சட்டத்தினால் வரையறுக்கப்பட்டவாறு இரத்தத்தினால் அல்லது திருமணத்தினால் நெருக்கமான உறவினைக் கொண்ட நபர்களுக்கு இடையிலான பாலியல் உடலுறவை முறை தவறிய உடலுறவு குறிப்பிடுகின்றது. சட்டபூர்வ தத்தெடுத்தல் தருணங்களிலும் முறை தவறிய உடலுறவு பிரயோகிக்கப்படுகின்றது. மேலே விபரிக்கப்பட்டுள்ளவாறு குடும்ப உறவே முக்கியமானதாகும்.

 எது முறைதவறிய உடலுறவில் அடங்குகின்றது?

சட்டத்தின் பிரகாரம், பின்வரும் ஏதாவது வழிகளில் உறவைக் கொண்டுள்ள இன்னொரு நபருடன் பாலியல் உடலுறவை நபர் ஒருவர் கொண்டுள்ள சூழ்நிலைகளில் முறை தவறிய உடலுறவு வரையறுக்கப்படுகின்றது:


குற்றத்தை இழைப்பவரும், பாதிக்கப்பட்டவரும் இன்னொருவரிலிருந்து நேரடியான வழித்தோன்றல் (அதாவது தந்தை/மகள்).
சுவீகாரப் பெற்றோராக, சுவீகாரத் தாத்தாவாக குற்றமிழைப்பவர் விளங்குவதுடன், பாதிக்கப்பட்டவர் சுவீகாரப் பிள்ளையாக, சுவீகாரப் பேரப்பிள்ளையாக இருத்தல்.
ஆணின் கூடப்பிறந்த சகோதரியாக அல்லது ஒன்றுவிட்ட சகோதரியாக அல்லது சுவீகாரத்தின் மூலம் சகோதரியாக பாதிக்கப்பட்டுள்ள பெண் இருத்தல்.
அவர்களில் யாராவது ஒருவரில் இருந்து வழித்தோன்றலொன்றான பெண்
பெண்ணின் கூடப்பிறந்த அல்லது ஒன்றுவிட்ட அல்லது சுவீகாரத்தினால் சகோதரரான ஆண்
கூடப்பிறந்த அல்லது ஒன்றுவிட்ட அல்லது சுவீகாரத்தினால் அல்லது இருவரில் ஒருவரிலிருந்து வழிந்தோன்றலான பாதிக்கப்பட்டவரின் சகோதரரின் அல்லது சகோதரியின் (அதாவது பெறாமகன்/மருமகன்) மகனான ஆண்.
இன்னொரு தாயின் மூலம் தனது கணவரின் மகனான ஆண் (அதாவது கணவரின் மகன்)
தனது இறந்த மகளின் அல்லது பேத்தியின் அல்லது தாயின் அல்லது பாட்டியின் கணவரின் மகனான ஆண்.

 

விடயம்:

தனிப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

தந்தையின் பராமரிப்பில் தனது மூன்று மகள்களை விட்ட பின் தாய் புலம்பெயர்ந்தார். குடித்தனத்தை நிருவகிக்கும் பொறுப்பை மூத்த மகள் எடுத்தார். அவர் சகல நாளாந்த வேலைகளைச் செய்ததுடன், தனது தந்தையையும், சகோதரிகளையும் கவனித்தார். ஆனால், மேலதிகமாக தந்தையுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கும் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். சில காலத்தின் பின்னர் தனது இரண்டாவது மகளுடன் தந்தை பாலியல் உடலுறவை வைத்துக் கொண்டார். தங்கையைப் பாதுகாப்பதற்காக பொலிஸ் நிலையத்தில் பெண்கள், சிறுவர் பிரிவில் அவர் முறைப்பாடு செய்தார். தந்தையைப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். அவர் தற்போது சிறைத் தண்டனையை அனுபவிக்கின்றார். மூன்று மகள்மாரும் சிறுவர் இல்லமொன்றில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

