பாலியல்வல்லுறவானது ஒரு நிர்ப்பந்திக்கப்பட்ட, வரவேற்கப்படாத பாலியல் உடலுறவாகும். இது பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிராக இழைக்கப்படும் பாரதூரமானதும், மிருகத்தனமானதுமான ஒரு செயற்பாடாகும். இது உடல்ரீதியிலானதும், உளவியல்ரீதியிலானதும், உணர்வுரீதியிலானதும், பொருளாதாரரீதியிலானதுமான பின்விளைவினைக் கொண்டிருக்கின்றது. ஒரு பெண்ணின் உடலுக்கும், நேர்மைக்கும், தனிப்பட்ட பாதுகாப்புக்கும், அவரது சுய மரியாதைக்கும் கௌரவத்திற்கும் வன்முறையின் மட்டத்தின் காரணமாக அன்றி, அனுபவத்தைச் சுற்றியுள்ள சமூகக் களங்கத்தின் காரணமாக அவர் அடைகின்ற அனுபவம் மன அமைதியைக் குலைக்கின்றது.

 


 

எது பாலியல்வல்லுறவில் அடங்குகின்றது?

  இணக்கமின்றி பாலியல்வல்லுறவு இடம்பெற்றால் அது குற்றமொன்றாகும்.  

பின்வரும் சூழ்நிலைகளில் அது இன்னுமே பாலியல்வல்லுறவாகவே விளங்குகின்றது

பெண் ஒருவரின் சம்மதமின்றி, அவருடன் பாலியல் உடலுறவை ஓர் ஆண் கொண்டிருந்தால், பாலியல்வல்லுறவுக்கு அந்த ஆண் குற்றவாளியாவார். இணக்கமின்றி பாலியல் உடலுறவு இடம்பெற்றது என்பதை நிரூபிப்பதற்கு உடல்ரீதியிலான காயங்கள் போன்ற எதிர்ப்பு காட்டப்பட்டதற்கான சான்று அவசியமில்லை. ஒரு பெண் மீது நிர்ப்பந்தத்தை அல்லது அச்சுறுத்தலை அல்லது பயமுறுத்தலைப் பயன்படுத்துவதன் மூலம், அல்லது மரணத்தை அல்லது காயத்தை ஏற்படுத்துவதாக அவரை அச்சுறுத்துவதன் மூலம் அல்லது சட்டபூர்வமற்ற தடுப்புக்காவலில் அவர் இருக்கும் வேளை அவரிடமிருந்து இணக்கத்தை ஆண் பெறுதல்
பாலியல் உடலுறவைத் தாபிப்பதற்கு யோனிக்குரிய ஊடுருவல் மட்டுமே தேவைப்பாடாகும். விந்து வெளியேற்றம் அவசியமில்லை. பிரச்சனையில் உள்ள ஆணினால் அல்லது வேறு சில நபர்களினால் மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் ஊட்டப்படுகின்ற பெண் ஒருவரைப் பொறுத்தளவில், அவர் மதிமயங்கிய நிலையில் இருக்கும் போது, அத்தகைய நிலைமையின் கீழ் பாலியல்வல்லுறவுக்கு அவர் இணங்கியிருந்தால் கூட, அத்தகைய செயற்பாடு பாலியல்வல்லுறவாகும்.
இலங்கையில், கணவரிடமிருந்து அவரது மனைவி சட்டபூர்வமாகப் பிரிந்திருந்தால் மட்டுமே மனைவியுடனான பாலியல் உடலுறவைக் கணவர் கொண்டிருந்தால் அவர் பாலியல்வல்லுறவுக்கு குற்றவாளியாவார். மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவருடன் பாலியல் உடலுறவைக் கொண்டிருக்கும் போது பாலியல்வல்லுறவை வைத்துக்கொள்ளல்
ஒரு கணவரிடமிருந்து மனைவி சட்டபூர்வரீதியாகப் பிரிந்திருக்காவிட்டால் மனைவியை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கணவர் குற்றவாளியாக விளங்கமாட்டார் என்ற அதேவேளை, தனது மனைவிக்கு எதிராக அத்தகைய பாலியல் வன்முறைக்கு வீட்டு வன்முறையின் கீழ் அவர் பாத்திரவாளியாவார். அதே வேளை, சட்டத்தின் கீழ் கிட்டுகின்ற பரிகாரங்களை மனைவினால் கோர முடியும். பிரச்சனையில் உள்ள பெண்ணின் கணவர் என பாசாங்க செய்வதன் மூலம், பெண் ஒருவருடன் இணக்கத்தை ஆண் ஒருவர் பெறுதல்
   

16 வயதுக்கு குறைந்த பெண் ஒருவருடன் பாலியல் உடலுறவில் ஆண் ஒருவர் ஈடுபட்டால், இணக்கத்தை வழங்குவதற்கான ஆற்றலளவை அப்பெண் கொண்டிருக்கவில்லை எனக் கருதப்படுவதன் காரணமாக, பாலியல்வல்லுறவுக்கு அந்த ஆண் குற்றவாளியாவார். இது சட்டபூர்வமான பாலியல்வல்லுறவாகக் குறிப்பிடப்படுகின்றது (சட்டங்களுக்கான தொடர்பு)

 

சட்டபூர்வ பாலியல்வல்லுறவு

 

1995இன் 22ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறு குற்றவியல் சட்டக்கேவையின் பிரிவு 363 (உ)இன் பிரகாரம், 16 வயதுக்கு குறைந்த பெண் ஒருவருடன் பாலியல் உடலுறவில் ஆண் ஒருவர் ஈடுபட்டால், இது சட்டபூர்வமான பாலியல்வல்லுறவாகக் குறிப்பிடப்படுகின்றது. உடலுறவு செயற்பாட்டின் சாட்சியம் பாலியல்வல்லுறவை நிரூபிப்பதற்கு போதுமானதாகும்.

முஸ்லிம்களைப் பொறுத்தளவில், தனது கணவருடன் பாலியல் உடலுறவில் ஈடுபடுகின்ற 16 வயதுக்கு குறைந்த சட்டபூர்வமாகத் திருமணம் செய்த நபர் ஒருவருக்கு சட்டபூர்வமான பாலியல்வல்லுறவு மீதான சட்டம் பொருத்தமானதல்ல. முஸ்லிம்கள் தவிர்ந்த சகல இலங்கையர்களுக்கும் சட்டபூர்வமான திருமண வயது தற்போது 18 என்பதால், இந்த விதிவிலக்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும்.


