இலங்கையில் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்தின் குற்றத்தினால் வரையறுக்கப்பட்டவாறானதும், ஏற்கனவே விபரிக்கப்பட்டுள்ளவாறு பாலியல்வல்லுறவின் குற்றத்தினால் உள்ளடக்கப்படாததுமான சகல பாலியல் செயற்பாடுகளையும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் உள்ளடக்குகின்றது. பாலியலைத் திருப்திப்படுத்துவதற்காக பிறப்புறுப்புக்களின் அல்லது மனித உடலின் பாகங்களின் உபயோகத்தின் ஊடாக மட்டும் அன்றி, ஆனால் ஏதாவது கருவியின் ஊடாகவும் அத்துடன் இ;ன்னொரு நபரின் உடலின் ஏதாவது துவாரத்தின் அல்லது உடலின் மீதும் இடம்பெறுகின்ற தருணங்களைப் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் உள்ளடக்குகின்றது.

பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்தை முறையிடல்

அங்கீகாரம் பெற்ற மருத்துவ உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து விரைவிலேயே மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். ஏதாவது தலைமயிர், உடல் திரவங்கள், தசைநார்கள் மற்றும் வேறு சான்று இருந்தால், அவற்றைச் சேகரிப்பதற்கான கடமையொன்றை மருத்துவ உத்தியோகத்தர் கொண்டுள்ளார். ஏதாவது பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் இருந்தால் சட்ட மருத்துவ உத்தியோகத்தருக்கும், பொலிசுக்கும் அறிவிப்பதற்கான கடமையொன்றை மருத்துவ உத்தியோகத்தர் கொண்டுள்ளார்.
அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்யுங்கள்..
பொலிஸ் முறைப்பாடொன்றைச் செய்வதற்கு முன், பெண்கள், சிறுவர் பொலிஸ் பிரிவொன்றை (தொடர்பு) கொண்டுள்ளதா என விசாரியுங்கள் அல்லது ஆண் கான்ஸ்டபிள் ஒருவருக்குப் பதிலாக பெண் கான்ஸ்டபிள் ஒருவருடன் பேசுவதற்கு விரும்பினால் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கேளுங்கள். சம்பவத்தின் சகல விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
வாக்குமூலத்தில் கைச்சாத்திடுவதற்கு முன் அதை வாசிப்பதை உறுதிசெய்யுங்கள்.
வாக்குமூலமொன்றைப் பெறுவதற்கு மேலதிகமாக, உடல்ரீதியிலான சான்றினைப் பொலிசார் சேகரிப்பதுடன், யாரேனும் சாட்சிகள் இருந்தால் அவர்களுடனும் பேசுவார்கள்.
உங்கள் விடயத்தின் சூழ்நிலைகளைப் பொறுத்து, அதிகளவு மணித்தியாலங்களை பொலிசாரின் விசாரணை எடுக்கும். சில கேள்விகள் எல்லை மீறுவதாக இருக்கும் என்பதுடன், உங்கள் மீதான தாக்குதல் பற்றிய விபரங்களை அந்த உத்தியோகத்தர்கள் பல தடவைகள் விசாரிப்பார்கள். குற்றமிழைத்தவருக்கு எதிரான மிகப் பலமான சாத்தியத்திலான வழக்கை தாக்கல் செய்வதற்காக துல்லியமாக ஒவ்வொரு விபரத்தையும் பெறுவதற்கான அவசியம் இருப்பதனால், விரிவான விதத்தில் விசாரணை இடம்பெற்றாலும், அது அனேகமாக நியாயப்படுத்தப்படுகின்றது.
இது சாத்தியமான விரைவில் உங்களால் நினைவில் வைத்திருக்கக்கூடிய ஒவ்வொரு விபரத்தையும் எழுதுவதற்கு உதவுகின்றது. இதனால் நீங்கள் விபரங்களைப் பொலிசாருக்கு பரிமாறிக்கொள்ளலாம்.
முறையிடும் நடைமுறையின் ஊடாக சில தாபனங்கள் ஆதரவை வழங்குகின்றன. உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் அவை தெளிவுபடுத்தும். சேவை வழங்குநர்கள் சென்று. சட்டங்கள் சென்று.

 

பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் மீதான சட்டம்

வயது வந்தவர்கள்


பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் என்பது 1985ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவு 365 ‘ஆ’ இன் கீழ் ஒரு குற்றவியல் குற்றம் என்பதோடு, பாலியல் வல்லுறவு என்னும் வரைவிலக்கணத்தோடு வராத சம்மதம் இல்லாத அனைத்து பாலியல் நடவடிக்கைகளையும் உள்ளடக்குகிறது.
இது எங்கே ஒரு பாலியல் நடவடிக்கையானது பாலுறுப்புகள் அல்லது மனித உடம்பின் பாகங்கள் என்பவற்றின் ஊடானதாக மட்டுமன்றி ஏதேனும் கருவி மூலமும் மற்றும் மற்றொரு நபரின் ஏதேனும் வாய் அல்லது உடல் பாகம் ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படுவதையும் உள்ளடக்குகிறது.
இணக்கமில்லாத, ஒரு பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் உள்ளடக்கக்கூடியவற்றுக்கான உதாரணங்கள்:வாய்மூலமான பாலுறவு
  • வாய்மூலமான பாலுறவு
  • உடல்ரீதியான தூண்டல்கள்
  • கருவிகளைப் பாவித்து துன்புறுத்தும் பாலியல் நடவடிக்கை

சிறுவர்கள்


பாதிக்கப்பட்டவர் 16 வயதிற்கு கீழ்ப்பட்டவராயின் அது பாதிக்கப்பட்டவரின் சம்மதமின்றி மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும்.