பார்வையாளரின் தலையீடு

பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கவனத்திற்கெடுப்பதில் உங்கள் வகிபங்கு

தனிப்பட்ட ஒருவருக்கு உடல்ரீதியான காயங்கள் ஏற்படும் போது மட்டுமே அது மூர்க்கத்தனமான செயற்பாடொன்று என நாம் வழமையாகக் கருதுகின்றோம். ஆனால், இது அப்படியல்ல. இலங்கையில் உணர்வுப்பூர்வமான மற்றும் வாய்மொழியிலான துஷ்பிரயோகம், பொருளாதாரச் சுரண்டல் மற்றும் புதிய ஊடகக் கருவிகள் ஊடாக இழைக்கப்படும் வன்முறை ஆகியன மிகவும் பொதுவானவை என்பதுடன், அவை சகித்துக்கொள்ளப்படலாகாது.

ஒன்றில் வேலையில் அல்லது பொதுப் போக்குவரத்தில் பெண் ஒருவர் தொந்தரவுக்குள்ளாக்கப்படுவதை நீங்கள் எப்பொழுதாவது நேரில் கண்டிருக்கிறீர்களா? பாலியல் துஷ்பிரயோகம் அல்லது பாலியல்வல்லுறவு போன்ற, பெண் ஒருவருக்கு எதிரான குற்றமொன்றை அல்லது குற்ற முயற்சியொன்றை நீங்கள் நேரில் கண்டிருக்கிறீர்களா?

நாளாந்த அடிப்படையொன்றில் வன்முறைக்கு பெண்கள் முகங்கொடுப்பதுடன், ஒன்றில் செயற்பாட்டினைக் குழப்புவதன் மூலம், அதை முறையிடுவதன் மூலம் அல்லது செயற்பாட்டினை அனுபவிக்கின்ற பெண்ணுக்கு அல்லது பெண்பிள்ளைக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் மிகவும் அடிக்கடி யாரேனும் ஒருவர் உதவிசெய்வதற்கு முன்வர முடியும்.

தனிப்பட்ட அல்லது பொது வாழ்க்கையில் துஷ்பிரயோகிக்கப்படும் யாரேனும் ஒருவருக்கு எவ்வாறு நாம் உதவி புரியலாம் என்பது மீதான தகவலை பார்வையாளரின் தலையீடு வழங்குகின்றது. தலையிடுவதற்கான ஆற்றலளவைக் கொண்டிருப்பதும், வன்முறையை அனுபவிக்கவுள்ள அல்லது அனுபவிக்கின்ற பெண்ணுக்கு அல்லது பெண்பிள்ளைக்கு உதவுகின்றவர்களுமே பார்வையாளர்களாவர்.

உங்களால் எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பதைக் கண்டறிவதற்கு மேலும் வாசியுங்கள்.

தலையிடுவதிலிருந்து பார்வையாளர்களை எது தடுக்கின்றது?


யாரேனும் ஒருவர் செயற்படாவிட்டால், ஆட்களுக்கு எதிராகச் செல்வது கடினமானதாகும்.
தாம் தொந்தரவுக்கு ஆளாகின்றோமே என மக்கள் உணரக்கூடும். நான் தவறாக இருந்து, அவர்களுக்கு உதவி தேவை இல்லையென்றால் என்ன?
குழுவில் உதவிசெய்வதற்கு மிகவும் தகுதிவாய்ந்த யாரேனும் ஒருவர் இருப்பார் என அவர்கள் நினைக்கக்கூடும்.
யாரேனும் ஒருவர் ஒன்றுமே செய்யாதிருப்பதனால், உதவிக்கு சூழ்நிலை அழைப்புவிடுக்காது என அவர்கள் நினைக்கக்கூடும்.
தம்மைச் சுற்றியுள்ள மக்களிடமிருந்து ஒவ்வொரு நபரும் குறிப்பினை எடுக்கும் போது, ஒரு வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே பொதுவான விளைவொன்றாகும்.