பாதுகாவலின் போது பாலியல்வல்லுறவு

குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவு 364(2) (அ)இன் பிரகாரம், பாதுகாவலிலான பாலியல்வல்லுறவு பின்வரும் தருணங்களின் கீழ் இடம்பெறலாம்:

அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் அல்லது அதிகாரத்தின் நிலையொன்றில் உள்ள நபர் ஒருவர் ‘தனது உத்தியோகபூர்வ நிலையை அனுகூலமாக எடுத்து’, பாலியல்வல்லுறவை இழைத்தல்.

பாதுகாவல் இல்லமொன்றின் அல்லது பெண்களின் அல்லது சிறுவர்களின் நிறுவனமொன்றின் அல்லது வைத்தியசாலையொன்றின் நிருவாகத்தைச் சார்ந்த நபர் ஒருவர் ‘தனது உத்தியோகபூர்வ நிலையை அனுகூலமாக எடுத்து’ பாலியல்வல்லுறவை இழைத்தல்.

பாதுகாவலிலான பாலியல்வல்லுறவு என்ற பதத்தை குற்றவியல் சட்டக்கோவை பயன்படுத்துவதில்லை. ஆனால், அபராதம் ஒன்றுடன் சேர்த்து, பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈட்டின் கொடுப்பனவுடனும் சேர்த்து, இதுபது (20) வருடங்களுக்கு மீறாமல் பத்து (10) வருடங்களைக் கொண்ட சிறைத் தண்டனைக்;கான குறைந்தபட்ச கட்டாயத் தண்டனை விதிப்பில் இந்தக் குற்றத்தின் பாரதூரமானதன்மை அங்கீகரிக்கப்படுகின்றது.


இணக்கம் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்


இணக்கம் ஒரு நடைமுறையாகும் - நெருக்கமான பாலியல் உறவின் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு நீங்கள் விரும்பினால், அக் கட்டத்தின் ஒவ்வொரு படிக்கும் அது கேட்கப்பட வேண்டும். பாலியல் செயற்பாட்டின் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு இணக்கம் வழங்கப்பட முடியும். ஆனால், ஏதாவது வேளையில், முடியாது என்று கூறுவதற்கான உரிமை உங்களுக்கு உண்டு.
இணக்கத்தை ஒரு போதும் குறிப்பாக உணர்த்த முடியாது என்பதுடன், அனுமானிக்கவும் முடியாது - நீங்கள் வெறுமனே உறவொன்றைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்காக அது நீங்கள் பாலியலுக்கு இணங்கியிருக்கிறீர்கள் என்பது அர்த்தமல்ல.
இணக்கம் நிதானமானது – மதுமயக்கத்தில் உள்ள ஒருவர் சட்டபூர்வமாக இணக்கத்தினை வழங்க முடியாது. தீர்மானங்களை எடுப்பதற்கும், அதை உங்கள் கூட்டாளிக்கு அறிவிப்பதற்கும் நீங்கள் முடியாத அளவுக்கு அதிகளவு குடித்திருந்தால், இணக்கத்தை வெளிப்படுத்துவதற்கு முடியாத அளவுக்கு நீங்கள் அதிகளவு குடித்திருக்கிறீர்கள.
இணக்கம் வாய்மொழியிலானது – “இல்லை” என்று கூறாவிட்டால், அது “ஆம்” என்ற கருத்தல்ல.
இணக்கம் பரஸ்பரமானது – பாலியலை மேற்கொள்வதற்கான தீர்மானத்தில் இருவரும் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். பாலியலை ஒரு கூட்டாளி கூட மேற்கொள்வதற்கு விரும்பாவிட்டால், இணக்கம் இல்லை என்பதாகும்.


இணக்கம் ஏன் முக்கியமானதாகும்?


பாலியலையும், உறவுகளையும் தொடர்பாடல், மரியாதை மற்றும் நேர்மை ஆகியன சிறப்பாக்குகின்றன.
இணக்கத்தைக் கேட்பதும், பெறுவதும் உங்களுக்கும், உங்களுடைய கூட்டாளிக்குமான மரியாதையை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகின்றது.
பால்நிலையையும், பாலியலையும் பற்றிய பாரம்பரியக் கருத்துக்களையிட்டு அது கேள்வியெழுப்புகின்றது.
தனது துணைவர் மீது ஒருவர் உணர்ச்சியைக் கொண்டிருக்கலாம் என்ற உரிமையை அது இல்லாதொழிக்கின்றது. உங்கள் உடலோ அல்லது உங்கள் பாலியல்தன்மையோ வேறு ஒருவருக்கும் சொந்தமானவையல்ல.
இணக்கத்திலான நடைமுறையில் உள்ளடக்கப்பட வேண்டும் என பெண்கள் எதிர்பார்ப்பது வழமையானது என்பதுடன், ஆரோக்கியமானதுமாகும்.

 

விடயம்:

தனிப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

சுரங்கியின் குடும்பத்தினால் அறியப்பட்ட டிக்ஸன் என்பவர், ஒரு நாள் சுரங்கியின் வீட்டுக்கு வந்து, குடிப்பதற்கு சிறிது நீர் கேட்டுள்ளார். அந்நேரத்தில் சுரங்கி தனியாகவே இருந்துள்ளார். சமைலறையின் நிலத்தில் இருந்த பானையிலிருந்து நீரை ஊற்றுவதற்கு சுரங்கி குனிந்த போது, வீட்டுக்குள் அவரைப் பின்தொடர்ந்து வந்த டிக்ஸன், அவரைக் கையினால் பிடித்து, அறையொன்றுக்குள் தள்ளிச்சென்று, சுமார் 20 நிமிடங்களுக்;கு நிர்ப்பந்தத்திலான பாலியல் உடலுறவை மேற்கொண்டார். தனது சுயநினைவை மீளப்பெறுவதற்கு அவருக்கு மேலும் 30 நிமிடங்கள் எடுத்தன. அந்நேரத்தில் சுரங்கி 14 வயதானவராகவே விளங்கினார்.

