தாக்குதலை, குற்றவியல் அதிகாரத்தை அல்லது சொற்களை அல்லது செயற்பாடுகளைப் பயன்படுத்தி பாலியல்தன்மையொன்றின் வரவேற்கப்படாத செயற்பாடொன்றே பாலியல் தொந்தரவு என்பதுடன், இது தொந்தரவு செய்யப்படும் நபருக்கு தொல்லையையும், மனவலியையும் விளைவிக்கின்றது.

பெறுனருக்கு சட்டமானது வரவேற்கத்தக்கதல்ல, இழிவுபடுத்துகின்றது, வெறுக்கத்தக்கது, அருவருக்கத்தக்கது அத்துடன் விலக்கிவைக்கின்றது என்ற போதிலும், அதைப் பாராட்டுதலாக, தீங்கற்றதாக, கேலியானதாக ‘வழமையானதாக’ அத்துடன் புகழ்ச்சியளிப்பதாகக் கூட குற்றமிழைப்பவர் நோக்கக்கூடும். இருந்த போதிலும், பாலியல் தொந்தரவு குறித்த சட்டம் வரவேற்கத்தக்கதே.

குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இடையில் தனிப்பட்ட அல்லது பொது வாழ்க்கையில் அத்துடன் வேலைத்தளத்தில், பொது இடங்களில் மற்றும் போக்குவரத்தில் பாலியல்தொந்தரவு இடம்பெறலாம். ஆண்களும், பெண்களும் குற்றமிழைத்தவர்களாக விளங்கலாம்.

 எது பாலியல் தொந்தரவில் அடங்குகின்றது?

வேலைத்தளத்திலும் பொதுப் போக்குவரத்திலும் பாலியல் தொந்தரவு பின்வருவனவற்றை உள்ளடக்கலாம்:


வரவேற்கத்தகாத உடல்ரீதியிலான தொடர்பும், அணுகுதலும்
செவிமடுக்கும் நபரை அசௌகரியமாக்கும் பாலியல்தன்மையொன்றின் சொற்கள் அல்லது கருத்துக்கள்
அசிங்கமான பகிடிகள் மற்றும் ஆபாசமானவிதத்தில் நடத்தல்
ஆபாசப் படங்களைக் காட்டுதல்
பாலியல் சலுகைகளை வற்புறுத்திக்கேட்டல் அல்லது வேண்டுதல்
துஷ்பிரயோகத்திலான தனிப்பட்ட அத்துடன் அல்லது ஆபாசமான ‘ஈமெயில்’களையும், புகைப்படங்களையும் விநியோகித்தல்
பாலியல்தன்மையைக் கொண்ட ஏதாவது வேறு வரவேற்கப்படாத உடல்ரீதியிலான, வாய்மொழியிலான அல்லது வாய்மொழி சாராத நடத்தை


தொழில் வழங்குனரினதும், நிறுவனங்களினதும் பொறுப்பு

தொழில்வழங்குனர்களும், அதிகாரத்தில் உள்ள பொறுப்பான நபர்களும் மற்றும் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் பின்வருவன மூலம் பாலியல் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு சட்டபூர்வரீதியில் கட்டுப்பட்டுள்ளனர்:


பாதுகாப்பான வேலைசெய்யும் சூழலொன்றை வழங்குதல்.
வேலைத்தளத்தில் நடத்தையினதும், வழக்கங்களினதும் நியதியொன்றைத் தாபித்தல்.
பாலியல் தொந்தரவுக்கு எதிராக உடனடியான நடவடிக்கைகளை எடுத்தல்.
முறைப்பாடுகளை இரகசியமாகக் கருதுதல்