 

என்னால் என்ன செய்ய முடியும்

பெண்களுக்கு எதிரான வன்முறையை முன்னிலைப்படுத்துகின்ற உத்தேசமான சூழ்நிலைகளையிட்டு கரிசனை கொள்ளுங்கள்.
நீங்கள் கவனமாக அவதானித்தால், எப்பொழுதுமே எச்சரிக்கையிலான சமிக்ஞைகள் உள்ளன. இதோ சில உதாரணங்கள்:

ஆரோக்கியமற்ற, துஷ்பிரயோகத்திலான உறவின் சமிக்ஞைகள்

பொருத்தமற்ற விதத்தில் தொடுதல்
முன்னிலைப்படுத்துகின்ற குறிப்புக்கள்
ஒருவர் தம்மைப் பாதுகாப்பதற்கு அல்லது தடுப்பதற்கு இட்டுள்ள தனிப்பட்ட எல்லைகளைச் சோதித்தல் அல்லது கருத்திற்கெடுக்காதிருத்தல்
தனிமையாக இருப்பதற்கு முயற்சித்தல்
மதுபானத்தின்/போதைப்பொருட்களின் பாவனையைத் தூண்டுதல்
கத்துதல், தள்ளுதல், பயமுறுத்துதல் போன்ற மூர்க்கத்தனமான நடத்தைகள்.

வன்முறையை அனுபவிக்கும் ஒரு பெண் அல்லது பெண்பிள்ளை:

சடுதியாக அவர் மனோநிலை மாற்றமடைந்து, குணத்தை வேறுபடுத்திக்காட்டும் வழியொன்றில் நடப்பார்.
அச்சத்தில் இருப்பார்
பொது வைபவங்களில் கலந்துகொள்ளவதற்காக, நண்பர்களுடன் வெளியே செல்லமாட்டார்.
மன அழுத்தத்தைக் கொண்டிருப்பார்
விளக்கப்பட முடியாத வகையில் சிராய்ப்புக் காயங்களையும், காயங்களையும் கொண்டிருப்பார்.


ஆரோக்கியமற்ற, துஷ்பிரயோகத்திலான உறவின் சமிக்ஞைகள்


தனது துணைவர் பற்றி நபர் ஒருவர் ஆட்டிப்படைக்கின்ற பொறாமையையும், சொந்தத்திற்குரியதையும் கொண்டுள்ளாரா?
உடன்படாதிருப்பது சரி என துணைவர் உணராமல் இருப்பதற்காக அவர் துணைவரைப் பயமுறுத்துகிறாரா?
விடயங்களுக்கான அவரது பிரதிபலன்கள் பற்றி துணைவர் தொடர்ந்துமே கவலைப்படுகின்றாரா?
துணைவரை அவர் பயமுறுத்துகின்றாரா?
அவர் தனது துணைவரை இழுக்கின்றாரா, நிர்ப்பந்திக்கின்றாரா, தள்ளுகின்றாரா, அல்லது அடிக்கின்றாரா?
பாலியலுக்காக மற்றைய நபரை நிர்ப்பந்திக்கின்றாரா, அல்லது “நீங்கள் என்னைக் காதலித்திருந்தால்..." போன்ற விடயங்களைக் கூறி, பாலியல் பற்றி வலிமைமிக்கவராக அல்லது பயந்தசுபாவம் கொண்டவராக இருக்கின்றாரா?
மற்றையை துணைவரை அவர் மோசமாக நடத்தும் போது இழிவுபடுத்துகின்ற துணைவரின் நடத்தைக்காக மன்னிப்பு கோருவதற்கான அவசியத்தை துணைவர் உணர்கின்றாரா?
இவ்வகையிலான உறவைக் கொண்டுள்ள ஒரு நண்பரை, சகபாடியை அல்லது குடும்பத்தை உங்களுக்குத் தெரியுமென்றால், இத்தகையதொரு உறவைத் தொடர்வதில் உள்ள கெடுதல்களை அவர்களுக்கு அறியச்செய்யுங்கள். இத்தகைய சூழ்நிலைகளில் தலையிடுவதிலிருந்து எம்மில் பலருமே விலகியிருக்கின்றோம். ஏனெனில், அத்துமீறுவதையிட்டு நாம் பயப்படுகின்றோம் அல்லது இத்தகைய அத்துமீறலினால் அவமதிக்கப்படக்கூடிய நண்பரை இழந்துவிடுவோம் என நாம் அச்சமடைகின்றோம்.
ஆனால், இத்தகைய உறவுகளை ஏன் பெருமளவு மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணம் என்னவெனில் இது வழமையானது, ஏற்றுக்கொள்ளக்கூடியது என அவர்கள் நம்புகின்ற காரணம் அல்லது காலப்போக்கில் விடயங்கள் முன்னேற்றமடையும் என அவர்கள் நம்புகின்ற காரணம் அல்லது அதற்கு தகுதியானவர்கள் என அவர்கள் நம்புகின்ற காரணம் என்பவையாகும். சில விடயங்களில், ஏனைய துணைவரைத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் துணைவர் தனிப்படுத்துவதுடன், வெளியார் உதவிக்கான அடைதலைத் தடுக்குமுகமாக தனது நண்பர்களுக்கு எதிராக அவரைத் திருப்பிவிடுகின்றார்.
உறவொன்றை முடித்துக்கொள்ளுமாறு நாம் யாரேனும் ஒருவரை நிர்ப்பந்திக்க முடியாது. ஆனால், கௌரவத்துடன் வாழ்க்கையொன்றை வாழ்வதற்கு அவசியமான தகவலை அவர்களுக்கு வழங்குவது எமது கடமையாகும்.
சூழ்நிலையொன்று எம்மை அசௌகரியத்தில் வைத்தால், அது ஒரு பிரச்சனையல்ல என அதை நிராகரிப்பதற்கு நாம் முயலக்கூடும். அந்நபர் நன்றாக இருக்கின்றார், நீங்கள் நினைப்பது போல அவர் மதிமயக்கத்தில் இருக்கவில்லை அல்லது அந் நபர் தன்னைப் பாதுகாக்கக்கூடிய நிலையில் இருக்கின்றார் என நீங்கள் உங்களுக்குள்ளேயே கூறிக்கொள்ளலாம். இது ஒரு தீர்வு அல்ல. நீங்கள் நினைப்பதை விட, அந்நபருக்கு உங்கள் உதவி அவசியப்படும்.
சந்தேகத்தில் இருக்கும் போது, உங்கள் உள்ளுணர்வுகளை நம்புங்கள்! சூழ்நிலையொன்று உங்களை அசௌகரியத்தை உணரவைத்தால், இது பொதுவாக ஏதோவொன்று தவறாக உள்ளது என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டலாகும்.
எதையும் செய்யாததை விட, சூழ்நிலை பற்றி தவறான கருத்தைக் கொண்டிருப்பது சிறந்தது.
எனினும், தலையிடும் நபருக்கு அபாயத்தை அத்தகைய செயற்பாடு விளைவிக்கும் என்றால், தலையீடு செய்யப்படலாகாது.
தலையிடுவதற்கான சாத்தியமான வழிவகைகள் மீது பால்நிலை அடிப்படையிலான வன்முறையினதும், பெண்களுக்கு எதிரான வன்முறையினதும் மீது பணியாற்றும் தாபனங்களுடன் பேசுங்கள் (தொடர்பு).
நம்பிக்கையான குடும்பத்தினருடன், நண்பர்களுடன் அல்லது சனசமூகத்தில் உள்ள தனிப்பட்டவர்களுடன் பேசுங்கள்