சுரங்கியின் தம்பி வீடு வந்தபோது, அண்மையில் உள்ள தோட்டத்தில் தேயிலை பிடுங்கும் தனது தாயாரைக் கூட்டி வருமாறு தம்பியை சுரங்கி அனுப்பிவைத்தார். சமயாசமய தொழிலாளியாக வேலை செய்யும் சுரங்கியின் தந்தையுடன் தாயார் வந்தார்.

சுரங்கியின் பெற்றோர் வந்த போது, அவர் உணர்ந்த வெட்கத்தைக் களைவது போன்று, சுரங்கி தன்னை முழுமையாகக் கழுவியிருந்தார். சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறப்பட்ட போது, முச்சக்கர வண்டியொன்றில் அவர்கள் இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்குச் சென்றனர். வழியில் டிக்ஸனை தனது பெற்றோருக்கு சுரங்கி காட்டினார். டிக்ஸனைத் தாக்குவதற்காக சுரங்கியின் தந்தை கீழே இறங்கிய போது டிக்ஸன் ஓடிவிட்டார்.

சுரங்கியின் வாக்குமூலத்தைப் பொலிசார் பதிவுசெய்ததுடன், வைத்தியசாலைக்குச் செல்லுமாறு கூறினர். அங்கு அவர் இரண்டரை நாட்களுக்குத் தங்கியிருந்தார். வீட்டுக்கு வந்த பின்னர், அவர் பாடசாலைக்குச் செல்ல மறுத்தார்.

சந்தேக நபரின் வீட்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் பொலிசார் சென்றதுடன், பொலிஸ் நிலையத்திற்கு அவரை அனுப்பிவைக்குமாறு அவரது சகோதரியிடமும் கூறினார்கள். டிக்ஸன் ஒரு போதுமே வரவில்லை என்பதுடன், இதுவரை அவர் பிடிபடவும் இல்லை. விடயத்தை பொலிசார் பின்தொடரவில்லை என்றே தோன்றுகின்றது.கமல் அத்தஆரச்சி எதிர் அரசாங்கம்,

இலங்கை சட்ட அறிக்கைகள் 2000இன் தொகுதி 393

இவ்வழக்கில் இரு குற்றச்சாட்டுக்களின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. முதலாவது குற்றச்சாட்டில், குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவு 357இன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமொன்றாக சட்டவிரோதமான உடலுறவை வைத்துக் கொள்வதற்காக பெண்பிள்ளை ஒருவரை நிர்ப்பந்திப்பதற்காக அல்லது தீச்செயலுக்குட்படுத்துவதற்காக அந்த பெண்பிள்ளையைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இரண்டாவது குற்றச்சாட்டில், சொல்லப்பட்ட திகதியில், குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவு 364இன் கீழ் தண்டிக்கக்கூடிய குற்றமொன்றான பெண்பிள்ளை மீது பாலியல்வல்லுறவை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். விசாரணையின் பின், இரு குற்றச்சாட்டுக்களுக்கும் குற்றவாளியாக மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். இதன்படி முதலாவது குற்றச்சாட்டுக்கு இரு வருடங்களைக் கொண்ட காலத்திற்கு கடுங்காவல் சிறைத்தண்டனையையும், இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 10 வருடங்களைக் கொண்ட காலத்திற்கு கடுங்காவல் சிறைத்தண்டனையையும், இரு சிறைத்தண்டனைகளும் சமகாலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிடப்பட்டிருந்ததார். மேலதிகமாக, ஒரு மில்லியன் ரூபா கொண்ட அபராதமொன்றைச் செலுத்துமாறும், அதைச் செலுத்துவதற்குத் தவறினால் இரு வருடங்களைக் கொண்ட கடுங்காவல் சிறைத்தண்டனையை குற்றவாளியான மேன்முறையீட்டாளர் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி கட்டளையிட்டார். சொல்லப்பட்ட ஒரு மில்லியன் ரூபா கொண்ட அபராதத்தில் ரூபா 900,000 கொண்ட தொகையொன்று நஷ்டஈடாக வழக்குதொடுத்தவர்களுக்கு செலுத்தப்பட வேண்டும் என மேலும் கட்டளையிடப்பட்டது. உடலுறவுக்கான இணக்கமின்மை நிரூபிக்கப்படவில்லை என்ற காரணத்தின் மீது குற்றவாளியை பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது..

ராஜரட்ன எதிர் சட்டமா அதிபர்

1996 ஜனவரி 23இன் மேன்முறையீட்டு நீதிமன்ற குறிப்புக்கள், பக்கம் 11-12 (மூலம்: ஷியாமளா மற்றும் மாரியோ, Gender Violence in Sri Lanka: From Rights and Shame to Remedies and Change, CIDA: கொழும்பு 1999).

இவ்வழக்கில் நான்கு வயது குழந்தையொன்று, அக் குழந்தைக்கு தெரிந்த யாரோ ஒருவரினால் பிற்பகல் வேளையில் பாலியல்வல்லுறவுக்குட்பட்டது. குழந்தையின் சாட்சியத்தினால் மட்டும் குற்றவாளி அடையாளங் காணப்பட்டார். குழந்தை நான்கு வயது என்பதனால், பாதிக்கப்பட்ட- தப்பிப்பிழைத்தவரின் ஊர்ஜிதப்படுத்தப்படாத அல்லது உறுதிப்படுத்தப்படாத சாட்சியத்தின் மீது குற்றவாளியைத் தண்டிப்பது பாதுகாப்பற்றது என ஜூரிக்கு விசாரணை நடத்திய நீதிபதி அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். சம்பவம் பிற்பகல் வேளை நடந்திருந்தாலும், அடையாளங் காட்டலுக்கு வாய்ப்பு போதுமானது என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. குற்றத்தீர்ப்பினை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

 

     

 

பாலியல்வல்லுறவின் பாதிக்கப்பட்டவர்-தப்பிப்பிழைத்தவர் எதைச் செய்ய வேண்டும்?

