பெண்களுக்கு எதிரான வன்முறை என்றால் என்ன?

பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறையானது அவர்களது மனித உரிமைகளின் பாரதூரமான மீறலொன்றாகும். இது உடல்ரீதியானதும், பாலியல்ரீதியானதும், உளவியல்ரீதியானதுமான கெடுதல் அல்லது வன்முறையின் பயமுறுத்தல், பலாத்காரம் அல்லது சுதந்திரத்தைப் பறித்துக்கொள்ளல் ஆகியனவற்றை உள்ளடக்குவதுடன், பொது அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் இடம்பெறவும் முடியும். பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறை ஏதாவது தனித்த நாட்டுக்கு அல்லது பிராந்தியத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதுடன், பலதரப்பட்ட சமூக-அரசியல், பொருளாதார, கலாசார, சமய, பழங்குடி மற்றும் இனத்துவ வழக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக பெண்களும், பெண்பிள்ளைகளும் வேறுபட்ட விதத்தில் அனேகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.

பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி மேலும் வாசியுங்கள்

பால்நிலை-அடிப்படையிலான வன்முறை என்றால் என்ன?

பிறிதொரு அடையாளத்துடன், ஒரு பெண்ணாக, ஆணாக அல்லது நபராக இருக்கும் ‘பால்நிலையிலான’ அடையாளத்திற்கு தொடர்பினைக் கொண்டுள்ள வன்முறையின் குறிப்பான வகையை பால்நிலை-அடிப்படையிலான வன்முறை விபரிக்கின்றது. பால்நிலை-அடிப்படையிலான வன்முறை என்ற பதத்தின் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ளுமுகமாக, பால்நிலை என்ற பதத்தின் அர்த்தத்தை முதலில் புரிந்துகொள்வது எமக்கு அவசியமாகும்.

பால்நிலை-அடிப்படையிலான வன்முறை பற்றி மேலும் வாசியுங்கள்வீட்டு வன்முறை

வீட்டு அதிகார எல்லையில் இழைக்கப்படுகின்ற வன்முறையே வீட்டு வன்முறையாகும். இது பெண்களையே இலக்குபடுத்துகின்றது. அந்த அதிகார எல்லையினுள் அவரது வகிபங்கு அல்லது வீட்டு அதிகார எல்லையினுள் பெண்கள் மீது நேரடியாகவும், மறுதலையாகவும் தாக்குவதை உத்தேசமாகக் கொண்டுள்ள வன்முறை ஆகியனவே இதற்கான காரணமாகும்.

வீட்டு வன்முறை பற்றி மேலும் வாசியுங்கள்


பாலியல் தொந்தரவு

தாக்குதலை, குற்றவியல் அதிகாரத்தை அல்லது சொற்களை அல்லது செயற்பாடுகளைப் பயன்படுத்தி பாலியல்தன்மையொன்றின் வரவேற்கப்படாத செயற்பாடொன்றே பாலியல் தொந்தரவு என்பதுடன், இது தொந்தரவு செய்யப்படும் நபருக்கு தொல்லையையும், மனவலியையும் விளைவிக்கின்றது. பெறுனருக்கு சட்டமானது வரவேற்கத்தக்கதல்ல, இழிவுபடுத்துகின்றது, வெறுக்கத்தக்கது, அருவருக்கத்தக்கது அத்துடன் விலக்கிவைக்கின்றது என்ற போதிலும், அதைப் பாராட்டுதலாக, தீங்கற்றதாக, கேலியானதாக ‘வழமையானதாக’ அத்துடன் புகழ்ச்சியளிப்பதாகக் கூட குற்றமிழைப்பவர் நோக்கக்கூடும். இருந்த போதிலும், பாலியல் தொந்தரவு குறித்த சட்டம் வரவேற்கத்தக்கதே. தனிப்பட்ட அல்லது பொதுவான வாழ்க்கையில், குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இடையில் அல்லது வேலைத்தலத்தில், பொது இடங்களில் அத்துடன் போக்குவரத்தில் பாலியல் தொந்தரவு இடம்பெற முடியும். ஆண்களும், பெண்களும் குற்றமிழைப்பவர்களாக இருக்கலாம்.