 

எவ்வாறு தலையிடுவது?

 

தலையிடுவதற்கு பலதரப்பட்ட வகைகள் உள்ளன. குற்றமிழைப்பவருக்கு இவற்றின் சில நேரடியானவை என்பதுடன், இவற்றில் சில குறைந்தளவு வெளிப்படையானவையாகும்:

உத்தேசமானரீதியில் அபாயகரமான சூழ்நிலையொன்றிலிருந்து வெளியே எடுப்பதற்கு சாக்குபோக்கு கூறுதல். உதாரணம்: மணியை அடித்தல்: வீட்டு வன்முறையை நிறுத்துவது - http://bellbajao.org/
அவரது நடவடிக்கைகள் பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும் என நண்பர் ஒருவரை அல்லது இணை-ஊழியர் ஒருவரை அறியச் செய்தல்
தனிமையிலிருந்து மீட்பதற்கு அல்லது உங்களிலிருந்து பிரித்து வைத்திருப்பதற்கு யாரேனும் ஒருவர் முயற்சிக்கின்ற போதிலும், அவரை ஒரு போதும் விட்டு விலகிச் செல்லக்கூடாது.
அவரது நடத்தை மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும் என்று பொருத்தமற்ற விதத்தில் நடக்கும் யாரேனும் ஒருவரை நினைப்பூட்டுவதற்கு நண்பர்களின் குழுவொன்றைப் பயன்படுத்தல்.
அவசியப்பட்டால் ‘பொலிசை’ அல்லது சம்பந்தப்பட்டவர்களை அழைத்தல்.