 

   

நெருக்கமானதும், நம்பிக்கையானதுமான நண்பரிடம் அல்லது குடும்ப உறுப்பினரிடம் நடந்ததைச் சொல்ல வேண்டும். வைத்தியசாலைக்கும், பொலிஸ் நிலையத்திற்கும் உங்களுடன் துணைக்கு வரும்படி அவர்களைக் கேளுங்கள்.

 

பாலியல்வல்லுறவின் பாதிக்கப்பட்டவர்-தப்பிப்பிழைத்தவர் எதைச் செய்யக்கூடாது?

24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலையொன்றிலிருந்து மருத்துவ அறிக்கையொன்றைப் பெறுங்கள் (ஒன்றில் வைத்தியர் ஒருவரிடமிருந்து அல்லது சட்ட வைத்திய அதிகாரியிடமிருந்து). இதுவும் நீதிமன்றத்தில் சாட்சியமாகப் பயன்படுத்தப்படும்.

வைத்தியசாலையொன்றில் மருத்துவச் சோதனைக்கு முன்னர் உடலைச் சுத்தம் செய்தல்.

அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறை;ப்பாடொன்றைத் தாக்கல் செய்யுங்கள்.

வைத்தியசாலைக்கும், பொலிஸ் நிலையத்திற்கும் செல்வதற்கு முன் சம்பவத்தின் வேளையில் அணிந்திருந்த ஆடைகளை அகற்றுதல்.

பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் செம்மையானவையா என்பதைப் பார்ப்பதற்கு எப்பொழுதும் சோதியுங்கள்.

தன்னைத் தனிப்படுத்தல்.

பதிவு நீங்கள் புரிந்துகொள்ள முடியாத மொழியொன்றில் இருந்தால், கைச்சாத்திடுவதற்கு முன் மொழிபெயர்ப்பாளர் ஒருவரைக் கேளுங்கள் (அந்த மொழியை நண்பர் ஒருவர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் புரிந்து கொள்ள முடியுமென்றால் உதவியாக இருக்கும்).

சந்தேகத்தில் இருக்கும் போது அமைதியாகத் தொடர்ந்துமிருத்தல்.

முறைப்பாட்டின் அல்லது பதிவின் பிரதியொன்றையும், முறைப்பாட்டை எடுத்த உத்தியோகத்தரின் பெயரையும் கேளுங்கள்.

குடும்பத்தினரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும், வாழ்க்கைதொழில்புரிபவர்களிடமிருந்தும் உதவியை மறுத்தல்.

மேற்கோள் இலக்கமொன்றையும் கேளுங்கள்.

   

ஆற்றுப்படுத்தல் மற்றும் வாழ்க்கைத்தொழில் உளவியல் உதவியை நாடுங்கள் (ஆற்றுப்படுத்தலை வழங்கும் தாபனங்களுக்கான தொடர்பு) குறிப்புப் புத்தகமொன்றில் சம்பவத்தின் சகல விபரங்களையும் பதிவுசெய்யுங்கள்.

   

பாலியல்வல்லுறவு எதை அடக்கியுள்ளது என்பதையிட்டு நீங்கள் நிச்சயமில்லை என்றால், எவ்வாறு தொடர்;ந்து செயற்படுவது என்பதையிட்டு ஆலோசனையை நாடுவதற்காக பால்நிலை அடிப்படையிலான வன்முறை மீது பணியாற்றுகின்ற தாபனமொன்றை நாடுவதன் மூலம் உடனடியாக விடயத்தைத் தெளிவுபடுத்துங்கள்.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனக்கு உடல்ரீதியான காயங்கள் இல்லாவிட்டாலும், ‘பொலிசாருக்கு’ சம்பவத்தை முறையிடலாமா?


ஆம்! சில வேளைகளில் பாலியல் வன்முறைச் சம்பவங்களில் உடல்ரீதியான காயங்கள் ஏற்படுவதில்லை. இத்தகைய காயங்கள் இல்லாததினால், அது முறையிடுவதிலிருந்து உங்களைத் தடுக்கமாட்டாது.
பாலியல்வல்லுறவுச் சம்பவங்களில் காயங்கள் உட்புறமாக இருக்கக்கூடும் என்பதுடன், கண்ணுக்குத் தெரியாதவையாகவும் இருக்கும். இத்தகைய மறைந்துள்ள காயங்களைக் கண்டறிவதற்கான உபகரணங்களைப் பெருமளவு வைத்தியசாலைகள் கொண்டுள்ளன.
நீங்கள் காயமடையவில்லை என்று எண்ணினாலும் கூட, மருத்துவப் பராமரிப்பினை நாடுவதுடன், பாலியல்ரீதியில் பரவும் தொற்று நோய்களுக்காகவும், கர்ப்பம் தரிப்பதற்கான சந்தர்ப்பத்திற்காகவும் சோதிக்கப்பட வேண்டும்.


வழக்கு தொடர்வது எனக்கு அவசியமா என்பது பற்றி நினைப்பதற்கு எனக்கு நேரம் அவசியப்பட்டால்?

 

குற்றம் இடம்பெற்ற பின்னர் உடனேயே வழக்குத் தொடர்வது பற்றி தீர்மானமெடுப்பதற்கு பெரும்பாலானோர் தயாராக இருப்பதில்லை என்பது புரிந்துகொள்ளக்கூடியதாகும். தீர்மானம் பற்றி நினைப்பதற்கும், நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பேசுவதற்கும் நேரம் தேவைப்படுவது வழமையானதே.

நீங்கள் வழக்கு தொடர்வது பற்றி நினைகின்ற போதிலும், அதைப் பற்றி நிச்சயமாக இருக்காவிட்டால், சாட்சியம் இன்னுமே பிரச்சன்னமாகி இருப்பதுடன், உங்கள் ஞாபகம் இன்னுமே விளக்கமாக இருக்கும் அதே வேளை, நேரடியாகவே ‘பொலிஸ்’ அறிக்கையைத் தயாரிக்கும்படி நாம் விதந்துரைக்கின்றோம்.

வழக்கைத் தொடர்வதா, இல்லையா என்பதைச் சட்டமா அதிபர் தீர்மானிப்பார். எனினும், பாலியல்வல்லுறவுக்கு உட்பட்டதாகக் கூறப்படும் பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்தவரின் ஒத்துழைப்பு இன்றி வழக்குகளை நடத்துவது அசாதாரணமானதாகும்.