முறை தவறிய உடலுறவையிட்டு முறையிடுதல்

அங்கீகாரம் பெற்ற மருத்துவ உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து விரைவிலேயே மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். ஏதாவது தலைமயிர், உடல் திரவங்கள், தசைநார்கள் மற்றும் வேறு சான்று இருந்தால், அவற்றைச் சேகரிப்பதற்கான கடமையொன்றை மருத்துவ உத்தியோகத்தர் கொண்டுள்ளார். ஏதாவது பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் இருந்தால் சட்ட மருத்துவ உத்தியோகத்தருக்கும், பொலிசுக்கும் அறிவிப்பதற்கான கடமையொன்றை மருத்துவ உத்தியோகத்தர் கொண்டுள்ளார்.
அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்யுங்கள்.
பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்தவர் 18 வயதுக்கு குறைந்தவர் என்றால், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (தொடர்பு) சம்பவம் முறையிடப்பட வேண்டும்.
பொலிஸ் முறைப்பாடொன்றைச் செய்வதற்கு முன், பொலிஸ் நிலையத்தில் பெண்கள், சிறுவர் பிரிவொன்று (தொடர்பு) உள்ளதா என விசாரியுங்கள் அல்லது ஆண் கான்ஸ்டபிள் ஒருவருக்குப் பதிலாக பெண் கான்ஸ்டபிள் ஒருவருடன் பேசுவதற்கு விரும்பினால் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கேளுங்கள். சம்பவத்தின் சகல விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
வாக்குமூலத்தில் கைச்சாத்திடுவதற்கு முன் அதை வாசிப்பதை உறுதிசெய்யுங்கள்.
வாக்குமூலமொன்றைப் பெறுவதற்கு மேலதிகமாக, உடல்ரீதியிலான சான்றினைப் பொலிசார் சேகரிப்பதுடன், யாரேனும் சாட்சிகள் இருந்தால் அவர்களுடனும் பேசுவார்கள்.
உங்கள் விடயத்தின் சூழ்நிலைகளைப் பொறுத்து, அதிகளவு மணித்தியாலங்களை பொலிசாரின் விசாரணை எடுக்கும். சில கேள்விகள் எல்லை மீறுவதாக இருக்கும் என்பதுடன், உங்கள் மீதான தாக்குதல் பற்றிய விபரங்களை அந்த உத்தியோகத்தர்கள் பல தடவைகள் விசாரிப்பார்கள். குற்றமிழைத்தவருக்கு எதிரான மிகப் பலமான சாத்தியத்திலான வழக்கை தாக்கல் செய்வதற்காக துல்லியமாக ஒவ்வொரு விபரத்தையும் பெறுவதற்கான அவசியம் இருப்பதனால், விரிவான விதத்தில் விசாரணை இடம்பெற்றாலும், அது அனேகமாக நியாயப்படுத்தப்படுகின்றது.
இது சாத்தியமான விரைவில் உங்களால் நினைவில் வைத்திருக்கக்கூடிய ஒவ்வொரு விபரத்தையும் எழுதுவதற்கு உதவுகின்றது. இதனால் நீங்கள் விபரங்களைப் பொலிசாருக்கு பரிமாறிக்கொள்ளலாம்.
முறையிடும் நடைமுறையின் ஊடாக சில தாபனங்கள் ஆதரவை வழங்குகின்றன. உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் அவை தெளிவுபடுத்தும். சேவை வழங்குநர்கள் சென்று. சட்டங்கள் சென்று.

 

முறை தவறிய உடலுறவு மீதான சட்டம்

முறைதவறிய உறவு மீதான சட்டம் 1995ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க குற்றவியல் சட்டக்கோவையின் (திருத்தம்) பிரிவு 364 ‘அ’ இல் காணப்படுகின்றது. ஏதாவது பின்வரும் வழிகளில் இன்னொரு நபருடன் பாலியல் உடலுறவை நபர் ஒருவர் கொண்டிருந்தால், அது முறை தவறிய உறவை அடக்கியிருக்கும்:


குற்றத்தை இழைப்பவரும், பாதிக்கப்பட்டவரும் இன்னொருவரிலிருந்து நேரடியான வழித்தோன்றல் (அதாவது தந்தை/மகள்).
சுவீகாரப் பெற்றோராக, சுவீகாரத் தாத்தாவாக குற்றமிழைப்பவர் விளங்குவதுடன், பாதிக்கப்பட்டவர் சுவீகாரப் பிள்ளையாக, சுவீகாரப் பேரப்பிள்ளையாக இருத்தல்.
ஆணின் கூடப்பிறந்த சகோதரியாக அல்லது ஒன்றுவிட்ட சகோதரியாக அல்லது சுவீகாரத்தின் மூலம் சகோதரியாக பாதிக்கப்பட்டுள்ள பெண் இருத்தல்.
அவர்களில் யாராவது ஒருவரில் இருந்து வழித்தோன்றலொன்றான பெண்
பெண்ணின் கூடப்பிறந்த அல்லது ஒன்றுவிட்ட அல்லது சுவீகாரத்தினால் சகோதரரான ஆண்
கூடப்பிறந்த அல்லது ஒன்றுவிட்ட அல்லது சுவீகாரத்தினால் அல்லது இருவரில் ஒருவரிலிருந்து வழிந்தோன்றலான பாதிக்கப்பட்டவரின் சகோதரரின் அல்லது சகோதரியின் (அதாவது பெறாமகன்/மருமகன்) மகனான ஆண்.
இன்னொரு தாயின் மூலம் தனது கணவரின் மகனான ஆண் (அதாவது கணவரின் மகன்)
தனது இறந்த மகளின் அல்லது பேத்தியின் அல்லது தாயின் அல்லது பாட்டியின் கணவரின் மகனான ஆண்.முறை தவறிய உடலுறவு மீதான சட்ட எல்லைகள்

 

இலங்கையில், முறை தவறிய உடலுறவின் பரப்பெல்லைக்குள் உடலுறவு நடவடிக்கை மட்டுமே உள்வருகிறது. இந்த உறவுகள் முறையிலான யாரேனும் நபர்களிலான ஏனைய வடிவிலான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கான உதாரணங்கள்:


பாலியல்ரீதியிலாகத் தொடுதல்
வாய்மொழி மூலமாகத் தூண்டுதல் அல்லது துஷ்பிரயோகம்
உடல் தூண்டுதல்கள்
பொருத்தமற்ற நெருக்கம்
பிள்ளையொன்றின் பாலுறுப்புக்களைக் கிளர்ச்சியுற வைத்தல் அல்லது தொடுதல்
சிறுவர்கள் குளிக்கும் போது அல்லது உடை மாற்றும் போது உள்ளே செல்லுதல்

 

இவை முறை தவறிய உடலுறவுக் குற்றத்தின் கீழ் வரமாட்டா. இத்தகைய செயல்கள் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகங்கள் அல்லது பாலியல்ரீதியான தொந்தரவுகள் ஆகிய சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படக்கூடியவை.

வழக்கொன்றைத் தொடர்வதற்கு சட்ட மா அதிபரின் எழுத்துமூலமான சம்மதம் பெறப்படல் வேண்டும். இந்த ஏற்பாடு வேறு தெரிவுகள் (உதாரணம்: ஆற்றுப்படுத்துதல், தற்காலிகமாக பாதுகாப்பான இடமொன்றுக்கு அகற்றுதல்) ஆராயப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகக கருதப்படுவதுடன், வழக்கைத் தொடர்வதில் ஒரு கவனமான வழக்குசார்ந்த மதிப்பீட்டையும் பின்தொடர்கின்றன.

நம்பிக்கை கொள்வதற்கான, முழு ஆளாக விளங்குவதற்கான இயலாமை, பயப்பிராந்தி, மற்றும் நெருங்கிய உறவையிட்டு அச்சம் ஆகியனவே துஷ்பிரயோகத்திலிருந்து எழக்கூடிய உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளில் சிலவாகும்.

சட்ட நடவடடிக்கை (சட்டங்களுக்கான தொடர்பு)