ஆட்களைச் சுரண்டும் நோக்கத்திற்காக சக்தியையும், பலாத்காரத்தையும், மோசடியையும், வஞ்சகத்தையும் அல்லது வேறு வழிவகைகளையும் பயன்படுத்துவதன் மூலம், ஆள் ஒருவரை சேர்த்துக் கொள்கின்ற, ஏற்றி இறக்குகின்ற, இடமாற்றுகின்ற, அடைக்கலம் வழங்குகின்ற அல்லது வரவேற்கின்ற செயற்பாடொன்றை மனித ஆட்கடத்தல் சம்பந்தப்படுத்துகின்றது.

உள்நாட்டு சிறுவரை உட்படுத்துகின்ற பாலியல் உல்லாசப்பயணம் உட்பட முதனிலையாக உடலுழைப்புக்கும், வர்த்தகப் பாலியல் சுரண்டலுக்கும் இலங்கையின் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்களும் கடத்தப்படுகின்றார்கள் என போதைப்பொருள்களினதும், குற்றத்தினதும் மீதான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் [(United Nations Office on Drugs and Crime (UNODC)] தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையொன்று குறிப்பிடுகின்றது. வீட்டு வேலைக்காகவும், நிருமாணத் தொழிலுக்காகவும் மற்றும் தொழிற்சாலைத் தொழிலுக்காகவும் மத்திய கிழக்குக்கும், சிங்கப்பூருக்கும் மற்றும் வேறு நாடுகளுக்கும் தொழிலுக்காக ஆட்கடத்தல் பற்றிய வளர்ச்சியுறும் கரிசனைகளும் உள்ளன. ஆங்கிலத்தில 3D (Dirty, Dangerous and Demeaning) தொழில்கள் எனக் கூறப்படுகின்ற அழுக்கடைந்த, அபாயகரமான மற்றும் இழிவான தொழில்களுக்கான மலிவான உடலுழைப்புக்கான கிராக்கியினால் இலங்கை போன்ற நாடுகளில் ஆட்கடத்தல் நிலைமை மோசமடைந்துள்ளது.

மூலம்: http://www.unodc.org/unodc/en/human-trafficking/2011/legal-and-policy-review---responses-to-human-trafficking-in-bangladesh-india-nepal-and-sri-lanka.html
கடத்துவதைத் தடுப்பதற்கும், அடக்குவதற்கும் அத்துடன் தண்டிப்பதற்குமான ஐக்கிய நாடுகளின் மேலதிக விதிகளின் உறுப்புரை 3(அ) ஆட்கடத்தலை பின்வருமாறு வரையறுக்கின்றது:


பயமுறுத்தலின் வழிவகைகளினால் அல்லது பலாத்காரத்தின் உபயோகத்தினால் அல்லது பலாத்காரத்தின், ஆட்கடத்தலின், மோசடியின், வஞ்சித்தலின், அதிகார துஷ்பிரயோகத்தின் அல்லது ஊறுபடுந்தன்மையின் நிலையொன்றின் அல்லது சுரண்டல் நோக்கத்திற்கு இன்னொரு நபருக்கு மேலாக கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கும் நபர் ஒருவரின் இணக்கத்தைச் சாதிப்பதற்கு கொடுப்பனவுகளை அல்லது நன்மைகளை வழங்குவதன் அல்லது பெறுதலின் வேறு வடிவங்களினால் ஆட்களைச் சேர்த்துக்கொள்ளுதல், ஏற்றிஇறக்குதல், இடமாற்றுதல், தஞ்சமளித்தல் அல்லது பெறுதல். ஏனையோரின் சுரண்டல் அல்லது பாலியல் தொழில் அல்லது பாலியல் சுரண்டலின் வேறு வடிவங்கள், கட்டாயப்படுத்தப்பட்ட உடலுழைப்பு அல்லது சேவைகள், அடிமைத்தனம் அல்லது அடிமைத்தனத்திற்கு ஒத்த வழக்கங்கள், மட்டற்ற கீழ்ப்படிவு அல்லது பிறப்புறுப்புக்களை அகற்றுதல் ஆகியவற்றை குறைந்தபட்சமாக சுரண்டல் உள்ளடக்க வேண்டும்.