பாலியல் தொந்தரவை மூறையிடுதல்

பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொந்தரவு இடம்பெற்றால் போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு முறையிடப்படலாம் – ‘ஹொட்லைன்’: 011-7555550, பொலிஸ் ‘ஹொட்லைன்’: 119, பொலிஸ் சிறுவர், பெண்கள் பணியகம் – ‘ஹொட்லைன்’: 011-2444444.
கல்வி மேற்கொள்ளப்படும் இடங்களில் பாலியல் தொந்தரவு இடம்பெற்றால், விசாரணையொன்றுக்கும், நடவடிக்கையொன்றுக்கும் அதிபருக்கு/பீடாதிபதிக்கு/பதிவாளருக்கு அல்லது பணிப்பாளருக்கு அதை முறையிடுங்கள். பாலியல் தொந்தரவு மீது சட்டக்கோவையொன்றை ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனம் கொண்டிருக்கலாம். இத்தயைதொரு சட்டக்கோவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பதுடன், அப்படியிருந்தால் வழங்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றுங்கள்.
இதே போல கல்வி நிறுவனத்தினால் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நீங்கள் பொலிசில் முறைப்பாடு செய்யலாம்.
வேலைத்தலத்தில் பாலியல் தொந்தரவு இடம்பெற்றிருந்தால், உங்கள் மேற்பார்வையாளருக்கு அல்லது மனித வள முகாமையாளருக்கு அல்லது ஏதாவது வேறு அதிகாரங் கொண்டவருக்கு முறைப்பாடு செய்யுங்கள். தொந்தரவு குறித்த கொள்கையொன்றை கம்பெனி அல்லது நிறுவனம் கொண்டிருந்தால், அது பற்றிய நடைமுறையைப் பின்பற்றுங்கள். அதே வேளை பொலிசிலும் நீங்கள் முறைப்பாடு செய்யலாம்.
அங்கீகாரம் பெற்ற மருத்துவ உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து விரைவிலேயே மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். ஏதாவது தலைமயிர், உடல் திரவங்கள், தசைநார்கள் மற்றும் வேறு சான்று இருந்தால், அவற்றைச் சேகரிப்பதற்கான கடமையொன்றை மருத்துவ உத்தியோகத்தர் கொண்டுள்ளார். ஏதாவது பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் இருந்தால் சட்ட மருத்துவ உத்தியோகத்தருக்கும், பொலிசுக்கும் அறிவிப்பதற்கான கடமையொன்றை மருத்துவ உத்தியோகத்தர் கொண்டுள்ளார்.
அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்யுங்கள்..
பொலிஸ் முறைப்பாடொன்றைச் செய்வதற்கு முன், பொலிஸ் நிலையத்தில் பெண்கள், சிறுவர் பிரிவொன்று உள்ளதா என விசாரியுங்கள் அல்லது ஆண் கான்ஸ்டபிள் ஒருவருக்குப் பதிலாக பெண் கான்ஸ்டபிள் ஒருவருடன் பேசுவதற்கு விரும்பினால் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கேளுங்கள். சம்பவத்தின் சகல விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். சேவை வழங்குநர்கள்
வாக்குமூலத்தில் கைச்சாத்திடுவதற்கு முன் அதை வாசிப்பதை உறுதிசெய்யுங்கள்.
வாக்குமூலமொன்றைப் பெறுவதற்கு மேலதிகமாக, உடல்ரீதியிலான சான்றினைப் பொலிசார் சேகரிப்பதுடன், யாரேனும் சாட்சிகள் இருந்தால் அவர்களுடனும் பேசுவார்கள்.
உங்கள் விடயத்தின் சூழ்நிலைகளைப் பொறுத்து, அதிகளவு மணித்தியாலங்களை பொலிசாரின் விசாரணை எடுக்கும். சில கேள்விகள் எல்லை மீறுவதாக இருக்கும் என்பதுடன், உங்கள் மீதான தாக்குதல் பற்றிய விபரங்களை அந்த உத்தியோகத்தர்கள் பல தடவைகள் விசாரிப்பார்கள். குற்றமிழைத்தவருக்கு எதிரான மிகப் பலமான சாத்தியத்திலான வழக்கை தாக்கல் செய்வதற்காக துல்லியமாக ஒவ்வொரு விபரத்தையும் பெறுவதற்கான அவசியம் இருப்பதனால், விரிவான விதத்தில் விசாரணை இடம்பெற்றாலும், அது அனேகமாக நியாயப்படுத்தப்படுகின்றது.
இது சாத்தியமான விரைவில் உங்களால் நினைவில் வைத்திருக்கக்கூடிய ஒவ்வொரு விபரத்தையும் எழுதுவதற்கு உதவுகின்றது. இதனால் நீங்கள் விபரங்களைப் பொலிசாருக்கு பரிமாறிக்கொள்ளலாம்.
முறையிடும் நடைமுறையின் (தொடர்பு) ஊடாக சில தாபனங்கள் ஆதரவை வழங்குகின்றன. உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் அவை தெளிவுபடுத்தும். சட்டங்கள் சென்று.


பாலியல் தொந்தரவு முறையிடப்படாமல் போவதற்கான காரணங்கள்


முறைப்பாடுகளுக்கு குற்றவியல் நீதித்துறை முறைமையும், சட்டத்தை வினைப்படுத்தும் சம்பந்தப்பட்டவர்களும் ஊக்கமளிப்பதில்லை.
விடயங்களை மோசமாக்கச் செய்யும் என்ற அச்சம்
ஒருவரின் பெயருக்கும், ஒருவரின் மரியாதைக்கும் கெடுதல் ஏற்படும் அச்சம்
வேலைத்தளத்தில், கல்வி மேற்கொள்ளப்படும் இடங்களில் அல்லது பொது இடங்களில் பொதுவான நிகழ்வொன்றாக அதனை ஏற்றுக்கொள்ளல்
சட்ட நிவாரணம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதிருத்தல்
வேலைத்தளங்களில், கல்வி மேற்கொள்ளப்படும் இடங்களில் பாலியல் தொந்தரவைத் தடுப்பது குறித்த கொள்கைகள் இல்லாதிருத்தல்
ஆக்கிரமிப்பாளரை விட பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்தவர்களை நிந்திக்கும் பொதுவான வழக்கம்
குறைந்த சுய மதிப்பு