தாக்குதலை முடிப்பதற்கு முன் குற்றத்தை இழைத்தவர் பயந்து ஓடிவிட்டார். என்னால் இன்னுமே முறைப்பாடு செய்ய முடியுமா?

 

ஆம், பாலியல் வன்முறையை இழைப்பதற்கான முயற்சியொன்று இன்னுமே ஒரு பாரதூரமான குற்றமாகும் என்பதுடன், அது முறைப்பாடு செய்யப்படவும் வேண்டும். உண்மையாகவே இழைக்கப்படுகின்ற அல்லது முயற்சிக்கப்படுகின்ற வன்முறையானது உடல்ரீதியான, பாலியல்ரீதியிலான, உணர்வுப்பூர்வமான/உளவியல்ரீதியிலான வன்முறையாக விளங்கலாம்.

எனக்கு தனிப்பட்டரீதியில் குற்றத்தை இழைத்தவரைத் தெரியும் என்பதுடன், அவரை நானே வரவழைத்தேன். என்னால் இன்னுமே முறைப்பாடு செய்யலாமா?

 

ஆம். பெருமளவு விடயங்களில், தம் மீது தாக்குதலை நடத்துபவரைப் பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்தவர்களுக்குத் தெரியும். அத்துடன் நீங்கள் இருவரும் தன்னிச்சையாகவே ஒன்றாக இருந்தீர்கள் அல்லது உங்கள் வீட்டுக்கு நீங்கள் அவருக்கு வரவேற்பு அளித்தீர்கள் என்ற போதிலும் கூட, ஏதாவது ஒன்றிலும் மாற்றம் இருக்கமாட்டாது.

பாலியல்வல்லுறவை முறையிடுதல்

உங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய ஒரு நெருங்கிய நண்பருக்கு அல்லது குடும்ப உறுப்பினருக்கு சாத்தியமான விரைவில் சம்பவம் பற்றிக் கூறுவது மிகவும் முக்கியமானதாகும். பாலியல்வல்லுறவுக்குட்பட்ட பெண்கள் எப்பொழுதும் சம்பவத்தை முறையிடுவதுடன், சுகாதார மற்றும் உளவியல் ஆதரவையும் பெறவேண்டும்.
அங்கீகாரம் பெற்ற மருத்துவ உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து விரைவிலேயே மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். ஏதாவது இருந்தால், தலைமயிர், உடல் திரவங்கள், தசைநார்கள் மற்றும் வேறு சான்று ஆகியவற்றைச் சேகரிப்பதற்கான கடமையொன்றை மருத்துவ உத்தியோகத்தர் கொண்டுள்ளார். ஏதாவது பாரதூரமான உடல்ரீதியிலான காயங்கள் இருந்தால் சட்ட மருத்துவ உத்தியோகத்தருக்கும், பொலிசுக்கும் அறிவிப்பதற்கான கடமையொன்றை மருத்துவ உத்தியோகத்தர்கள் கொண்டுள்ளார்கள்.
அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்யுங்கள்..
பொலிஸ் முறைப்பாடொன்றைச் செய்வதற்கு முன், பொலிஸ் நிலையத்தில் பெண்கள், சிறுவர் பிரிவொன்று (தொடர்பு) உள்ளதா என விசாரியுங்கள் அல்லது ஆண் கான்ஸ்டபிள் ஒருவருக்குப் பதிலாக பெண் கான்ஸ்டபிள் ஒருவருடன் பேசுவதற்கு விரும்பினால் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கேளுங்கள். சம்பவத்தின் சகல விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
வாக்குமூலத்தில் கைச்சாத்திடுவதற்கு முன் அதை வாசிப்பதை உறுதிசெய்யுங்கள்.
வாக்குமூலமொன்றைப் பெறுவதற்கு மேலதிகமாக, உடல்ரீதியிலான சான்றினைப் பொலிசார் சேகரிப்பதுடன், யாரேனும் சாட்சிகள் இருந்தால் அவர்களுடனும் பேசுவார்கள்.
உங்கள் விடயத்தின் சூழ்நிலைகளைப் பொறுத்து, அதிகளவு மணித்தியாலங்களைப் பொலிசாரின் விசாரணை எடுக்கும். சில கேள்விகள் எல்லை மீறுவதாக இருக்கும் என்பதுடன், உங்கள் மீதான தாக்குதல் பற்றிய விபரங்களையிட்டு அந்த உத்தியோகத்தர்கள் பல தடவைகள் விசாரிப்பார்கள். குற்றமிழைத்தவருக்கு எதிரான மிகப் பலமான சாத்தியத்திலான வழக்கைத் தாக்கல் செய்வதற்காக துல்லியமாக ஒவ்வொரு விபரத்தையும் பெறுவதற்கான அவசியம் இருப்பதனால், விரிவான விதத்தில் விசாரணை இடம்பெற்றாலும், அது அனேகமாக நியாயப்படுத்தப்படுகின்றது.
இது சாத்தியமான விரைவில் உங்களால் நினைவில் வைத்திருக்கக்கூடிய ஒவ்வொரு விபரத்தையும் எழுதுவதற்கு உதவுகின்றது. இதனால் நீங்கள் விபரங்களைப் பொலிசாருக்கு பரிமாறிக்கொள்ளலாம்.
முறையிடும் நடைமுறையின் ஊடாக சில தாபனங்கள் ஆதரவை வழங்குகின்றன. உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் அவை தெளிவுபடுத்தும்.

பொலிசுக்கு முறைப்பாடு செய்வதற்கான கால எல்லை

பாலியல் வன்முறையைப் பொறுத்தளவில், விரைவிலேயே குற்றம் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டால், சான்றுகள் சேகரிக்கப்பட்டு, வழக்கு பலமாக விளங்கும்.
எப்பொழுதுமே குற்றத்தை சாத்தியமான விரைவில் முறையிடுங்கள். உங்களுக்கு நடந்தது குற்றமொன்றா என்பதையிட்டு நீங்கள் நிச்சயமற்றிருந்தால், முதலில் பொலிசுக்கு அல்லது வேறு ஆதரவுத் தாபனத்திற்கு (தொடர்பு) முறையிட்டுவிட்டு, அவற்றுடன் விடயத்தைத் தெளிவுபடுத்துங்கள்.
குற்றமொன்றைப் பொறுத்தளவில், குற்றமொன்றை முறையிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள ஆகக்கூடுதலான சட்டபூர்வமான கால எல்லை இருபது (20) வருடங்களாகும்.
முறையிடும் நடைமுறையின் ஊடாக சில தாபனங்கள் ஆதரவை வழங்குகின்றன. உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் அவை தெளிவுபடுத்தும். சேவை வழங்குநர்கள் சென்று. சட்டங்கள் சென்று.