 

“பாலியல் தொழில்” போன்று ஆட்கடத்தலும் ஒரே விடயமா?

ஆட்கடத்தலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பாலியல் தொழில் தொடர்பானதாகும். ஆனால், அது ஒரே மாதிரியான குற்றம் என்ற அவசியமில்லை.

ஆட்கடத்தப்படும் பாதிக்கப்பட்டவர்கள் அனேகமாக நிர்ப்பந்தம், பலாத்காரம், அல்லது மோசடி ஆகியன ஊடாக வர்த்தகப் பாலியல் தொழிலின் அங்கமாக விளங்குகின்றனர்.

பெண்களையும், சிறுவர்களையும் சுரண்டும் பெருமளவு வடிவங்களில் கட்டாயப்படுத்தப்பட்ட பாலியல் தொழிலும் ஒன்றாகும். பெண்களைக் கடத்துதல் அல்லது பாலியல் வர்த்தகத்தில் பெண்களின் அடிமைத்தனம் ஆகியன பற்றி நாம் பேசும் போது, தன்னிச்சை சாராத மட்டற்ற கீழ்ப்படிவு, கடன்சார்ந்த அடிமைத்தனம், பணியாட்களை வேலைக்கமர்த்தல் அல்லது அடிமைத்தனம் ஆகிய நோக்கங்களுக்காக கட்டாயப்படுத்தலின், பலாத்காரத்தின் அல்லது மோசடியின் உபயோகத்தின் ஊடாக உடலுழைப்புக்காக அல்லது சேவைகளுக்காக" மனிதப்பிறவிகளின் விற்பனையை, மனிதர்களை ஏற்றி இறக்குவதை இதற்கு நாம் சேர்த்துக்கொள்கின்றோம்.

ஆட்கடத்தல் என்பது “சட்டவிரோதமான புலம்பெயர்வு” அல்லது “கடத்துதல்” போன்ற விடயங்களுக்கு சமமானதா?

அந்நிய நாட்டுக்கு கடத்துவதோ அல்லது சட்டவிரோதமான குடியகல்வோ மனித ஆட்கடத்தல் அல்ல. சர்வதேச எல்லையொன்றைக் கடக்கும் நோக்கத்திற்காக கடத்தப்படுகின்ற நபருக்கும், ஓநாய்களுக்கும் அல்லது வேறு முகவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்திலான உறவொன்றுடன் கடத்தல் சம்பந்தப்படுகின்றது. பயண இலக்கிலான நாட்டில் இருக்கும் போது, முன்கூட்டியே கட்டணம் கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளதன் காரணத்தினால் தனிப்பட்டவர்களுக்கு இடையிலான உறவு முடிவுக்கு வருகின்றது.
மறுபுறத்தில் மனித ஆட்கடத்தலானது, நபர் ஒருவருக்கு எதிரான ஒரு குற்றமாகும். இதில் தன்னிச்சைசாராத மட்டற்ற கீழ்ப்படிவு, கடன்சார்ந்த அடிமைத்தனம், பணியாட்களை வேலைக்கமர்த்தல் அல்லது அடிமைத்தனம் ஆகிய நோக்கங்களுக்கு கட்டாயப்படுத்தலின், பலாத்காரத்தின் அல்லது மோசடியின் உபயோகத்தின் ஊடாக “உடலுழைப்புக்காக அல்லது சேவைகளுக்காக” நபர் விற்கப்படுகின்றார் அல்லது ஏற்றிஇறக்கப்படுகின்றார்.