 

தகவலைப் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கடமைகள்


தகவளிப்பவரின் மொழியில் வழங்கப்பட்டுள்ள தகவலைப் பதிவுசெய்வதற்கு, பதிவினை தகவலளிப்பவர் வாசித்து, புரிந்து கொள்வதையும், அதில் கையொப்பமிடுவதையும் உறுதிப்படுத்துங்கள்.
தகவலளிப்பவரின் மொழியில் தகவலைப் பதிவுசெய்வதற்கு உத்தியோகத்தரினால் இயலாதென்றால், உத்தியோகத்தருக்கு எழுத்தில் தகவலை தகவலளிப்பவர் வழங்கி, பதிவேட்டில் கைச்சாத்திடலாம்.
எழுத்தில் தகவலை வழங்குவதற்கு தகவலளிப்பவருக்கு இயலாதென்றால், உத்தியோகத்தரினால் சிங்களத்திலும், தமிழிலும் பதிவுசெய்யப்பட்டு, தகவலளிப்பவர் பதிவேட்டில் கைச்சாத்திட முன், அவர் புரிந்துகொள்கின்ற மொழியொன்றில் அவருக்கு வாசித்துக் காட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
ஏதாவது தகவல் எழுதப்பட்டிருந்தாலும், தகவலை வழங்கும் நபருக்கு அது வாசித்துக்காட்டப்பட வேண்டும்.
இத்தகவல் தேவையற்ற தாமதங்கள் இன்றி தகவல் புத்தகத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.
தகவலைப் பெறுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அல்ல என்றால், அதை பொறுப்பதிகாரிக்கு அவர் அறிவிக்க வேண்டும்.

பயனுறுதிவாய்ந்த தலையீட்டுத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்!
முன்கூட்டியே திட்டமொன்றுடன் முன்வாருங்கள்!
அசௌகரியமான சூழ்நிலையொன்றில் உங்கள் நண்பர்கள் இருந்தால், நீங்கள் எவ்வாறு தலையிடுவதை அவர்கள் விரும்புவார்கள் என்பது பற்றி அவர்களுடன் பேசுங்கள்.
சூழ்நிலைக்குச் சிறந்தது என்ற தலையீட்டு மூலோபாயத்தைத் தெரிவுசெய்யுங்கள்.
ஒரு முறை மூச்செடுத்துவிட்டு, உங்கள் இயக்கத்தைச் செய்யுங்கள்.
வழமையாக, குழுவொன்றின் தலையிடுதல் தனிப்பட்டரீதியில் தலையிடுவதை விட பாதுகாப்பானதாகும்செயற்படுவதற்கு நீங்கள் திறன்களைக் கொண்டிருக்கிறீர்கள்! தலையீடு தொடர்பாக தகவல்கள், ஆரோக்கியமான சனசமூகமொன்றைக் கட்டியெழுப்புதல், பாலியல் தாக்குதல் தொடர்பான வளங்களும், அறிவும் வழங்கும் பெருமளவு இணைய தளங்கள் உள்ளன.


மூலம்: http://www.wm.edu/offices/deanofstudents/services/ohp/healthtopics/sexualassault/?svr=web மூலம்: http://www.wcsap.org/bystander-interventionஆண்மையை மீள்வரையறுத்தல்

ஆரோக்கியமற்றதும், பாதுகாப்பற்றதுமான உறவுகளை உருவாக்குதில் “காரணமாக எடுக்க வேண்டாம்" போன்ற மனிதத்தன்மை பற்றிய செய்திகள் வகிபங்கொன்றை ஆற்றுகின்றதா என்பதைக் கரிசனைக்கெடுங்கள். எவ்வகையான மனிதனாக வருவதற்கு நீங்கள் விரும்புகின்றீர்கள் எனத் தெரிவுசெய்யுங்கள். திட்டமான பாத்திரமேற்று நடிப்பவராக இருங்கள்.

சிறந்த தொடர்பாளராக இருங்கள்

பால்நிலைச் சூழ்நிலைகளில் சிறந்த தொடர்பாடல் மற்றைய நபருக்கும் செவிமடுத்தல், ஆசைகளைத் தெளிவாகக் குறிப்பிடுதல், சூழ்நிலையொன்று தெளிவாக இல்லாத போது கேட்டல் - இவை உறவுகளைப் பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் செய்யும். ஆம் என்று ஆர்வத்துடன் கூறுவதற்கான இடைவெளியொன்றை உருவாக்குங்கள்.

இணக்கத்திற்கான தகுதியைப் புரிந்துகொள்ளுங்கள்

யாரேனும் ஒருவருடன் பாலியல்ரீதியாக இருக்க அவர்கள் விரும்புகின்றார்களா என்பதைத் தீர்மானிப்பதற்கான மக்களின் தகுதியை போதைப்பொருளும், மதுபானமும் பாதிக்க முடியும். நபர் ஒருவர் “உண்மையிலேயே அதிலிருந்து வெளியேறி”, இணக்கத்தை வழங்க முடியாவிட்டால், நீங்கள் இருவரும் ஆர்வத்துடன் ஆம் என்று கூறும் வரை காத்திருங்கள்.

