பெற்றோர், பிள்ளைகள், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், வாழ்க்கைத் துணைகள், தாத்தா, பாட்டிமார், மாமாக்கள், மாமிக்கள், திருமணத்தின் மூலமான உறவினர்கள் அல்லது ஒருவருக்குகொருவருக்கான குடும்பரீதியிலான உறவுகளைச் சேர்ந்த தனிப்பட்டவர்கள் ஆகியோருக்கு இடையில் இடம்பெறுகின்ற வன்முறையை வீட்டு வன்முறை உள்ளடக்குகின்றது. குறிப்பாக அந்நியோன்னியமான உறவொன்றில் வாழ்க்கைத்துணைகளுக்கு அல்லது துணைவர்களுக்கு இடையில் இடம்பெறுகின்ற வன்முறையை அந்நியோன்ய துணைவரிலான வன்முறை குறிப்பிடுவதுடன், இது பாதிக்கப்பட்ட- தப்பிப்பிழைக்கின்றவருடன் இணைந்துவாழ்கின்ற முன்னாள் துணைவர்களையும் உள்ளடக்குகின்றது. வீட்டு வன்முறையை இழைப்பவர்களாக பெண்களும் விளங்கும் அதேவேளை, மிகவும் பெரும்பான்மையிலானோர் ஆண்கள் என்பதுடன், பெண்களையும், பெண்பிள்ளைகளையும் நோக்கி அவர்கள் மூர்க்கத்தனமாகச் செயற்படுகின்றார்கள் என ஆராய்ச்சி காட்டுகின்றது.வீட்டு வன்முறையை அனுபவிக்கும் பெண்களுக்கு நண்பர்களும், குடும்பத்தினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதுடன், குற்றத்தை இழைத்தவர் குற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கும், இத்தகைய வன்முறை மீண்டும் நிகழ்வதிலிருந்து நிறுத்துவதையும், தடுப்பதையும் இட்டு அவசியமான நடவடிக்கையை எடுப்பதற்கும் இணங்கினால் அன்றி, வாழ்க்கைத் துணையுடன் அல்லது துணைவருடன் தொடர்ந்தும் இருப்பதற்கு அப் பெண்ணை ஒரு போதுமே நிர்ப்பந்திக்கக்கூடாது. மூர்க்கத்தனமான ஒரு நண்பருடன் அல்லது வாழ்க்கைத்துணையுடன் தொடர்ந்துமிருப்பதற்கு பெண் ஒருவரை நிர்ப்பந்திக்கும் போது, அது உடல்ரீதியிலான காயத்தினதும், உளவியல்ரீதியிலான சுகவீனத்தினதும் ஆழமான அபாயத்திற்கு அவரது உயிரை உட்படுத்தக்கூடும்.பெண்களின் உடல்ரீதியானதும், உளவியல்ரீதியிலானதுமான சேமநலன் மீது கடுமையான விளைவுகளை வீட்டு வன்முறை கொண்டிருக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சி காட்டியுள்ளது. வீட்டில் வன்முறையை நேரில் காண்பதனால், சில வேளைகளில் பிள்ளைகள் தனிமைப்படுகின்ற நிலைக்குள்ளாகின்றனர் அல்லது சகவயதினருக்கும், சமூகத்திற்கும் எதிராக மூர்க்கத்தனமாக செயல்படுகின்றார்கள். எதிர்காலத்தில், சிலர் தமது சொந்த குடும்பத்தினருக்கு எதிராகவும் மூர்க்கத்தனமாக செயல்படுகின்றார்கள். எனவே, அமைதியாக வீட்டு வன்முறைக்கு கஷ்டப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. வன்முறையின் முதலாவது தருணத்தைச் சகித்துக்கொள்கின்ற பெண்கள், அனேகமாக அதை எதிர்த்து நிற்காவிட்டால், மேலும் வன்முறையை அனுபவிப்பதற்கு ஊறுபடத்தக்கவர்களாக விளங்குவார்கள். ‘முறிந்த குடும்பம்;;’ ஒன்றில் ஏதாவது குடும்பத்தில் வீட்டு வன்முறைக்கு ஒரு பெண் அல்லது பிள்ளை பாதிக்கப்பட்டால், அந்தச் சம்பவம் அறிவிக்கப்பட வேண்டுமென்பதுடன், வன்முறையைத் தீர்த்துவைப்பதில் சகல ஏனைய முயற்சிகளும் சரிவராவிட்டால், அது பிரிவை அர்த்தம் கொண்டாலும் கூட, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போதைப்பொருட்களின் அல்லது மதுபானத்தின் உபயோகத்தின் மற்றும் மனவழுத்தத்தின் காரணமாக வீட்டு வன்முறை இடம்பெறுகின்றது என்பது ஒரு தப்பெண்ணமேயாகும். பாதிக்கப்பட்டவரை- தப்பிப்பிழைப்பவரை நோக்கி மூர்க்கத்தனமாகச் செயற்படுவதற்கு துஷ்பிரயோகிப்பவர் அல்லது குற்றத்தை இழைப்பவர் தெரிவுசெய்வதன் காரணமாக, வீட்டு வன்முறை இடம்பெறுகி;ன்றது என்பதை அங்கீகரிப்பது முக்கியமானதாகும். ஒரு போதுமே தாக்கப்படுகின்ற பெண்ணின் தவறினால் வீட்டு வன்முறை இடம்பெறுவதில்லை. வீட்டு வன்முறை ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதுடன், சில தருணங்களில் நியாயத்திலானது என பெண்கள் நம்புவதன் காரணத்தினால் சட்டங்களையும், நடைமுறைகளையும் பயன்படுத்துவதற்கு அவர்கள் தயங்குகின்றார்கள் என ஆராய்ச்சி காட்டுகின்றது. எனினும், வீட்டு வன்முறையை சட்டம் தண்டிக்கிறது. ஏனெனில் அது சட்டவிரோதமானது என்பதுடன் துஷ்பிரயோகத்திலான நடத்தையிலானதுமாகும். அது சமூகரீதியில் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அத்துடன் அது பெண்களின் மனித உரிமையின் மீறலொன்றுமாகும். நெருக்கமான உறவொன்றில், தனிப்பட்டவர்களுக்கு இடையில் வீட்டில் அல்லது வெளியில் இடம்பெறுகின்ற வன்முறையாக வீட்டு வன்முறையை இலங்கையில் 2005இன் 34ஆம் இலக்க வீட்டு வன்முறையைத் தடுத்தல் சட்டம் குறித்துரைக்கின்றது. இது உடல்ரீதியிலான, பாலியல் அல்லது உணர்வுப்பூர்வமான துஷ்பிரயோகத்தின் வடிவமைப்பாக விளங்க முடியும்.

