பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறையானது அவர்களது மனித உரிமைகளின் பாரதூரமான மீறலொன்றாகும். இது உடல்ரீதியானதும், பாலியல்ரீதியானதும், உளவியல்ரீதியானதுமான கெடுதல் அல்லது வன்முறையின் பயமுறுத்தல், பலாத்காரம் அல்லது சுதந்திரத்தைப் பறித்துக்கொள்ளல் ஆகியனவற்றை உள்ளடக்குவதுடன், பொதுவான அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் இடம்பெறவும் முடியும்.

பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறை ஏதாவது தனித்த நாட்டுக்கு அல்லது பிராந்தியத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதுடன், பலதரப்பட்ட சமூக-அரசியல், பொருளாதார, கலாசார, சமய, பழங்குடி மற்றும் இனத்துவ வழக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக பெண்களும், பெண்பிள்ளைகளும் வேறுபட்ட விதத்தில் அனேகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். இதனால் தான் இது பால்நிலை அடிப்படையிலான வன்முறை என வரையறுக்கப்படுகின்றது.

யார் பாதிக்கப்படுகின்றார்?

ஒவ்வொரு வயதையும், வகுப்பையும், இனத்துவத்தையும், சமயத்தையும், சாதியையும் மற்றும் அமைவிடத்தையும் சேர்ந்த பெண்களும், பெண்பிள்ளைகளும் பாதிக்கப்படலாம் என்பதுடன், பாதிக்கப்படுகின்றார்கள்.


பெண்களுக்கு எதிரான வன்முறையின் மிகவும் பொதுவான வகைகள் எவை?

பெண்களுக்கு எதிரான வன்முறையின் பெருமளவு வகைகள் உள்ளன. அவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: அந்நியோன்யமான துணைவர் மூலமான வன்முறை, பாலியல்வல்லுறவு, திருமணம்சார்ந்த பாலியல்வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை அத்துடன்/அல்லது தொந்தரவு, சீதனம் தொடர்பான வன்முறை, வாழ்க்கைதுணைசாராத வன்முறை, வீட்டு வேலையாட்களுக்கு எதிரான வன்முறை, கேலிசெய்தல், ஆட்கடத்தல் மற்றும் ஆபாசப்புகைப்படம் போன்ற சுரண்டலின் வேறு வடிவங்கள், சமூக வழக்கத்திற்கும், கலாசாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் அத்துடன்/அல்லது சமயத்திற்குமான மேற்கோளினால் நியாயப்படுத்தப்பட்டு, கெடுதலை விளைவிக்கும் வழக்கங்களின் காரணமாக பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறை.


பெண்பிள்ளைகளுக்கு எதிரான வன்முறையின் பொதுவான வகைகள்

மேலதிகமாக, பெண்பிள்ளைகளுக்கு எதிரான வன்முறை மேற்படி விடயத்தை உள்ளடக்குவதுடன், பெண் சிசுக்கொலையையும், இளமைப்பருவத் திருமணத்தையும், நிர்ப்பந்தத்திலான திருமணத்தையும் உள்ளடக்கலாம்.


இது எங்கு இடம்பெறலாம்?

பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறை ஏதாவது இடத்தில் இடம்பெறலாம். இது வீட்டில், குடும்பத்தில் அல்லது சனசமூகத்தில், வேலை செய்யும் இடத்தில், பொது இடங்களில் மற்றும் போக்குவரத்தில், விசேடமாக இயற்கை அழிவுகளில், உள்நாட்டு மோதலில், யுத்தத்தில் மற்றும் கிளர்ச்சிகள் போன்ற பொது குழப்பங்களின் தருணங்களில் அத்துடன் இச் சூழ்நிலைகளின் காரணமாக உள்ளகரீதியாக இடம்பெயரும் போது இடம்பெறலாம் http://www.saynotoviolence.org/issue

 