பெண் ஒருவரின் மனவுணர்வைப் பெறுங்கள்

அவர்களது நாளாந்த வாழ்க்கையை பால்நிலை அடிப்படையிலான வன்முறை எவ்வாறு பாதிக்கின்றது என பெண்களைக் கேளுங்கள். பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் தாக்கத்தைப் பற்றியும், அதை எவ்வாறு நிறுத்த முடியும் என்பது பற்றியும் அவர்களிடம் இருந்து செவிமடுப்பதுடன், அறிந்து கொள்ளுங்கள். உங்கள் தாய், சகோதரி அல்லது மகள் என்றவாறு உங்களுக்கு நெருக்கமாகவுள்ள பெண் ஒருவரை நினைத்துப் பார்த்து, பாதிக்கப்பட்டவரின் இடத்தில் அவரை வைத்துப் பாருங்கள்.

ஆண்களிடம் கேளுங்கள்

பெண்களுக்கு யாரேனும் ஒருவர் மரியாதையளிப்பதில்லை என்பதையும், அவர்களது வாழ்க்கையில் ஒரு பெண் அல்லது பெண் பிள்ளை பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உட்பட்டால் அவர்கள் எவ்வாறு உணர்வார்கள் என்பதையும் காணும் போது அவர்கள் எவ்வாறு உணர்வார்கள் என ஆண்களிடம் கேளுங்கள். ஆண்களின் வாழ்க்கையில் பாலியல் வன்முறையை உணரவைக்கின்ற வழிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

பாலியல் வன்முறை ‘குளிர்ச்சியானது’ அல்ல

ஆண்மையையும், உறவுகளையும் பற்றிய செய்திகளை அறிவிக்கின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினாலும், சங்கீதத்தினாலும், சஞ்சிகைகளினாலும், ‘வீடியோ’ விளையாட்டுக்களினாலும், திரைப்படப் பாடல்களினாலும் நாம் நாளாந்தம் சூழப்பட்டுள்ளோம். பிரசித்தமான கலாசாரத்தில் உள்ள பிரதிமைகள் உங்கள் நடத்தையைத் தூண்டுவதை அனுமதிக்க வேண்டாம்.

சொற்களைக் கவனமாகத் தெரிவுசெய்யுங்கள்

நீங்கள் பெண்களைச் சிறுமைப்படுத்துவதற்காக சொற்களைப் பயன்படுத்தும் போது, அவர்கள் முழுமையான மனிதப்பிறவியை விட குறைந்தவர்கள் என்ற நம்பிக்கைக்கு நீங்கள் ஆதரவளிக்கின்றீர்கள். தாழ்ந்தநிலையில் பெண்கள் காணப்படும் போது, அவர்களின் சேமநலனை உதாசீனம் செய்வது இலகுவானதாகும். பெண்களுக்கு மரியாதையளிக்கும் மொழியைத் தெரிவுசெய்யுங்கள்.

வெளிப்படையாகப் பேசுங்கள்

பெண்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுவதும், வன்முறையின் காலாசாரமொன்றை மேம்படுத்துவதுமான மனப்பாங்குகளை நீங்கள் செவிமடுப்பதுடன், நடத்தைகளைப் பார்க்கின்றீர்கள். பெண்களை இழிவுபடுத்தும் பகிடியொன்றை உங்கள் நண்பர் கூறும் போது, அது பகிடியாக விளங்கவில்லை எனக் கூறுங்கள். உங்கள் கருத்தைப் பயன்படுத்துங்கள்.

சம்பந்தப்படுங்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்காக பணியாற்றுகின்ற குழுவொன்றில் இணைந்து கொள்ளுங்கள் அல்லது அத்தகையதொரு குழு இருக்காவிட்டால், உங்கள் சொந்தத்தில் ஒன்றை ஆரம்பியுங்கள். வித்தியாசமொன்றைச் செய்யுங்கள்.

உங்கள் பலத்தைக் காட்டுங்கள்

யாரேனும் ஒருவருடன் அவரது விருப்பத்திற்கு எதிராக ஒரு போதுமே பாலியலைக் கொண்டிருக்க வேண்டாம். ஆண் ஒருவராக இருப்பதற்கான வாக்குறுதியொன்றை எடுங்கள். உங்கள் பலம் காயப்படுத்துவதற்கு அல்ல, மரியாதையளிப்பதற்கு பயன்படுத்தப்படும்.