பாலியல் தொந்தரவு பற்றி மேலும் வாசியுங்கள்பாலியல்வல்லுறவு

பாலியல்வல்லுறவானது ஒரு நிர்ப்பந்திக்கப்பட்ட, வரவேற்கப்படாத பாலியல் உடலுறவாகும். இது பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிராக இழைக்கப்படும் பாரதூரமானதும், மிருகத்தனமானதுமான ஒரு செயற்பாடாகும். இது உடல்ரீதியிலானதும், உளவியல்ரீதியிலானதும், உணர்வுரீதியிலானதும், பொருளாதாரரீதியிலானதுமான பின்விளைவினைக் கொண்டிருக்கின்றது. ஒரு பெண்ணின் உடலுக்கும், நேர்மைக்கும், தனிப்பட்ட பாதுகாப்புக்கும், அவரது சுய மரியாதைக்கும் கௌரவத்திற்கும் வன்முறையின் மட்டத்தின் காரணமாக அன்றி, அனுபவத்தைச் சுற்றியுள்ள சமூகக் களங்கத்தின் காரணமாக அவர் அடைகின்ற அனுபவம் மன அமைதியைக் குலைக்கின்றது.

பாலியல்வல்லுறவு பற்றி மேலும் வாசியுங்கள்


முறை தவறிய உடலுறவு

சட்டத்தினால் வரையறுக்கப்பட்டவாறு இரத்தத்தினால் அல்லது திருமணத்தினால் நெருக்கமான உறவினைக் கொண்ட நபர்களுக்கு இடையிலான பாலியல் உடலுறவை முறை தவறிய உடலுறவு குறிப்பிடுகின்றது. சட்டபூர்வ சுவீகாரத்தின் தருணங்களிலும் முறை தவறிய உடலுறவு பிரயோகிக்கப்படுகின்றது. மேலே விபரிக்கப்பட்டுள்ளவாறு ‘குடும்ப’ உறவே முக்கியமானதாகும்.

முறை தவறிய உடலுறவு பற்றி மேலும் வாசியுங்கள்


பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம்

இலங்கையில் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்தின் குற்றத்தினால் வரையறுக்கப்பட்டவாறானதும், ஏற்கனவே விபரிக்கப்பட்டுள்ளவாறு பாலியல்வல்லுறவின் குற்றத்தினால் உள்ளடக்கப்படாததுமான சகல பாலியல் செயற்பாடுகளையும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் உள்ளடக்குகின்றது. பாலியலைத் திருப்திப்படுத்துவதற்காக பிறப்புறுப்புக்களின் அல்லது மனித உடலின் பாகங்களின் உபயோகத்தின் ஊடாக மட்டும் அன்றி, ஆனால் ஏதாவது கருவியின் ஊடாகவும் அத்துடன் இ;ன்னொரு நபரின் உடலின் ஏதாவது துவாரத்தின் அல்லது உடலின் மீதும் இடம்பெறுகின்ற தருணங்களைப் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் உள்ளடக்குகின்றது.

பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் பற்றி மேலும் வாசியுங்கள்


ஆட்கடத்தல்

ஆட்களைச் சுரண்டும் நோக்கத்திற்காக சக்தியையும், பலாத்காரத்தையும், மோசடியையும், வஞ்சகத்தையும் அல்லது வேறு வழிவகைகளையும் பயன்படுத்துவதன் மூலம், ஆள் ஒருவரை சேர்த்துக் கொள்கின்ற, ஏற்றி இறக்குகின்ற, இடமாற்றுகின்ற, அடைக்கலம் வழங்குகின்ற அல்லது வரவேற்கின்ற செயற்பாடொன்றை சர்வதேசச் சட்டத்தின் கீழான மனித ஆட்கடத்தல் சம்பந்தப்படுத்துகின்றது.

ஆட்கடத்தல் பற்றி மேலும் வாசியுங்கள்

வன்முறை தொடர்பிலான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தொடர்பான வன்முறை போன்ற மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் (சமூக வலைப்பின்னல் தளங்களில், மின்னஞ்சல்) புதிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை மூலம் நடந்திருந்த வன்முறை குறிக்கிறது. இது டிஜிட்டல் அல்லது இணைய வன்முறை அறியப்படுகிறது.


டிஜிட்டல் வன்முறை பற்றி மேலும் வாசியுங்கள்