பெண்களுக்கு எதிரான வன்முறையினதும், பால்நிலை அடிப்படையிலான வன்முறையினதும் முறைமையான வரைவிலக்கணங்கள்

பாகுபாட்டின் பிரச்சனையை முனைவுபடுத்துவதன் மூலம் பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறையைப் புரிந்துகொள்வதற்கான அடித்தளத்தை பெண்களின் பாகுபாட்டின் சகல வடிவங்களை ஒழித்தல் மீதான சமவாயம் பெண்களுக்கு எதிரான சகல விதமான பாரபட்சங்களை இல்லாதொழித்தல் மீதான சமவாயம் [The Convention on the Elimination of All Forms of Discrimination of Women ] (CEDAW).

பெண்களுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட பாகுபாடு:

“........... அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, குடியியல் அல்லது ஏதாவது வேறு துறை ஆகியவற்றில் ஆண்களினதும், பெண்களினதும் சமத்துவத்தினதும், மனித உரிமைகளினதும், அடிப்படைச் சுதந்திரங்களினதும் அடிப்படையொன்றின் மீது, அவர்களது திருமணம்சார்ந்த நிலைக்கு அக்கறையின்றி பெண்கள் அங்கீகரிக்கப்படுவதை, மகிழ்ச்சியடைவதை அல்லது பழகிக்கொள்வதை பலவீனப்படுத்தும் அல்லது செல்லாததாக்கும் விளைவை அல்லது நோக்கத்தை கொண்டுள்ள பால்நிலையின் அடிப்படை மீது செய்யப்பட்டுள்ள ஏதாவது வேறுபாடு, தவிர்ப்பு அல்லது கட்டுப்பாடு.”
எனினும், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை அங்கீகரிப்பதற்கும், வரையறுப்பதற்குமான முதலாவது சர்வதேச ஆவணமாக 1993இல் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் மீதான ஐ.நா. பிரகடனம் [UN Declaration on the Elimination of Violence against Women (DEVAW)] விளங்குகின்றது.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கான வரைவிலக்கணம் வருமாறு:

உறுப்புரை 1
பெண்களுக்கு உடல்ரீதியான, பாலியல்ரீதியிலான அல்லது உளவியல்ரீதியிலான கெடுதலை அல்லது கஷ்டத்தை விளைவிக்கின்ற அல்லது அனேகமாக விளைவிக்கக்கூடிய அத்துடன் பொதுவான அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் இடம்பெற்றாலும், அத்தகைய செயற்பாடுகளின் பயமுறுத்தல்களும், சுதந்திரத்தின் பலாத்காரத்திலான அல்லது தன்னிச்சையிலான கவர்ந்துகொள்ளலும் உட்பட பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் ஏதாவது செயற்பாடு.


உறுப்புரை 2
பெண்களுக்கு எதிரான வன்முறையானது பின்வருவனவற்றுக்கு மட்டுப்படாமல் சூழப்பட்டுள்ளது என புரிந்து கொள்ளப்பட வேண்டும்:
 