பாலியல் தொந்தரவு மீதான சட்டம்

அரசியலமைப்பின் உறுப்புரை 12 (2)இன் பிரகாரம், அவரது பால் மீதான அடிப்படையில் நபர் ஒருவருக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படும் போது, அது சமத்துவத்திற்கு அத்தகைய நபரின் அடிப்படை உரிமையின் மீறலொன்றாகும்.
1995இன் இல. 22இன், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 345இன் கீழ் பாலியல் தொந்தரவு குற்றவியல்ரீதியான தண்டனைக்குரியதாகும்.

“தாக்குதலை, குற்றவியல் பலாத்காரத்தை அல்லது தொந்தரவு செய்யப்படும் நபருக்கு இடைஞ்சலை விளைவிக்கின்ற சொற்களை அல்லது செயற்பாடுகளை’’ பாலியல் தொந்தரவு அடக்கியுள்ளது.” இது பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது:

  • அதிகாரத்தில் உள்ள நபர் ஒருவரினால் பயன்படுத்தப்படும் சொற்களினால் அல்லது செயற்பாட்டினால் வரவேற்கப்படாத பாலியல் அணுகுதல்கள் (உதாரணம்: பொலிஸ், ஆயுதப்படையைச் சேர்ந்த ஆளணியினர், பாடசாலை உத்தியோகத்தர்கள், மருத்துவ உத்தியோகத்தர்கள், இத்தியாதி)
  • வேலைத்தலங்களில் வரவேற்கப்படாத பாலியல் அணுகுதல்கள்
  • ஆபாசமான ‘இன்டர்நெற்’றின், ‘ஈமெயில்’களின் தவறான உபயோகம் அல்லது தொந்தரவு செய்ய பயமுறுத்துவதற்கு அல்லது குழப்புவதற்கு பாலியல் தன்மையொன்றைச் சார்த்துரைத்தல் ஆகியனவற்றை தண்டனைச் சட்டக்கோவையில் உள்ள பாலியல் தொந்தரவு உள்ளடக்குகின்றது.
சட்டத்தின் கீழ் பாலியல் தொந்தரவை ஊக்கப்படுத்துதல் அல்லது கவனியாமல்விடுதல் ஒரு குற்றமாகும்.
1998இன் 20ஆம் இலக்க கல்விசார் நிறுவனங்களில் பகிடிவதையையும், வன்முறையின் வேறு வடிவங்களையும் தடைசெய்தல் சட்டத்தின் கீழ், கல்விசார் நிறுவனமொன்றின் யாரேனும் மாணவரை அல்லது பணியாள் உறுப்பினர் ஒருவரை பகிடிவதை செய்யும் வேளை, பாலியல் தொந்தரவை நபர் ஒருவர் விளைவித்தால், பத்து (10) வருடங்களைக் கொண்ட குறைந்தபட்ச தண்டனையொன்று அவருக்கு வழங்கப்படுவதுடன், நீதிமன்றத்தினால் நிர்ணயிக்கப்பட்டவாறு தொகையொன்றை நஷ்டஈடாகச் செலுத்துவதற்கு உத்தரவிடப்படுவார்.வேலைத்தளத்தில் பாலியல் தொந்தரவு