ஆட்கடத்தல் சுற்றில் சம்பந்தப்பட்டுள்ள மக்கள்

தனிப்பட்ட செயற்பாட்டாளர்களின் வலைப்பின்னல்கள் - ஆட்கடத்தலை வலைப்பின்னல்கள் வசதிப்படுத்தி, பராமரிக்க முடியும். ஏற்றிஇறக்கல், உல்லாசப்பயணம், ஊடகம்/தொடர்பாடல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியன உட்பட, பலதரப்பட்ட தனிப்பட்டவர்களையும், நிறுவனங்களையும் இத்தகைய வலைப்பின்னல்கள் சம்பந்தப்படுத்த முடியும். இவற்றில் சில வருமாறு: ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு மக்களை நகர்த்தும் வாடகை வண்டிச் சாரதிகள், முச்சக்கர வண்டிச் சாரதிகள், ‘ட்ரக்’ சாரதிகள்.
வகைப்படுத்தப்பட்ட செய்திப்பத்திரிகை, வானொலி விளம்பரங்கள், இணையதளம் ஆகியன ஊடாக ஆட்சேர்ப்பின் முறையொன்றாகப் பயன்படுத்தப்படுகின்ற ஊடகம்.
பாதுகாப்பு இல்லங்களாகப் பயன்படுத்தப்படுகின்ற ஹொட்டேல்களும், சாலையோர உணவு விடுதிகளும்.
போலியான ஆவணங்களை வழங்கும் மோசடிக்காரர்கள்.

பொதுச் செயற்பாட்டாளர்களின் வலைப்பின்னல்கள்

போலியான ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், குடியகல்வுக் கட்டுப்பாடுகளை மீறி நாட்டிலிருந்து சட்டவிரோதமாக உள்வரவுக்காக/வெளியேற்றத்திற்காக ஒழுங்குசெய்வதன் மூலமும், விசாரணைகளிலிருந்து மதுபானசாலை, மற்றும் பாலியல் தொழில் விடுதி உரிமையாளர்களைப் பாதுகாப்பதன் மூலமும் ஆட்கடத்துவோருக்கு மோசடியிலான குடியகல்வு, பொலிஸ் மற்றும் வேறு அரசாங்க உத்தியோகத்தர்கள் உதவி செய்யலாம்.

 

இலங்கையில் ஆட்கடத்தலின் பொதுவான வடிவங்களின் உதாரணங்கள்

தனிப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன


தொழிலொன்று சமன்மல்லிக்கு வாக்களிக்கப்பட்டது ஆனால், பாலியல் தொழில் விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டார்


கலேவலவில் வாழும் ஓர் இளம் பெண்பிள்ளையே சமன்மல்லி. அவருக்கு ஒரு தொழிலை நகரத்தில் பெற்றுத்தருவதாக அவரின் மாமா ரூபரத்ன அவருக்கு கூறுகின்றார். பின்னர் அவரது பெற்றோரின் சம்மதத்துடன் அவரைக் கொழும்புக்கு கூட்டிச்செல்கிறார். கொழும்பில் சேனசிங்கவின் வீட்டில் அவரை அவரின் மாமா வைத்திருக்கின்றார். தனது நண்பர்களுடன் பாலியல் உடலுறவை வைத்துக் கொள்ளும்படி அவரை சேனசிங்க கட்டாயப்படுத்துகின்றார். பின்னர் தனது மாமா தன்னை சேனசிங்கவுக்கு 25,000 ரூபாவுக்கு வழங்கியிருப்பதாகவும், சேனசிங்கவின் வீடு ஒரு பாலியல் தொழில் விடுதி எனவும் சமன்மல்லி அறிகின்றார்.

 

கட்டாயப்படுத்தப்பட்ட பாலியலுக்காக சட்டவிரோதமாகத் தத்தெடுத்தல்

 

இளம் பெண்பிள்ளையான சுமுதுக்கு பெற்றோர் இல்லை என்பதுடன், அவர் தனது மாமியுடன் வாழ்கின்றார். அவரது மாமிக்கு தெரிந்த ஒருவர் தத்தெடுப்பதற்காக வெளிநாட்டுக்காரர் ஒருவரிடம் சுமுதுவை அழைத்துச் செல்கின்றார். பின்னர் பெண் ஒருவரிடம் சுமுதுவை அவர் கையளிக்க, அப் பெண் இன்னொரு கிராமத்திற்கு சுமுதுவை அழைத்துச் சென்றார். அங்கு சுமுது வீடொன்றில் மறைத்து வைக்கப்படுவதுடன், அங்கு வரும் ஆண்களுடன் பாலியலை மேற்கொள்ளும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டார்.

