுசெய்வதற்கு, பதிவினை தகவலளிப்பவர் வாசித்து, புரிந்து கொள்வதையும், அதில் கையொப்பமிடுவதையும் உறுதிப்படுத்துங்கள்.
தகவலளிப்பவரின் மொழியில் தகவலைப் பதிவுசெய்வதற்கு உத்தியோகத்தரினால் இயலாதென்றால், உத்தியோகத்தருக்கு எழுத்தில் தகவலை தகவலளிப்பவர் வழங்கி, பதிவேட்டில் கைச்சாத்திடலாம்.
எழுத்தில் தகவலை வழங்குவதற்கு தகவலளிப்பவருக்கு இயலாதென்றால், உத்தியோகத்தரினால் சிங்களத்திலும், தமிழிலும் பதிவுசெய்யப்பட்டு, தகவலளிப்பவர் பதிவேட்டில் கைச்சாத்திட முன், அவர் புரிந்துகொள்கின்ற மொழியொன்றில் அவருக்கு வாசித்துக் காட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
ஏதாவது தகவல் எழுதப்பட்டிருந்தாலும், தகவலை வழங்கும் நபருக்கு அது வாசித்துக்காட்டப்பட வேண்டும்.
இத்தகவல் தேவையற்ற தாமதங்கள் இன்றி தகவல் புத்தகத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.
தகவலைப் பெறுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அல்ல என்றால், அதை பொறுப்பதிகாரிக்கு அவர் அறிவிக்க வேண்டும்.

 

பாலியல்வல்லுறவு, முறை தவறிய உடலுறவு, பாலியல் தொந்தரவு அல்லது பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் போன்ற சம்பவமொன்றின் போது முறைப்பாடு செய்வதற்கான வழிமுறை


அங்கீகாரம் பெற்ற மருத்துவ உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து விரைவிலேயே மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். ஏதாவது இருந்தால், தலைமயிர், உடல் திரவங்கள், தசைநார்கள் மற்றும் வேறு சான்று ஆகியவற்றைச் சேகரிப்பதற்கான கடமையொன்றை மருத்துவ உத்தியோகத்தர் கொண்டுள்ளார். ஏதாவது பாரதூரமான உடல்ரீதியிலான காயங்கள் இருந்தால் சட்ட மருத்துவ உத்தியோகத்தருக்கும், பொலிசுக்கும் அறிவிப்பதற்கான கடமையொன்றை மருத்துவ உத்தியோகத்தர்கள் கொண்டுள்ளார்கள்.
அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்யுங்கள்..
பொலிஸ் முறைப்பாடொன்றைச் செய்வதற்கு முன், பொலிஸ் நிலையத்தில் பெண்கள், சிறுவர் பிரிவொன்று உள்ளதா என விசாரியுங்கள் அல்லது ஆண் கான்ஸ்டபிள் ஒருவருக்குப் பதிலாக பெண் கான்ஸ்டபிள் ஒருவருடன் பேசுவதற்கு விரும்பினால் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கேளுங்கள். சம்பவத்தின் சகல விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
வாக்குமூலத்தில் கைச்சாத்திடுவதற்கு முன் அதை வாசிப்பதை உறுதிசெய்யுங்கள்.
வாக்குமூலமொன்றைப் பெறுவதற்கு மேலதிகமாக, உடல்ரீதியிலான சான்றினைப் பொலிசார் சேகரிப்பதுடன், யாரேனும் சாட்சிகள் இருந்தால் அவர்களுடனும் பேசுவார்கள்.
உங்கள் விடயத்தின் சூழ்நிலைகளைப் பொறுத்து, அதிகளவு மணித்தியாலங்களைப் பொலிசாரின் விசாரணை எடுக்கும். சில கேள்விகள் எல்லை மீறுவதாக இருக்கும் என்பதுடன், உங்கள் மீதான தாக்குதல் பற்றிய விபரங்களையிட்டு அந்த உத்தியோகத்தர்கள் பல தடவைகள் விசாரிப்பார்கள். குற்றமிழைத்தவருக்கு எதிரான மிகப் பலமான சாத்தியத்திலான வழக்கைத் தாக்கல் செய்வதற்காக துல்லியமாக ஒவ்வொரு விபரத்தையும் பெறுவதற்கான அவசியம் இருப்பதனால், விரிவான விதத்தில் விசாரணை இடம்பெற்றாலும், அது அனேகமாக நியாயப்படுத்தப்படுகின்றது.
இது சாத்தியமான விரைவில் உங்களால் நினைவில் வைத்திருக்கக்கூடிய ஒவ்வொரு விபரத்தையும் எழுதுவதற்கு உதவுகின்றது. இதனால் நீங்கள் விபரங்களைப் பொலிசாருக்கு பரிமாறிக்கொள்ளலாம்.
முறையிடும் நடைமுறையின் ஊடாக சில தாபனங்கள் ஆதரவை வழங்குகின்றன. உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் அவை தெளிவுபடுத்தும். சேவை வழங்குநர்கள் செய்ய


பொலிசுக்கு முறைப்பாடு செய்வதற்கான கால எல்லை

 

பாலியல் வன்முறையைப் பொறுத்தளவில், விரைவிலேயே குற்றம் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டால், சான்றுகள் சேகரிக்கப்பட்டு, வழக்கு பலமாக விளங்கும்
எப்பொழுதுமே குற்றத்தை சாத்தியமான விரைவில் முறையிடுங்கள். உங்களுக்கு நடந்தது குற்றமொன்றா என்பதையிட்டு நீங்கள் நிச்சயமற்றிருந்தால், முதலில் பொலிசுக்கு அல்லது வேறு ஆதரவுத் தாபனத்திற்கு முறையிட்டுவிட்டு, அவற்றுடன் விடயத்தைத் தெளிவுபடுத்துங்கள்.
குற்றமொன்றைப் பொறுத்தளவில், குற்றமொன்றை முறையிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள ஆகக்கூடுதலான சட்டபூர்வமான கால எல்லை இருபது (20) வருடங்களாகும்.


அதைத் துஷ்பிரயோகமாக அவர்கள் அடையாளங் காண்பதில்லை.
பொதுவான நிகழ்வொன்றாக அதை ஏற்றுக்கொள்ளுதல்
முறைப்பாடுகளுக்கு ஊக்கமளிக்காத ஒரு சூழல்
குற்றமிழைப்பவரை விட பாதிக்கப்பட்டவர்களை/தப்பிப்பிழைத்தவர்களை அவதூறு செய்யும் பொதுவான வழக்கம்
அவருக்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்புக்கான அச்சம்
விடயத்தை மோசமாக்கச் செய்யும் அச்சம்-உயர்வடைகின்ற வன்முறை
நம்பாதிருத்தலின், கேலி செய்யப்படுதலின் அச்சம்
ஒருவரின் மரியாதைக்கும், குடும்பத்திற்கும் ஏற்படுத்தப்படும் கெடுதலையிட்டு அச்சம்
வேலைத்தளத்தில் பாலியல் தொந்தரவின் விடயத்தில் தனது தொழிலை இழந்துவிடுவோமோ என்ற அச்சம்
சட்ட நிவாரணம் பற்றிய விழிப்புணர்வு இன்மை
குற்றமிழைத்தவர் மீது தங்கியிருத்தல்
குற்றமிழைத்தவருக்கு உறவினராக இருத்தல் அல்லது நெருங்கிய உறவொன்றைக் கொண்டிருத்தல்
நடந்திருப்பது சட்டவிரோதச் செயலை அல்லது குற்றமொன்றைக் கொண்டிருக்கிறது என்பதை அறியாதிருத்தல்