 

கலாசாரம்

பால்நிலை குறிப்பான சமுதாயத்திற்குரிய தாக்குதல்
பொருத்தமான பால் வகிபங்குகளின் கலாசார வரைவிலக்கணங்கள்

உறவுகளினுள் வகிபங்குகளின் எதிர்பார்ப்புக்கள்

ஆண்களின் இயல்பான ஆதிக்கநிலையில் நம்பிக்கை

பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் மேலாக ஆண்களுக்கு ஆதனத்திலான உரிமையை வழங்கும் பெறுமதிகள்

தனிப்பட்ட அதிகார ஆதிக்கத்தினதும், ஆணின் கட்டுப்பாட்டினதும் கீழ் என்றவாறு குடும்பத்தின் கருத்து

சீதனம் போன்றவாறு திருமணத்தின் சம்பிரதாயங்கள்

மோதலைத் தீர்த்துக்கொள்வதற்கான வழிவகைகளில் ஒன்றாக வன்முறையை ஏற்றுக்கொள்ளுதல்

ஊடகத்தினால் பிரச்சனைகளுக்கு போதிய விளக்கங்கள் இன்மை

பொருளாதாரம்

ஆண்கள் மீது பெண்கள் பொருளாதாரரீதியில் தங்கியிருத்தல்/பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கு ஆண்கள் விரோதத்தன்மையை வெளிப்படுத்தல்

பணத்திற்கும், கடனுக்குமான மட்டுப்படுத்தப்பட்ட அடைதல்

மரபுரிமை, ஆதன உரிமைகள், சமுதாயத்திற்குரிய காணியின் உபயோகம், மற்றும் விவாகரத்தின் அல்லது விதவையான பின்னர் தாபரிப்பு ஆகியன தொடர்பில் பாகுபாட்டிலான சட்டங்கள்