 

சீமாட்டியாக மாறிய சிறந்த கருணையுள்ளம் கொண்டவர்

 

ரூபாவின் தாயார் வீட்டில் இருந்த வெளியேறிய போது தனது சகோதரனுடன் விடப்பட்ட ரூபாவுக்கு பதினொரு வயது மட்டுமே. அவரது சகோதரனினாலும், அவரது மனைவியினாலும் ரூபா தொடர்ச்சியாக தொந்தரவு செய்யப்பட்டார். 'நம்பிக்கையற்ற நிலையில் எனது அம்மாவைத் தேடி வீட்டை விட்டுச் சென்றேன். பஸ் தரிப்பிடத்தில் ஓர் அன்பான பெண்மணி என்னுடன் பேசினார். நான் ஏன் அங்கு நிற்கிறேன் என அவரிடம் கூறினேன். அவர் தன்னால் எனக்கு உதவி செய்ய முடியும் என்று கூறவே, நான் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டேன். அவர் என்னை ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்றார். அங்கு வெளியார்களுடன் பாலியலை வைத்துக் கொள்ளும்படி என்னைப் பலாத்காரப்படுத்தினார்கள்."

 

அடிமைத்தனத்திற்கு சகோதரிகள் கடத்தப்பட்டனர்

 

பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த இரு இளம் பெண்பிள்ளைகளான கிஷானியும், ஷானிகாவும் தமது பெற்றோரின் நிதிப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக தொழில் ஒன்றைப் பெறுவதில் ஆர்வங்காட்டினர். பெற்றோருக்கு தெரிந்த அயலவர் ஒருவர் ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு அவர்களைக் கூட்டிச்செல்வதாகக் கூறினார். அவர்களை அவர் கொழும்புக்கு கூட்டிச் சென்று, ஓர் இரவுக்கு தனது வீட்டில் அவர்களை தங்க வைத்தார். கொழும்பில் அவரது உறவினர்களினால் அவர்கள் நன்கு கவனிக்கப்பட்டார்கள். அடுத்த நாள் அவர்கள் கட்டுநாயக்கவுக்கு செல்ல வேண்டும் என்று கூறி அயலவரினால் பஸ் ஒன்றில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது பயணம் வீடொன்றில் முடிவடைந்தது. அங்கு சகல வீட்டு வேலையையும் செய்வதற்காக வீட்டின் உள்ளே பூட்டி வைக்கப்பட்டார்கள். ஒவ்வொரு இரவும் நான்கு மணித்தியாலங்களுக்கே நித்திரை கொள்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெளியே செல்வதற்கு ஒரு போதுமே அனுமதிக்கப்படவில்லை

ஏமாற்றப்பட்ட புலம்பெயர் ஊழியர்

 

மூன்று வருடங்களுக்கு தனியார் நிறுவனமொன்றில் சுத்திகரிப்பாளராக கவிதா பணியாற்றினார். மைக்கேல் என்ற உல்லாசப்பயணியை 29 வயதாக இருந்த போது கவிதா சந்தித்தார். சிங்கப்பூரில் மாதமொன்றுக்கு 200 அமெரிக்க டொலரைக் கொண்ட சம்பளமொன்றுக்கு தனது வீட்டில் வேலையொன்றைத் தருவதாக மைக்கேல் கூறினார். ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் லீவு வழங்கப்படும் என்றும், அவர் தனது நண்பர்களைச் சந்திக்கலாம் என்றும், தனது குடும்பத்தினருடன் பிரயாணம் செய்யலாம் என்றும் மைக்கேல் வாக்குறுதி அளித்தார். கவிதாவுக்கான |விசா| ஒன்றை மைக்கேல் ஒழுங்குசெய்ததுடன், அவரது டிக்கெட்டுக்காக கொடுப்பனவும் செய்தார். விரைவிலேயே மைக்கேல் பொய் கூறியுள்ளதாக கவிதா உணர்ந்து கொண்டார். வாரமொன்றுக்கு ஏழு நாட்களும், நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 12 மணித்தியாலங்களும், சில வேளைகளில் நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்களும் வேலை செய்யுமாறு மைக்கேல் நிர்ப்பந்தித்தார். அதிகளவு மணித்தியாலங்கள் அவர் வேலை செய்த போதிலும், அவருக்கு மாதமொன்றுக்கு 100 அமெரிக்க டொலர்கள் மட்டுமே கொடுப்பனவு செய்யப்பட்டதுடன், அவருக்கு விடுமுறைகள் கூட கிட்டவில்லை. கவிதாவின் கடவுச்சீட்டை மைக்கேல் எடுத்து வைத்திருந்தார். சுகவீனமுற்ற போது கூட வேலை செய்யுமாறு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