 

பாலியல்வல்லுறவு மீதான


1995இன் 22ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறு, குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவு 363இல் பாலியல்வல்லுறவு மீதான சட்டம் காணப்படுகின்றது.

பெண் ஒருவரின் சம்மதமின்றி, அவருடன் பாலியல் உடலுறவை ஓர் ஆண் கொண்டிருந்தால்> பாலியல்வல்லுறவுக்கு அந்த ஆண் குற்றவாளியாவார்.
பாலியல் உடலுறவுக்கு உட்புகுத்தல் ஒரேயொரு தேவைப்பாடாகும். விந்து வெளியேற்றம் அவசியமில்;லை.
சம்மதமின்றி பாலியல் உடலுறவு இடம்பெற்றுள்ளது என்பதை நிரூபிப்பதற்கு உடல்ரீதியிலான காயங்கள் அல்லது போராடியதற்கான சான்று அவசியமில்லை.
ஒரு கணவரிடமிருந்து மனைவி சட்டரீதியாகப் பிரிந்திருந்தால் மட்டுமே, பாலியல்வல்லுறவுக்கு அக்கணவர் குற்றவாளியாவார். எனினும்> தனது மனைவிக்கு எதிரான அத்தகைய பாலியல் வன்முறைக்கு வீட்டு வன்முறையைத் தடுத்தல் சட்டத்தின் கீழ் அவர் பாத்திரவாளியாவார். உள்நாட்டு வன்முறை சட்டத்தின் தடுப்பு
மனோநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவருடன் பாலியல் உடலுறவை ஓர் ஆண் கொண்டிருந்தால்> அது பாலியல்வல்லுறவாகும்.
16 வயதுக்கு குறைந்த பெண் ஒருவருடன் பாலியல் உடலுறவில் ஆண் ஒருவர் ஈடுபட்டிருந்தால்> சம்மதத்திற்கு அக்கறையின்றி, பாலியல்வல்லுறவுக்கு அவர் குற்றவாளியாவார். இது சட்டபூர்வமான பாலியல்வல்லுறவாகக் குறிப்பிடப்படுகின்றது.
இச் சட்டம் சட்டபூர்வமாகப் பிரிந்திருக்கும் வேளை தனது கணவருடன் பாலியல் உடலுறவில் ஈடுபட்டிருக்கும் 16 வயதுக்கு குறைந்ததும், 12 வயதுக்கு கூடியதுமான திருணமான பெண் ஒருவருக்கு பொருத்தமானதல்ல. சகல ஏனைய இலங்கையர்களுக்கும் 18 வயதே பொருத்தமான ஆகக்குறைந்த திருமண வயது என்பதால், இது முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருத்தமானதாகும்.
இணக்கத்துடன் 16 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணுடன் அல்லது பெண்பிள்ளையுடன் பாலியல் உடலுறவு இடம்பெற்றிருக்கிறது என தோன்றுகின்ற விடயங்களில் கூட, பின்வருவனவற்றின் நிமித்தம் அது இன்னுமே பாலியல்வல்லுறவுக்கு ஈடாகும்:

 • நிர்ப்பந்தத்தின் அல்லது பயமுறுத்தலின் அல்லது அச்சுறுத்திப் பணிய வைத்திருப்பதன் மூலம் அல்லது மரணத்தின் அல்லது காயத்தின் அச்சத்தில் பெண்ணை வைத்திருப்பதன் மூலம் இணக்கத்தை ஓர் ஆண் பெறுதல்.
 • பெண் ஒருவர் பாதுகாவலில் அதாவது பாலியல்வல்லுறவு சம்பவம் தொடர்பில் பாதுகாவலில் இருக்கும் வேளை, பெண்ணின் இணக்கத்தை ஓர் ஆண் பெறுதல்.
 • ஒரு பெண்ணுக்கு குற்றமிழைப்பவரினால் அல்லது சில வேறு நபரினால் மதுபானம் அல்லது போதைப்பொருள் வழங்கப்பட்டு, அவர் மதிமயங்கி இருந்தால், அத்தகைய நிலைமையின் கீழ் பாலியல் உடலுறக்கு அவர் இணங்கினாலும் கூட, அத்தகைய நடவடிக்கை பாலியல்வல்லுறவுக்கு ஈடாகும்.
 • பிரச்சனையில் உள்ள பெண்ணின் கணவராக பாசாங்கு செய்வதன் மூலம், இணக்கத்தை ஓர் ஆண் பெறுதல்.

பாலியல்வல்லுறவின் சாட்சி

 

வழமையாக பெண் ஒருவர் மீது ஏனையோர் சமூகமளித்திருக்காத போது பாலியல்வல்லுறவு மேற்கொள்ளப்படுவதுடன், அதை நிரூபிப்பதற்கு சாட்சிகள் இருப்பதில்லை. ஆனால், பாலியல்வல்லுறவை நிரூபிப்பதற்கான வேறு வழிகள் உள்ளன. அவை வருமாறு:

வன்முறையை ஆண் ஒருவர் பயன்படுத்தியிருந்தால், பிறப்புறுப்பு பகுதியில் காயங்கள் அல்லது வேறு காயங்கள் (வெளிப்புறத்தில்) இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை).
இணக்கமின்றி பாலியல் உடலுறவு இடம்பெற்றுள்ளது என்பதை நிரூபிக்கக்கூடிய கிழிந்த ஆடைகள்.
பரிசோதிக்கப்படுகின்ற வேளையில் மருத்துவ உத்தியோகத்தருக்கு குற்றவாளியையிட்டு பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்தவரினால் செய்யப்பட்ட விபரம்
கையடக்கத் தொலைபேசிகளால் சம்பவம் பற்றிய காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தால், எடுக்கப்பட்டிருந்தால், அதையிட்டு ஏதாவது பதிவுகள் (ஓடியோ அல்லது வீடியோ)
பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்தவர் மீது காணப்படும் விந்து, தலைமயிர், இரத்தம் போன்ற குற்றமிழைத்தவரின் DNA சான்று
ஏனைய தருணங்களில் பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்தவரை நோக்கி குற்றமிழைத்தவரினால் முன்னர் மேற்கொள்ளப்பட்ட பயமுறுத்தல்கள் அத்துடன் ஏதும் இருந்தால், அதை ஆதரவளிப்பதற்கு மூன்றாம் தரப்பினரின் நற்சான்றுகள்
பெண் ஒருவர் மீது பாலியல்வல்லுறவு நிகழ்த்தப்பட்டு, பாலியல்வல்லுறவுடன் குற்றமிழைத்தவர் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தால், அப் பெண் பின்வருவனவற்றை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்:


குற்றத்தை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆணின் அடையாளம்
குழு பாலியல்வல்லுறவைப் பொறுத்தளவில் சம்பந்தப்பட்ட சகல ஆண்களினதும் அடையாளம். சகல ஆண்களையும் அடையாளங் காண முடியாவிட்டாலும், வேறு சாட்சியம் மூலம் அவர்களை அடையாளங் காண்பது சாத்தியமானதாகும்.
பெண் மீது உண்மையாகவே பாலியல்வல்லுறவு நிகழ்த்தப்பட்டுள்ளது.
நடவடிக்கைக்கு பெண் இணங்கவில்லை.


குற்றத்தீர்ப்பொன்றைப் பெறுவதில் உள்ள சில கஷ்டங்கள்:


சாட்சியம் குறித்த சட்டத்தில் பால்நிலையிலான ஒருதலைப்பட்சம்
மூர்க்கத்தனமான குறுக்கு விசாரணை
சாட்சியம் குறித்த பாரபட்சத்திலான விதிகள்
இணக்கமின்மையை நிரூபிப்பதில் உள்ள கஷ்டம்
சில வேளைகளில் நீதியைப் பெறுவதிலிருந்து பெண்களைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற நடைமுறைகளினதும், வழக்கத்தினதும் மீதான சட்டம் செயற்படுகின்றது. பாலியல்வல்லுறவின் குற்றத்தை நிரூபிப்பதற்கு பெண்ணின் அல்லது பெண்பிள்ளையின் இணக்கமின்மை முக்கியமானது. எனவே, இப்பிரச்சனை மீது அவர் மூர்க்கத்தனமான குறுக்குவிசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். எனினும், சட்டபூர்வமான பாலியல்வல்லுறவைப் பொறுத்தளவில், திருமணமான பெண்களின் விடயத்தில் புறநீங்கலாக, 16 வயதுக்கு குறைந்த சிறுமியொருவருடன் பாலியல் உடலுறவு இடம்பெற்றுள்ளது என்று மட்டுமே வழக்கைத் தொடர்ந்துள்ள தரப்பு நிரூபிக்க வேண்டும் என்பதால், இணக்கம் முக்கியமல்ல. பாலியல்வல்லுறவை மேற்கொண்டதாகக் கூறப்படுபவரின் அதிகாரத்தின் அல்லது கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாவலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணின் மீதான பாலியல்வல்லுறவின் சூழ்நிலையொன்றில், இணக்கமின்மையை நிரூபிப்பது வழக்கைத்தொடரும் தரப்புக்கு கஷ்டமாக விளங்குகின்றது. இப்பிரச்சனை குறித்து சட்ட நிபுணர்கள் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளதுடன், பெண்ணினால் அல்லது பெண்பிள்ளையினால் உடலுறவுக்காக வெளிப்படுத்தப்படும் இணக்கத்தை நிரூபிப்பதற்கு எதிர்த்தரப்பு கோரப்படுகின்றவாறு, பாதுகாவல்ரீதியான பாலியல்வல்லுறவின் வழக்குகளில் நிரூபிக்கும் பொறுப்பில் நகர்வொன்றுக்கான இந்திய அணுகுமுறையை முன் மொழிகின்றனர் (மூலம்: Violence, Law & Women’s Rights in South Asia. சாவித்திரி குணசேகர (பதிப்பு) SAGE வெளியீடுகள்@ 2004).
பெண்ணின் ஒழுக்கமும், வேறு ஆண்களுடன் ஏற்கனவே அவர் இணக்கத்துடன் உடலுறவைக் கொண்டிருந்தார் என்ற உண்மையும் குற்றத்திற்கு தொடர்பானவை அல்ல ஆனால், சாட்சியம் குறித்த விதிகளில் உள்ள ஒருதலைப்பட்சமானது உண்மையில் இவ்விடயம் மீது சாட்சியம் வழிநடத்தப்படுவதில் முடிவடையக்கூடும்.

 

பாலியல்வல்லுறவுக்கு தண்டனை என்ன?


ஆகக்குறைந்தது ஏழு (7) வருடங்களைக் கொண்ட கடுங்காவல் சிறைத்தண்டனை என்பதுடன், இது ஆகக்கூடுதலாக அபராதத்துடன் இருபது (20) வருடங்களுக்கு நீடிக்கப்படலாம்.
விளைவிக்கப்பட்ட காயங்களுக்கு பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைக்கின்றவருக்கு நீதிமன்றத்தினால் நிர்ணயிக்கப்பட்ட தொகையொன்றை நஷ்டஈடாகச் செலுத்துமாறும் குற்றமிழைத்தவருக்கு கட்டளையிடப்படும். காயங்கள் உடல்ரீதியாக இருக்க வேண்டும் அல்ல.

பின்வரும் தருணங்களில், பாலியல் வல்லுறவுக்கான ஆகக்குறைந்த தண்டனை பத்து (10) வருடங்களுக்கு குறையாத கடுங்காவல் சிறைத்தண்டனையாக இருக்கும்.

 • அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் அல்லது அதிகாரத்திலான நிலையொன்றில் உள்ள நபர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ நிலையை அனுகூலத்திற்கு எடுத்து, உத்தியோகபூர்வரீதியில் தனது பாதுகாவலில் உள்ள பெண் ஒருவர் மீது பாலியல்வல்லுறவை இழைத்தல் அல்லது பெண் ஒருவரை முறைகேடாக கீழ்ப்படுத்தி அவர் மீது பாலியல்வல்லுறவை இழைத்தல்.
 • விளக்கமறியல் கூடமொன்றின் அல்லது சட்டத்தினால் அல்லது சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட பாதுகாவலின் வேறு இடத்தின் அல்லது பெண்கள் அல்லது சிறுவர் நிறுவனமொன்றின் (எவ்விதத்திலும் விபரிக்கப்பட்டுள்ளவாறு பெண்களையும், சிறுவர்களையும் வரவேற்பதற்கும், அவர்களைப் பராமரிப்பதற்குமான ஒரு நிறுவனம்) நிருவாகத்தின் உறுப்பினர் ஒருவர் தனது பதவிநிலையை அனுகூலத்திற்கு எடுத்து, அத்தகைய விளக்கமறியல் கூடத்தில், இடத்தில் அல்லது பாதுகாவல் நிறுவனத்தில் தங்கியுள்ள ஏதாவது பெண் மீது பாலியல்வல்லுறவை இழைத்தல்.
 • வைத்தியசாலையொன்றின் நிருவாகத்தில் உள்ள நபர் ஒருவர் அல்லது பணியாளர் ஒருவர் தனது பதவிநிலையை அனுகூலத்திற்கு எடுத்து, அவ் வைத்தியசாலையில் உள்ள பெண் ஒருவர் மீது பாலியல்வல்லுறவை இழைத்தல்.
 • பெண் ஒருவர் கர்ப்பிணியாக இருக்கின்றார் என அறிந்திருந்தும், அவர் மீது பாலியல் வல்லுறவை இழைத்தல்.
 • பதினெட்டு வயதுக்கு குறைந்த பெண் ஒருவர் மீது ஆண் ஒருவர் பாலியல்வல்லுறவை இழைத்தல்.
 • உடல்ரீதியாக அல்லது உளவியல்ரீதியாக அங்கவீனமான பெண் ஒருவர் மீது ஆண் ஒருவர் பாலியல்வல்லுறவை இழைத்தல்.
 • குழு பாலியல்வல்லுறவு இடம்பெறுகின்ற விடத்து. ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களினால் அல்லது குழுவினால் இழைக்கப்படும் பாலியல்வல்லுறவின் குற்றத்தினால் குழு பாலியல்வல்லுறவு இடம்பெறுகின்றது. எனவே, அத்தகைய குற்றத்தை இழைப்பதில் குழுவில் உள்ள ஏனையோர் உடந்தையாக இருக்கும் வரை பாலியல் உடலுறவின் உண்மையான நடவடிக்கையில் ஒரு நபர் மட்டுமே போதுமானதாகும்.

பாலியல்வல்லுறவுக்கான ஆகக்குறைந்த தண்டனை 15 வருடங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பதுடன், இதில் பாலியல்வல்லுறவுக்கு உட்பட்டவர் 16 வயதுக்கு குறைவாகவும், குற்றமிழைத்தவருக்கு பின்வருவோராகவும் இருத்தல்:

 • மகள்/பேத்தி
 • சுவீகார மகள்/சுவீகாரப் பேத்தி
 • சகோதரி/ஒன்றுவிட்ட சகோதரி/சுவீகாரச் சகோதரி
 • மருமகள்/பெறாமகள்/ஒன்றுவிட்ட மருமகள்/ஒன்றுவிட்ட மருமகள்/சுவீகார மருமகள்/ பெறாமகள்
 • தாயின்/தந்தையின் மறுமணத்தின் மூலமான மகள்/தாயின்/தந்தையின் மறுமணத்தின் மூலமான பேத்தி
நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டவாறு, நஷ்டஈட்டைச் செலுத்துவதற்கு தவறுதல், ஆகக்கூடுதலாக இரு (2) வருடங்களைக் கொண்ட சிறைத்தண்டனையொன்றின் நீடிப்பொன்றை விளைவிக்கும்.

 

குறைந்தபட்ச தண்டனைகள் பொருத்தமானவை அல்ல என்றும், தண்டனையை வழங்குவதில் நீதிமன்றம் தனது தற்றுணிபை ஈடுபடுத்தலாம் என்றும் உயர் நீதிமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளது. தற்போது சில வேளைகளில் குற்றமிழைப்பவர்களுக்கு எதிராக பாலியல்வல்லுறவுத் தண்டனைகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இதனால் குற்றமிழைத்தவர் சிறைக்குச் செல்லமாட்டார். இந்நிலைமை திருப்திகரமற்றது எனக் கருதப்படுவதுடன், பாலியல்வல்லுறவு வழக்குகளில் தண்டனையளிப்பது மீது நீதிமன்றங்களுக்கு வழிகாட்டல்களை நாடுவதற்கான சர்ச்சைகளைம் கிளப்பியுள்ளன. விசாரணை நடைமுறை அனேகமாக நேரத்தை எடுக்கும் ஒன்றாகும். சில வழக்குகள் தீர்ப்பளிப்பதற்கு முன்னதாக பல வருடங்களுக்கு விசாரணை நடக்கும். சம்பவத்தின் உண்மைகளையும், விபரங்களையும் பற்றி பெருமளவு தடவைகள் கூறுமாறு குறிப்பாக குறுக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்ட– தப்பிப்பிழைத்தவர் கேட்கப்படலாம். இது எல்லை மீறுகின்ற, உணர்ச்சியை மழுங்கடிக்கின்ற அத்துடன் உயர்ந்தளவில் வேதனையான தன்மையாகும் பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்தவருக்கு கடுமையான மனஅழுத்தத்திலான, உளவியல்ரீதியிலான அத்துடன் பொருளாதார விரும்பத்தகாத விளைவின் காரணமாக, எதிர்காலத்தில் பாலியல் குற்றங்களை நோக்கி நீதித்துறையினாலும், சட்ட முறைமையினாலும் அதிகளவு பால்நிலை கூருணர்விலான நிலை ஏற்றுக்கொள்ளப்படும் என Actnow இணையதளம் நம்பிக்கை கொண்டுள்ளது.