முறைமையானதும், முறைமைசாராததுமான துறைகளில் தொழிலுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அடைதல்

பெண்களுக்கு கல்விக்கும், பயிற்சிக்குமான மட்டுப்படுத்தப்பட்ட அடைதல்

சட்டம்

பெண்களுக்கு எதிராக பாரபட்சம். இதன் விளைவாக எழுதப்பட்ட சட்டத்திலும் அத்துடன்/அல்லது விசாரணை தொடர்பிலான நடைமுறைகளிலும் பெண்களின் சட்ட அந்தஸ்தில் குறைப்பு. உதாரணம்: விவாகரத்து, பிள்ளைகளின் பாதுகாவல், தாபரிப்பு மற்றும் மரபுரிமை ஆகியன தொடர்பிலான சட்டங்கள்
சட்ட வினைப்படுத்தலில் பொலிசினாலும், நீதித்துறையினாலும் பெண்களையும், பெண்பிள்ளைகளையும் கூருணர்வற்றதாகக் கருதுதல்

பாலியல்வல்லுறவினதும், வீட்டு வன்முறையினதும், பாலியல் துஷ்;பிரயோகத்தினதும் சட்ட வரைவிலக்கணங்கள்

பெண்கள் மத்தியில் சட்டம் குறித்த பாண்டியத்தின் குறைந்த மட்டங்கள்

அரசியல்

வீட்டு வன்முறை பாரதூரமாக எடுக்கப்படுவதில்லை

குடும்பம் தனிப்பட்டதாகவும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இருப்பதாகவும் நிலவுகின்ற கருத்துக்கள்

இதுவரையிலும் உள்ள நிலைக்கு/சமயச் சட்டங்களுக்கு சவால் விடுக்கப்படும் அபாயம்

அரசியல் சக்தியில் பெண்களின் மட்டுப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்பு

ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் முறைமையிலும், சட்ட மற்றும் மருத்துவத் தொழில்களிலும் பெண்களின் மட்டுப்படுத்தப்பட்ட பங்கெடுப்பு

 

விடயம்

தனிப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

சோமாவதியின் மூத்த மகன், திருமணம் செய்த பின்னரும் தனது தாயுடன் வாழ்ந்து வந்தார். சோமாவதிக்கும், அவரது மருமகள் (மகனின் மனைவி) குசுமாவுக்கும் இடையிலான மனப்பூர்வமான உறவுகள் குறுகிய காலமொன்றுக்கே நீடித்தது. சச்சரவு செய்வதையும், சோமாவதியைக் கொடுமைப்படுத்துவதையும் குசுமா ஆரம்பித்தார். தாய்க்கும், மகனுக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர அவநம்பிக்கையைத் தோற்றுவித்தது. தனது சொந்த வீட்டிலேயே சோமாவதி தொந்தரவு செய்யப்பட்டார். வாய்ச்சண்டையொன்றின் பின்னர் ஓர் இரவு சத்தமிட்டபடியே வீதிக்கு ஓடிய குசுமா, வீட்டை விட்டுச் சென்றார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டது.

 

 

வீட்டு வன்முறையை முறையிடுதல்

நீங்கள் எப்பொழுதுமே நேரடியாக உதவியை நாட முடியும். ஆனால், உதவியை நாடுவதற்கு நீங்கள் கலவரமடைந்தால், உங்களுக்கு உதவியளிப்பதற்காக ஒரு நெருங்கிய நண்பரை அல்லது குடும்ப நண்பரை அடையாளங் காண்பதற்கு எப்பொழுதுமே முயலுங்கள்.