 

ஆட்கடத்தலை முறையிடுதல்

அங்கீகாரம் பெற்ற மருத்துவ உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து விரைவிலேயே மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். ஏதாவது தலைமயிர், உடல் திரவங்கள், தசைநார்கள் மற்றும் வேறு சான்று இருந்தால், அவற்றைச் சேகரிப்பதற்கான கடமையொன்றை மருத்துவ உத்தியோகத்தர் கொண்டுள்ளார். ஏதாவது சந்தேகிக்கப்படுகின்ற ஆட்கடத்தல் இருந்தால் சட்ட மருத்துவ உத்தியோகத்தருக்கும், பொலிசுக்கும் அறிவிப்பதற்கான கடமையொன்றை மருத்துவ உத்தியோகத்தர்கள் கொண்டுள்ளார்கள்.
அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்யுங்கள்.
பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்தவர் 18 வயதுக்கு குறைந்தவர் என்றால், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (தொடர்பு) சம்பவம் முறையிடப்பட வேண்டும்.
பொலிஸ் முறைப்பாடொன்றைச் செய்வதற்கு முன், பொலிஸ் நிலையத்தில் பெண்கள், சிறுவர் பிரிவொன்று (தொடர்பு) உள்ளதா என விசாரியுங்கள் அல்லது ஆண் கான்ஸ்டபிள் ஒருவருக்குப் பதிலாக பெண் கான்ஸ்டபிள் ஒருவருடன் பேசுவதற்கு விரும்பினால் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கேளுங்கள். சம்பவத்தின் சகல விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
வாக்குமூலத்தில் கைச்சாத்திடுவதற்கு முன் அதை வாசிப்பதை உறுதிசெய்யுங்கள்.
வாக்குமூலமொன்றைப் பெறுவதற்கு மேலதிகமாக, உடல்ரீதியிலான சான்றினைப் பொலிசார் சேகரிப்பதுடன், யாரேனும் சாட்சிகள் இருந்தால் அவர்களுடனும் பேசுவார்கள்.
உங்கள் விடயத்தின் சூழ்நிலைகளைப் பொறுத்து, அதிகளவு மணித்தியாலங்களைப் பொலிசாரின் விசாரணை எடுக்கும். சில கேள்விகள் எல்லை மீறுவதாக இருக்கும் என்பதுடன், உங்கள் மீதான தாக்குதல் பற்றிய விபரங்களை அந்த உத்தியோகத்தர்கள் பல தடவைகள் விசாரிப்பார்கள். குற்றமிழைத்தவருக்கு எதிரான மிகப் பலமான சாத்தியத்திலான வழக்கை தாக்கல் செய்வதற்காக துல்லியமாக ஒவ்வொரு விபரத்தையும் பெறுவதற்கான அவசியம் இருப்பதனால், விரிவான விதத்தில் விசாரணை இடம்பெற்றாலும், அது அனேகமாக நியாயப்படுத்தப்படுகின்றது.
இது சாத்தியமான விரைவில் உங்களால் நினைவில் வைத்திருக்கக்கூடிய ஒவ்வொரு விபரத்தையும் எழுதுவதற்கு உதவுகின்றது. இதனால் நீங்கள் விபரங்களைப் பொலிசாருக்கு பரிமாறிக்கொள்ளலாம்.
முறையிடும் நடைமுறையின் ஊடாக சில தாபனங்கள் ஆதரவை வழங்குகின்றன. உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் அவை தெளிவுபடுத்தும். சேவை வழங்குநர்கள் சென்று. சட்டங்கள் சென்று. பாதுகாப்பு திட்டங்களும்.


நபர்களில் ஆட்கடத்தல் மீதான சட்டம்

2006இன் 16ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 360C இல் பிரதான ஆட்கடத்தல் சட்டம் காணப்படுகின்றது.

தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 360 Cஇன் பிரகாரம்:

 

பணத்திற்காக அல்லது ஏதாவது வேறு நன்மைக்காக இன்னொரு நபரை வாங்கும், விற்கும் அல்லது பண்டமாற்று செய்யும் யாரேனும் ஒருவர் ஆட்கடத்தலின் குற்றவியல் குற்றத்தை இழைக்கின்றார்.
யாரேனும் நபரை வாங்குவதற்கு, விற்பதற்கு அல்லது பண்டமாற்று செய்வதற்கு இன்னொரு நபரைத் தூண்டுகின்ற அல்லது அவருக்கு உதவுகின்ற நபர் ஒருவரும் ஆட்கடத்தலின் குற்றத்திற்கு குற்றவாளியாவார்.
யாரேனும் நபரை வாங்குதலை, விற்பனை செய்வதை அல்லது பண்டமாற்று செய்வதை முன்னேற்றுவதற்கு, வசதிப்படுத்துவதற்கு அல்லது தூண்டுவதற்கு ஏதாவது செய்தல் ஒரு குற்றமாகும்.
நிர்ப்பந்திக்கப்பட்ட உடலுழைப்புக்காக, அடிமைகளாக, அவர்களது உறுப்புக்களுக்காக, பாலியல் தொழிலுக்காக அல்லது பாலியல் சுரண்டலின் ஏதாவது வேறு நடவடிக்கையின் பொருட்டு ஆட்களைப் பயன்படுத்துவதற்காக ஆட்சேர்த்தல், ஏற்றிஇறக்குதல், இடமாற்றுதல், தஞ்சம் அளித்தல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல் ஆகியன ஒரு குற்றமாகும்.
நிர்ப்பந்திக்கப்பட்ட உடலுழைப்பு, அடிமைத்தனம், பாலியல் தொழில், ஒருவரின் உறுப்புக்களை விற்றல் ஆகியவற்றினுள் யாரேனும் ஒருவரைத் தள்ளுமுகமாகப் பயமுறுத்துதல், கட்டாயப்படுத்தல், தவறாக வழிநடத்துதல் அல்லது ஊறுபடுந்தன்மையைச் சுரண்டுதல் ஒரு குற்றவியல் குற்றமாகும்.
சிறுவர்கள் என்று வரும்போது, சிறுவர் இணக்கத்தை வழங்கியிருக்கிறாரா அல்லது இல்லையா என்பது அற்பமானதாகும்.

பலர்மோ மேலதிக விதிகள் (Palermo Protocol) என அறியப்பட்ட சர்வதேச கருவியின் மொழி மீது தண்டனைச் சட்டக்கோவைக்கான 2006 திருத்தம் ஈர்த்தெடுக்கின்றது. எனினும், மேலதிக விதியின் வரைவிலக்கணம் பரந்ததாகும். வயது வந்த ஒருவரைப் பொறுத்தளவில், இணக்கம் சம்பந்தப்பட்டதல்ல என இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவை குறிப்பிடவில்லை.
2005இன் 30ஆம் இலக்க பாலியல் தொழிலுக்காக பெண்களையும், சிறுவர்களையும் ஆட்கடத்துவதை தடுக்கின்றதும், எதிர்க்கின்றதுமான சமவாயத்தை இலங்கைப் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இச் சட்டம் இன்னுமே அமுலுக்கு வராத அதேவேளை, அது வரும்போது SAARC சமவாயத்திற்கு பலனை வழங்கும். வெற்றிகரமான வழக்குத் தொடர்தலுக்கு ஆதரவளிப்பதற்கும், பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்தவர்களைப் பாதுகாப்பதற்கும் புலம்பெயர்வுக்கான சர்வதேசத் தாபனத்துடனான கூட்டுடன், மனித ஆட்கடத்தல் மீதான ஒரு தேசிய செயலணி உருவாக்கப்பட்டுள்ளது

 

