பிறிதொரு அடையாளத்துடன், ஒரு பெண்ணாக, ஆணாக அல்லது நபராக இருக்கும் ‘பால்நிலையிலான’ அடையாளத்திற்கு தொடர்பினைக் கொண்டுள்ள வன்முறையின் குறிப்பான வகையை பால்நிலை-அடிப்படையிலான வன்முறை விபரிக்கின்றது. பால்நிலை-அடிப்படையிலான வன்முறை என்ற பதத்தின் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ளுமுகமாக, பால்நிலை என்ற பதத்தின் அர்த்தத்தை முதலில் புரிந்துகொள்வது எமக்கு அவசியமாகும்.

 பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறையைப் பால்நிலை அடிப்படையிலான வன்முறையாக புரிந்து கொள்ளுதல்

பெண்களுக்கு மேலாக ஆண்களுக்கு அதிகாரத்தை வழங்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான சமமற்ற அதிகார உறவில் பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறையின் அடிப்படையைக் காரணி சார்ந்துள்ளது. இது இயற்கையானதல்ல, ஆனால் அனேகமாக, சமூகரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், பெருமளவு கலாசாரங்களிலும், சமூகங்களிலும் சட்டங்களினாலும், கொள்கைகளினாலும் தவறாகச் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. இந்த சமமற்ற அதிகார உறவினை மேம்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் இது பங்களிக்கின்றது. சமூகத்தில் பொருத்தமானவை, அவசியமானவையும் கூட எனக் கருதப்படுகின்ற குறிப்பான வகிபங்குகளுக்கும், நடத்தைக்கும் பெண்களும், ஆண்களும் குறித்தொதுக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு இட்டுச்செல்லும் பால்நிலைகளின் சமமின்மையை ஆக்கிரமித்துள்ள சமூகக் கட்டுமானமும், சட்ட நடைமுறைகளும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையாகவும், பாகுபாடாகவும் விபரிக்கப்படுகின்றன.

அவர்களது பால்நிலை மற்றும், பால்நிலை அடையாளத்தின் (பால்நிலைக்கான இணைப்பு) காரணமாக, குறிப்பான வழியொன்றில் பெண்களும், பெண்பிள்ளைகளும் வன்முறையை அனுபவிக்கின்றனர். இதேபோல, பெண்களும், பெண்பிள்ளைகளும் ஈடில்லாதவிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையின் காரணமாக, பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறை [Violence Against Women and Girls (VAWG)], பால்நிலை அடிப்படையிலான வன்முறை [Gender Based Violence (GBV)] என்றே கருதப்படுகின்றது.இலங்கையில் பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிராக வன்முறையின் மிகவும் பொதுவான வகைகள்:

வீட்டு வன்முறை
பாலியல் தொந்தரவு
பாலியல்வல்லுறவு
முறை தவறிய உடலுறவு
பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம்
ஆட்கடத்தல்
வன்முறை தொடர்பிலான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்