அங்கீகரிக்கப்பட்ட தாபனமொன்றிலிருந்து ஆற்றுப்படுத்துனர் ஒருவருடன் பேசுங்கள் (ஆற்றுப்படுத்தலை வழங்கும் தாபனங்களுக்கான தொடர்பு)
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் (பொலிசுக்கு தொடர்பு)
பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்தவர் 18 வயதுக்கு குறைந்தவர் என்றால், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (NCPAக்கு தொடர்பு) சம்பவத்தை அறிவியுங்கள்.
சட்ட நடவடிக்கையை எடுங்கள் (சட்டங்களுக்கும், கொள்கைகளுக்குமான தொடர்பு)
நண்பர் ஒருவருடன், குடும்பம் ஒன்றுடன் அல்லது வாழிடத்தை வழங்கும் தாபனமொன்றில் நீங்கள் புகலிடத்தை நாடுங்கள் (புகலிடத்தை வழங்கும் தாபனங்களுக்கான தொடர்பு)

 

 சேவை வழங்குநர்கள் சென்று. சட்டங்கள் சென்று.


வீட்டு வன்முறைக்கு எதிரான சட்டங்கள்

 

வீட்டு வன்முறையை 2005இன் 34ஆம் இலக்க வீட்டு வன்முறையைத் தடுத்தல் சட்டம் கவனத்திற்கெடுப்பதுடன், அது சிவில் தீர்வொன்றையும் வழங்குகின்றது.
இடைக்கால பாதுகாப்புக் கட்டளை அத்துடன்/அல்லது பாதுகாப்புக் கட்டளை என்ற வழியினால் பாதிக்கப்பட்ட நபருக்கு (வீட்டு வன்முறையினால் பாதிக்கப்பட்ட நபர்) பாதுகாப்பை சட்டம் வழங்குகின்றது.
வீட்டு வன்முறையினால் பாதிக்கப்பட்ட நபர் வெறுமனே சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவராக அவரைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக “பாதிக்கப்பட்ட நபர்” ஒருவராக குறிப்பிடப்படுகின்றார்.
காயத்தையும், கடுங்காயத்தையும் கொண்ட குற்றத்தினதும் அத்துடன் மனித உடலுக்கு எதிரான குற்றங்களினதும் கீழ் தண்டனைச் சட்டக்கோவையில் (1995இன் இல.22 திருத்தப்பட்ட சட்டம்) பொதுவான குற்றவியல் குற்றமொன்றாகவும் வீட்டு வன்முறை விளங்குகின்றது.


வீட்டு வன்முறையின் குற்றமிழைப்பவர்கள் பின்வருவோராக விளங்கலாம்:


ஒரு வாழ்க்கைத்துணை
ஒரு முன்னாள் வாழ்க்கைத்துணை
ஓர் இணைவாழ்விலான துணைவர்
ஒரு பெற்றோர்
வாழ்க்கைத்துணை அல்லது முன்னாள் வாழ்க்கைத்துணை அல்லது இணை வாழ்விலான துணைவர்
தந்தை, தாய், தாத்தா, பாட்டி, சித்தப்பா (step-father) அல்லது சித்தி (step-mother)
மகன், மகள், பேரன், அல்லது பேத்தி, பெறாமகன் (step-son) பெறாமகள் (step-daughter)
சகோதரன், சகோதரி, ஒன்றுவிட்ட சகோதரன், ஒன்றுவிட்ட சகோதரி, உடன்பிறவா சகோதரன் (step-brother) உடன்பிறவா சகோதரி (step-sister)
பெற்றோரின் சகோதரன் அல்லது சகோதரி
சகோதரரின் அல்லது சகோதரியின் பிள்ளை
பெற்றோரின் சகோதரரின் அல்லது சகோதரியின் பிள்ளை

மருமகன் (son in law) அல்லது மருமகள் (daughter in law) துஷ்பிரயோகத்தை இழைப்பவர்களாக இருக்கலாம் என்ற போதிலும், அவர்கள் சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதே சட்டத்தில் உள்ள ஓர் ஓட்டையாகும். எனினும், குற்றவியல் சட்டக்கோவையில் உள்ள ஏற்பாடுகளுக்கு ஏற்ப அத்தகைய நபர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

 

வீட்டு வன்முறையைத் தடுத்தல் சட்டத்தின் கீழ் தீர்வு: இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவொன்றுக்கு அல்லது பாதுகாப்பு உத்தரவொன்றுக்கு யார் விண்ணப்பிக்கலாம்.