தீர்மானத்திற்கு, இணக்கத்திற்கு அல்லது வழக்குத் தொடுப்பதற்கு நடைமுறையொன்றில் பாலியல் தொந்தரவுக்கான பூஜ்ய சகிப்புத்தன்மையிலான நடத்தையின் சட்டக்கோவையைத் தாபிப்பதற்கும், பாலியல் தொந்தரவுக்கு எதிராக உடனடியான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், முறைப்பாடுகளை இரகசியத்தன்மையுடன் கருதுவதற்கும் பாதுகாப்பான வேலை செய்யும் சூழலொன்றை வழங்குவது தொழில்வழங்குனரின் கடமையொன்றாகும்.
வேலைத்தளத்தில் பாலியலைத் திருப்திப்படுத்துமாறு கோருவது 1980இன் இலஞ்சச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும். இலங்கைக் குடியரசு எதிர் அப்துல் ரஸாக் குத்தூப்டீன் வழக்கில், தொழில் பதவியேற்றத்திற்கான கரிசனையாக பாலியல் சலுகைகளுக்கு கோரிக்கை விடுத்தமை ‘இலஞ்சமாக’ பொருள்விளக்கமளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் மேற்பார்வையாளராக, தொழில் வழங்குனரின் முகவராக, இன்னொரு பகுதியில் மேற்பார்வையாளராக, இணை-ஊழியராக அல்லது ஊழியர் அற்றவராக தொந்தரவு செய்பவர் விளங்கலாம்.
பாதிக்கப்பட்டவருக்கு பொருளாதாரச் சேதமின்றி அல்லது அவரைப் பதவியிலிருந்து நீக்குவதாகக் கூறி பாலியல் தொந்தரவு இடம்பெறலாம்.
கூட்டு உடன்படிக்கையில் உரிய ஸ்தானமளிக்கப்பட்ட பிணக்கு தீர்வுப் பொறிமுறையானது பாலியல் தொந்தரவைச் சம்பந்தப்படுத்தும் சம்பவங்களில் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, 1997இன் பணியாளர் கூட்டு உடன்படிக்கையில் (சகல எழுதுவினைஞர் பணியாளருக்குப் பொருத்தமானது) அடங்கியுள்ள ஒழுக்காற்று விசாரணைகள் மீதான பிரிவு 18, மற்றும் 1998இன் தொழில்கூட்டு உடன்படிக்கையில் (சகல தோட்டத் தொழிலாளர்களுக்கு பொருத்தமானது) ஒழுக்காற்று நடவடிக்கை மீதான பிரிவு 18 ஆகிய இரண்டும் பாலியல் தொந்தரவைக் கவனத்திற்கெடுப்பதற்கு இடைவெளியை வழங்குகின்றன என பொருள் விளக்கமளிக்கப்படலாம்.

 

வேலைத்தளத்தில் உட்பட பாலியல் தொந்தரவைத் தடைசெய்யும் சர்வதேசச் சட்டங்களும், சமவாயங்களும்

கௌரவத்துடன் வேலை செய்வதற்கான உரிமை அடிப்படை மனித உரிமையொன்றாகும் [மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம், உறுப்புரை 23(1)]. மேலும், கௌரவத்துடன் வேலை செய்வதற்கான உரிமைக்கு உறுப்புரை 5இல் உரிய ஸ்தானமளிக்கப்பட்டுள்ளவாறு கொடூரமாகவும், மனிதத்தன்மையற்றதாகவும், தரம் குறைந்ததாகவும் கருதப்படுவதிலிருந்து சுதந்திரமாக இருப்பதற்கு ஊழியருக்கான அவசியத்தை இன்றியமையாததாக்குகின்றது. இது சம்பந்தத்தில், பெறுனருக்கு தரம் குறைந்ததாக, இழிவுபடுத்துகின்றதாக, வரவேற்க முடியாததாக கருதப்படுகின்ற பாலியல் தன்மையொன்றின் ஏதாவது நடத்தையானது பாலியல் தொந்தரவாக விளக்கமளிக்கப்பட முடியும்.
பெண்களுக்கு எதிரான சகல விதமான பாரபட்சங்களை இல்லாதொழித்தல் மீதான சமவாயம் (பெண்கள் சமவாயம்) தொழிலில் பாகுபாட்டினைத் தடைசெய்வதுடன், வேலைசெய்யும் நிலைமைகளில் ஆரோக்கியத்தினதும், பாதுகாவலினதும் பாதுகாப்புக்கான உரிமைக்கு உத்தரவாதமளிக்கின்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை வரையறுப்பதில், “வேலையிலும், கல்விசார் நிறுவனங்களிலும் அல்லது வேறு எங்கினும் பாலியல் தொந்தரவையும், பயமுறுத்தலையும்” பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழித்தல் மீதான பிரகடனம் விளக்கமாக உள்ளடக்குகின்றது.
வேலைத்தளத்தில் பாரபட்சத்தின் வடிவமொன்றாக, பாலியல் தொந்தரவை சர்வதேச தொழில் தாபன சமவாயங்களும், சமவாயங்களினதும், தீர்மானங்களினதும் பிரயோகம் மீதான நிபுணர்களின் சர்வதேச தொழில் தாபனக் குழுவின் விதந்துரைப்புகளும் முதனிலைகளாக கவனத்திற்கு எடுத்துள்ளன. சர்வதேசத் தொழில் தாபன சமவாயங்களின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பனதும், ஆரோக்கியமானதுமான உரிமையின் மீறலொன்றாக பாலியல்ரீதியில் தொந்தரவு செய்யும் நடத்தையும் கருதப்பட முடியும். மேலும் தகவலுக்கு தயவுசெய்து சர்வதேச தொழில் தாபன இணையதளத்தைப் பார்க்க: http://stopvaw.org/International_Labor_Organization2.html.