ஆட்கடத்தலைத் தடைசெய்யும் சர்வதேசச் சட்டங்கள்


உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் (1948). இது அடிமைத்தனம், மட்டற்ற கீழ்ப்படிவு, அடிமை வர்த்தகம் அத்துடன் சித்திரவதை அல்லது கொடூரமாக, மிருகத்தனமாக அல்லது தரக்குறைவாகக் கருதுதல் அல்லது தண்டித்தல் ஆகியனவற்றைத் தடைசெய்கின்றது.
http://www.un.org/en/documents/udhr/index.shtml
நபர்களின் ஆட்கடத்தலின் அடக்குமுறைக்கும், ஏனையோரின் பாலியல் தொழிலின் சுரண்டலினதும் ஐ.நா. சமவாயம் (1949). இது பெண்களில் ஆட்கடத்தலினதும், பாலியல் தொழிலின் சுரண்டலினதும் சகல வடிவங்களுக்கு எதிரான பலதரப்பட்ட நடவடிக்கைகளை வழங்குகின்றது. இந்த சமவாயத்தை 1958 ஓகஸ்ட் 7 அன்று இலங்கை உறுதிப்படுத்தியது.
http://www.unhcr.org/refworld/docid/3ae6b38e23.html
பெண்களுக்கு எதிரான சகல விதமான பாரபட்சங்களை இல்லாதொழித்தல் மீதான சமவாயம் (1979) உறுப்புரை 6. திட்டவட்டமாக பெண்களின் ஆட்கடத்தலைக் கையாளும் ஏற்பாடொன்றை உள்ளடக்குவதுடன், பெண்களில் ஆட்கடத்தலினதும், பெண்களின் பாலியல் தொழிலுக்கான சுரண்டலினதும் சகல வடிவங்களையும் அடக்குவதற்கான சட்டவாக்கம் உட்பட சகல பொருத்தமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்காக சகல ஏற்றுக்கொள்ளும் நாடுகளை வேண்டுகின்றது. 1981இல் CEDAWஐ இலங்கை உறுதிப்படுத்தியது.
http://www.un.org/womenwatch/daw/cedaw/text/econvention.htm
சிறுவரின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் சமவாயம் (1989). இது ஏதாவது நோக்கத்திற்காக அல்லது ஏதாவது வடிவத்தில் சிறுவர்களைக் கடத்துவதையும், விற்பனை செய்வதையும் அல்லது வாத்தகம் செய்வதையும் தடுப்பதற்காக பாலியல் சுரண்டலினதும், பாலியல் துஷ்பிரயோகத்தினதும் சகல வடிவங்களிலிருந்து சிறுவரைப் பாதுகாப்பதற்காக சகல உறுதிப்படுத்தும் நாடுகளைக் கோருகின்றது. இச் சமவாயத்தை இலங்கை 1991 ஜூலை 12 அன்று உறுதிப்படுத்தியது.
http://www.unhcr.org/cgi-bin/texis/vtx/refworld/rwmain?docid=3ae6b38f0&page=search
மாற்று தேசிய ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சமவாயம் மற்றும் ஆட்கடத்தலைத் தடுப்பதற்கும், அடக்குவதற்கும், தண்டிப்பதற்குமான பலர்மோ மேலதிக விதிகள் (2000). 2010 டிசம்பர் 13இலிருந்து இச் சமவாயத்தில் இலங்கையும் கையொப்பமிட்டுள்ளது.
http://www.unodc.org/documents/treaties/UNTOC/Publications/TOC%20Convention/TOCebook-e.pdf
பாலியல் தொழிலுக்கு பெண்களும், சிறுவர்களும் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கும், எதிர்த்து போராடுவதற்குமான SAARC சமவாயம், 2002: பெண்களும், சிறுவர்களும் கடத்தப்படுவதைத் தடுத்தல், தடைசெய்தல் மற்றும் அடக்குதல் அத்துடன் ஆட்கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்களைத் தாய்நாட்டுக்கு அனுப்புதல், புனர்வாழ்வளித்தல் அத்துடன் குறிப்பாக மூலத்தையும், இடைத்தங்கலையும் மற்றும் செல்லுமிடத்தையும் கொண்ட நாடுகளாக விளங்கும் SAARC உறுப்பு நாடுகளில் சர்வதேச விபச்சார வலைப்பின்னல்களில் பெண்களும், சிறுவர்களும் பயன்படுத்தப்படுவதைத் தடுத்தல் என பலதரப்பட்ட அம்சங்களைப் பயனுறுதிவாய்ந்ததாக கையாள்வதற்கு உறுப்பு நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதே இந்த சமவாயத்தின் நோக்கெல்லையாகும்.
http://www.humantrafficking.org/publications/424