 

வீட்டு வன்முறையினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், நீதிமன்றிலிருந்து இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவு ஒன்றை அல்லது பாதுகாப்பு உத்தரவு ஒன்றைப் பெறலாம். மனக்குறைவிலான நபருக்கான அடைதலைக் கொண்டிருப்பதிலிருந்து துஷ்பிரயோகித்தவரை அல்லது குற்றமிழைத்தவரை இடைக்கால பாதுகாப்பு உத்தரவு அல்லது பாதுகாப்பு உத்தரவு தடுக்கின்றது.


பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் சார்பாக விண்ணப்பமொன்றைப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்யலாம்.


18 வயதுக்கு குறைந்த சிறுவர் ஒருவரின் விடயத்தில்: பெற்றோர் அல்லது பாதுகாவலர், சிறுவரை வளர்க்கும் நபர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆகியோர் விண்ணப்பமொன்றைச் செய்யலாம்.

பாதுகாப்பு உத்தரவொன்றைப் பெறுவதன் நடைமுறை என்ன?

நீதிமன்றத்திற்கு விண்ணப்பமொன்று செய்யப்பட வேண்டும்

வயது வந்தவர் ஒருவரின் விடயத்தில் (18 வயதுக்கு மேல்), நீதிமன்றத்திற்கு நேரடியாக அல்லது அவரது சார்பில் விண்ணப்பமொன்றைச் செய்யும் வழக்கறிஞர், பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக
பாதிக்கப்பட்டவர் வாழ்கின்ற பகுதியில் அல்லது வன்முறைச் சம்பவம் இடம்பெற்ற அல்லது அனேகமாக இடம்பெறக்கூடிய பகுதியில் நீதிமன்றம் இருக்க வேண்டும்.
விண்ணப்பமொன்றைச் செய்வதற்கு சட்ட உதவி ஆணைக்குழுவிலிருந்து அல்லது மனித உரிமைகள் தாபனங்களிலிருந்து உதவியை பாதிக்கப்பட்ட நபர் கோரலாம் (தாபனத்திற்கான தொடர்பு: நீதிமன்றத்திற்கான விண்ணப்பத்தின் தளக்கோலம்). சேவை வழங்குநர்கள்
நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன் பொலிஸ் நிலையமொன்றில் முறைப்பாடொன்றைச் செய்வது கட்டாயமில்லை.
மனக்குறை கொண்டவர் ஒரு சிறுவர் என்றால் (18 வயதுக்கு கீழ்) ஒரு பெற்றோர், ஒரு பாதுகாவலர், அல்லது சிறுவரை வளர்க்கும் நபர், அல்லது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சிறுவரின் சார்பாக நீதிமன்றத்தில் விண்ணப்பமொன்றைச் செய்யலாம்.
வன்முறையின் மற்றும் துஷ்பிரயோகத்தின் செயற்பாடுகளையிட்டு அறிந்து வைத்துள்ள யாரேனும் ஒருவரிடமிருந்து விண்ணப்பத்திற்கான சத்தியக்கடதாசியை இணையுங்கள் (பகிரங்க நொத்தாரிசு போன்ற சத்தியக்கடதாசியை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட யாரேனும் ஒருவரின் முன்னிலையில் எழுதப்பட்டு, சத்தியம் செய்யப்பட்ட கூற்றொன்றே சத்தியக்கடதாசியாகும். சத்தியக்கடதாசியொன்றில் கூற்றொன்றை செய்யும் நபர் அல்லது ஆட்கள் சத்தியக்கடதாசியில் குறித்துரைக்கப்பட்டுள்ள உண்மைகள் தமது சிறந்த அறிவுக்கு சரியானவை என உறுதிமொழியளிக்க வேண்டும்).

 

விண்ணப்பம்

 

..................... நீதிமன்றத்தில்

.......... ஐச் சேர்ந்த ...... A.B (பாதிக்கப்பட்ட நபரின் பெயர், விவரணம், மற்றும் விலாசம்) அத்துடன் ஏதாவது பிரதிநிதித்துவ ஆற்றலளவில் அவர் வழக்குத் தொடுக்கிறார் என்றால், ஆற்றலளவைக் குறிப்பிடவும். உதாரணம்: தனது பாதுகாவலரின் அல்லது அடுத்துள்ள நண்பரின் மூலம் ஆஜராகும் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுபராயத்திலான நபர் என்றால், ............. இன் (பாதிக்கப்பட்ட நபர்) “அடுத்துள்ள நண்பரான.......... இன் …… C.D.இனாலான ஒரு சிறுபராயத்தவர்" எனக் கூறவும்.

எதிர்

............. ஐச் சேர்ந்த Y.Z. (எதிர்வாதியின் பெயர், விவரணம் மற்றும் விலாசம்)

............... எதிர்வாதி

20...... இன் நாள்...........

மேலே பெயரிடப்பட்ட பாதிக்கப்பட்ட நபரின் விண்ணப்பம் (அத்துடன் வழக்கு அவ்வாறானதென்றால், அவருக்காக பதிவுசெய்யப்பட்ட சட்டத்தரணி C.H. ஆஜராவதாக சேர்த்துக்கொள்ளவும்) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

(இங்கு வழக்கின் சூழ்நிலைகளைக் குறித்துரைக்கலாம்)

அந்தக் காரணத்தினால், பாதிக்கப்பட்ட நபர் (அல்லது பாதிக்கப்பட்ட நபர்கள்)............ 20...... தினம்.............. இலிருந்து செயற்படத்தக்கதாக எதிர்வாதிக்கு எதிராக பாதுகாப்பு உத்தரவொன்றை வேண்டிக் கொள்கிறார்.

.........................................................................

விண்ணப்பதாரியின் கையொப்பம்

 

இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவொன்றை வழங்குதல்

விண்ணப்பத்தையிட்டு இறுதியான விசாரணையின் முன் உத்தரவொன்றைச் செய்வதற்கு அவசியமானது என நீதவான் கருதும் போது, அவரினால் இது வழங்கப்படும்.

பெண்ணின்/சிறுவரின் உறுதிமொழி மீதான அடிப்படையில், நீதவான் திருப்தியடைந்தால், இடைக்கால பாதுகாப்பு உத்தரவொன்று வழங்கப்பட்டு, விண்ணப்பம் செய்யப்பட்ட பின் 14 நாட்களினுள் விசாரணையொன்று நடத்தப்படும்.

மேலும், வன்முறையைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட நபரின் தரப்பின் பாதுகாப்புக்குமான அவசரமான தேவையை நீதிமன்றம் கரிசனைக்கு எடுக்கும்.

வீட்டு வன்முறையின் விண்ணப்பத்திற்கு ஆதரவளிப்பதற்காக சான்றாக முன்னைய பொலிஸ் முறைப்பாடுகளையும்/பதிவுகளையும், நேரடி சாட்சிகளின் உறுதிமொழிகளையும் நீதிமன்றம் கோரும்.

இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவொன்று அவசியமில்லை என நீதவான் தீர்மானித்தால், விண்ணப்பம் செய்யப்பட்ட பின் 14 நாட்களினுள் விசாரணையொன்றை நடத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

குறிப்பிடப்பட்டுள்ள திகதியின்று குற்றமிழைத்தவருக்கு எதிராக ஏன் பாதுகாப்பு உத்தரவொன்று வழங்கப்படக்கூடாது என்பது மீதான அவரது நிலையை விளக்குமாறும், அவரது உண்மையான விடயங்களை முன்வைக்குமாறும் அறிவித்தலொன்றை நீதிமன்றம் வழங்கும்.

 

இடைக்கால பாதுகாப்பு உத்தரவொன்று என்றால் என்ன?

வன்முறையை விளைவித்த நபரை மேலும் ஏதாவது வன்முறையை இழைப்பதிலிருந்து அல்லது விளைவிப்பதிலிருந்து இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவொன்று தடுக்கின்றது.
இது தற்காலிகமானது
பாதுகாப்பு உத்தரவொன்று வழங்கப்படும் வரை அல்லது இடைக்கால உத்தரவொன்று அகற்றப்படும் வரை அது தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவும், பாதுகாப்பு உத்தரவும் பின்வருவனவற்றிலிருந்து குற்றமிழைத்தவரைத் தடைசெய்யும்:

  • வன்முறை இழைக்கப்பட்ட நபரின் வீட்டுக்குள், வேலைத்தலத்திற்குள் அத்துடன்/அல்லது பாடசாலைக்குள் பிரவேசித்தல்.
  • பங்கிடப்பட்ட வீட்டில் தங்கியிருத்தல்
  • வன்முறை இழைக்கப்பட்ட நபருடன் தொடர்புகொள்ளுதல் அல்லது அவரைப் பின்தொடர்தல்
  • வன்முறை இழைக்கப்பட்ட நபருக்கு உதவுகின்ற உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, சமூக ஊழியர்களுக்கு அல்லது மருத்துவ உத்தியோகத்தருக்கு கெடுதலை விளைவித்தல்
  • திருமண வாழ்க்கை மேற்கொள்ளப்பட்ட வீட்டை விற்றல்
வன்முறைக்கு உட்பட்டுள்ள நபரின் உடனடியான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமுகமாக ஒரு சமூக ஊழியரை, குடும்ப ஆற்றுப்படுத்துனரை, நன்னடத்தை உத்தியோகத்தரை, குடும்ப சுகாதார ஊழியரை அல்லது சிறுவர் உரிமைகள் மேம்படுத்தல் உத்தியோகத்தரை நீதிமன்றம் நியமிக்க முடியும்.


பாதுகாப்பு உத்தரவொன்று என்றால் என்ன?


விண்ணப்பம் பற்றிய விசாரணை முடிந்த பின்னர், அவ்வாறு செய்வது அவசியமானது என நீதிமன்றம் திருப்தியடைந்தால், அது பாதுகாப்பு உத்தரவொன்றை வழங்கும்.
ஏதாவது வீட்டு வன்முறைச் செயற்பாட்டினை விளைவிப்பதற்கு யாரேனும் ஒருவரைப் பாரப்படுத்துவதிலிருந்து அல்லது பெறுவதிலிருந்து குற்றமிழைத்தவரை பாதுகாப்பு உத்தரவு தடைசெய்கின்றது.
பன்னிரண்டு (12) மாதங்கள் வரை பாதுகாப்பு உத்தரவு அமுலில் தொடர்ந்துமிருக்கும். ஆனால், இரு தரப்புக்களும் அவ்வாறு செய்வதற்கு விண்ணப்பித்து, விண்ணப்பம் சுதந்திரமாகச் செய்யப்பட்டுள்ளது, சூழ்நிலை மாற்றமடைந்துள்ளது என நீதிமன்றம் திருப்தியடையும் போது, அது மாற்றப்பட அல்லது அகற்றப்பட முடியும்.

 

குற்றமிழைத்தவர் இடைக்கால/பாதுகாப்பு உத்தரவை மீறினால் உங்களால் என்ன செய்ய முடியும்?

உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும்.
உங்கள் கோரலுக்கு ஆதரவளிப்பதற்கு சாட்சிகள் இருந்தால் அது உதவியாக இருக்கும்.


இடைக்கால/பாதுகாப்பு உத்தரவு மீறப்படுவதற்கான தண்டனை என்ன?


இடைக்கால/பாதுகாப்பு உத்தரவு ஒரு ‘நீதிமன்ற உத்தரவு’ என்பதுடன், எனவே இந்த உத்தரவை குற்றமிழைத்தவர் மீறினால் அல்லது உத்தரவுக்கு கீழ்படியாவிட்டால் அது ஒரு குற்றவியல் குற்றமாகும்.
குற்றமிழைத்தவரினால் பத்தாயிரம் ரூபாவுக்கு (10,000) மிஞ்சாத அபராதம் ஒன்றைச் அத்துடன்/அல்லது ஒரு வருடத்திற்கு மீறாத சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிடலாம்.

 

பாதுகாப்பு உத்தரவு வழங்கப்பட்ட பின்னர்

வீட்டு வன்முறைக்கு உட்பட்ட நபருக்கும் அத்துடன்/அல்லது பிள்ளைகளுக்கும் தங்குவதற்கு இடமொன்று வழங்கப்படும்.
உத்தரவின் காரணமாக ஏற்பட்டுள்ள ஏதாவது கஷ்டத்தை வகைப்பொறுப்புக்கு எடுப்பதுடன், வாழிடமொன்றில் வைக்கப்படுவார் அல்லது தங்கியிருப்பதற்கு தற்காலிகமான இடமொன்று வழங்கப்படும். இது பற்றிய விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும்.
வன்முறையை இழைத்த நபர் நிதிசார் ஆதரவை வழங்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கான கடமையொன்றை அவர் கொண்டுள்ளார்.

 

வீட்டு வன்முறையைத் தடுத்தல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் உதாரணங்கள்


பின்வரும் தொகுப்புகளிலிருந்து:

2005இன் 34ஆம் இலக்க வீட்டு வன்முறையைத் தடுத்தல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தாரா விஜேதிலகவினால் ஒரு பகுப்பாய்வு – “விமன் இன் நீட்mee” (Women in Need) (2009)

“17 வருடங்களுக்கு மேலாக விண்ணப்பதாரியான மனைவி துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளார். எதிர்வாதிக்கு பாதுகாப்பு உத்தரவு வழங்கப்பட்ட பின்னர் அவர் வெளியேறிவிட்டதுடன், அதன் பின்னர் அவர் பற்றி கேள்விப்படவில்லை. மனைவியும், அவர்களது மகளும் அமைதியான வாழ்க்கையொன்றை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஒற்றுமை பேணப்படவில்லை, ஆனால் அமைதி நிலவியது" (பக்கம் 49)

“திருமணத்தின் பின் வாழ்ந்த வீட்டிலிருந்து மனைவியையும், மகளையும் துரத்தியடித்த பின்னர், அவர்கள் மனைவியின் வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த வேளை எதிர்வாதி பின்துரந்து சென்றுள்ளார். பாதுகாப்பு உத்தரவு வழங்கப்பட்டு, மனைவியின் வீட்டுக்குள் அல்லது வேலைத்தளத்திற்குள் பிரவேசிக்கக்கூடாது, அவரது நடமாடும் தொலைபேசியில் அவரை அழைக்கக்கூடாது அல்லது அவருக்கு குறுஞ் செய்திகளை அனுப்பக் கூடாது என நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதுடன், கணவரின் நடத்தையினால் அவர்களது மகள் மனவதிர்ச்சியை அடைந்திருப்பதன் காரணமாக அவரிடமிருந்து தூரவிலகி இருக்க வேண்டும் என்றும் பணிக்கப்பட்டது. அவரது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையிலிருந்து விலகியிருக்குமாறு எதிர்வாதிக்கு நீதவான் அறிவுரை வழங்கினார். தற்போது மனைவியும், மகளும் அமைதியாக வாழ்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது." (பக்கம் 50).


தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் தீர்வுகள்:


வீட்டு வன்முறையின் சகல செயற்பாடுகளும் (வயதானவர்களின் உணர்வுப்பூர்வமான துஷ்பிரயோகத்தைத் தவிர) உண்மையிலேயே தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் குற்றங்கள் என்பதுடன், ஏதாவது வேறு குற்றத்தின் ஏதாவது விடயத்தில் அவர்கள் செயற்படுவது போன்று அத்தகைய சூழ்நிலைகளிலும் பொலிஸ் செயற்பட வேண்டும்.

எனவே, பாரதூரமான உடல்ரீதியிலான அல்லது பாலியல்ரீதியிலான துஷ்பிரயோகத்தின் விடயங்களில் வைத்தியசாலைக்கு அல்லது பொலிஸ் நிலையத்திற்கு மனைவி முறையிட முடியும். காயம், கடுங்காயம், அல்லது கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றவியல் குற்றமொன்றை காயங்கள் கொண்டிருப்பதாக பொலிஸ்காரர் அல்லது வைத்தியர் திருப்தியடைந்தால், குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்தவருக்கு எதிராகப் பொலிசார் வழக்குத் தொடரலாம்.

நீதிமன்ற உத்தரவொன்றின் கீழ், கட்சிக்காரர்கள் பிரிந்திருந்தால் அன்றி (சட்டபூர்வமாகப் பிரிந்திருந்தால்) தண்டனைச் சட்டக்கோவையின் கீழ், திருமணம்சார்ந்த பாலியல்வல்லுறவு குற்றமொன்று அல்ல.