(அ) குடித்தனத்தின் சிறுமிகளின் பாலியல் துஷ்பிரயோகம், சீதனம்-தொடர்பான வன்முறை, திருமணம் சார்ந்த பாலியல்வல்லுறவு, பெண் பிறப்புறுப்பைச் சிதைத்தல் மற்றும் பெண்களுக்கு கெடுதலான வேறு பாரம்பரியத்திலான வழக்கங்கள், வாழ்க்கைத்துணைசாராத வன்முறை மற்றும் சுரண்டல் தொடர்பான வன்முறை ஆகியன உட்பட குடும்பத்தில் இடம்பெறும் உடல்ரீதியானதும், பாலியல்ரீதியிலானதும் மற்றும் உளவியல்ரீதியிலானதுமான வன்முறை.
(ஆ) வேலையிலும், கல்விசார் நிறுவனங்களிலும் மற்றும் வேறு எங்கினும் பாலியல்வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தொந்தரவு, மற்றும் பயமுறுத்தல், பெண்களைக் கடத்துதல் மற்றும் நிர்ப்பந்தத்திலான பாலியல் தொழில் ஆகியன உட்பட பொது சனசமூகத்தினுள் இடம்பெறுகின்ற உடல்ரீதியானதும், பாலியல்ரீதியிலானதும் மற்றும் உளவியல்ரீதியிலானதுமான வன்முறை.
(இ) இழைக்கப்படுகின்ற அல்லது அது எங்கெங்கு நடந்தாலும் அரசாங்கத்தினால் கவனிக்காமல் விடப்படுகின்ற உடல்ரீதியானதும், பாலியல்ரீதியிலானதும் மற்றும் உளவியல்ரீதியிலானதுமான வன்முறை.
வன்முறையின் பரந்த வரைவிலக்கணமொன்றைப் பிரகடனம் வழங்குகின்றது.
பாரம்பரியத்திலான அல்லது சமயத்திலான கரிசனைகளின் காரணங்களின் மீது வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான தமது கடப்பாடுகளை அரசாங்கங்கள் தவிர்க்க முடியாது.
விரிவான தடுத்து வைத்தலிலான அணுகுமுறைகளை விருத்திசெய்வதற்கும், தேசிய செயல் திட்டமொன்றைத் தாபிப்பதற்குமான கடமை, மற்றும் ஒத்துழைப்பின் சர்வதேச வலைப்பின்னலொன்றைத் தாபிப்பதற்கான கடமை ஆகியன உட்பட, பரந்த வீச்செல்லையிலான பொறுப்புக்களை அரசாங்கங்கள் கொண்டுள்ளன.http://www.un.org/documents/ga/res/48/a48r104.htm
பொது மற்றும் தனிப்பட்ட சமுதாயப் படிநிலையில் வன்முறையை அடக்கி அரசாங்க மற்றும் அரசாங்கம்சாராத செயற்பாட்டாளர்களின் நடத்தைக்கு அரசாங்கம் பொறுப்பாகும்.

 

பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான பால்நிலை-அடிப்படையிலான வன்முறையின் அல்லது வன்முறையின் பிரதான வடிவங்கள்

 

வழமையாக பின்வருமாறு வன்முறை வகைப்படுத்தப்படுகின்றது:

உடல்ரீதியான
உணர்வுப்பூர்வமான/உளவியல்ரீதியான
பாலியல்ரீதியான
வாய்மொழியிலான
பொருளாதாரரீதியான (கவர்ந்து கொள்ளல்)
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான வன்முறை (இன்டர்நெற், கையடக்கத் தொலைபேசிகள் போன்றன)


பெண்களும், பெண்பிள்ளைகளும் வன்முறையின் பல்-எண்ணிக்கையிலான வடிவங்களை அனுபவிக்கக்கூடும். உதாரணமாக, வீட்டு வன்முறையைக் கொண்ட சம்பவமொன்றில், உடல்ரீதியான, பாலியல்ரீதியிலான, உளவியல்ரீதியிலான மற்றும் பொருளாதாரரீதியான வன்முறையை பெண் ஒருவர் உருமாதிரியாக அனுபவிப்பார். எனினும், உணர்வுப்பூர்வமான/உளவியல்ரீதியிலான வன்முறையை மட்டும் அல்லது வன்முறையின் ஒரு வடிவமைப்பினை மட்டும் பெண் ஒருவர் அனுபவித்தால், அது இன்னுமே பெண்களுக்கு எதிரான வன்முறை என்பதுடன், உதாசீனம் செய்யப்படலாகாது.

அரசியலமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பற்றி மேலும் வாசிக்க


இலங்கையில் பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிராக வன்முறையின் மிகவும் பொதுவான வகைகள்:

வீட்டு வன்முறை
பாலியல் தொந்தரவு

பாலியல்வல்லுறவு
முறை தவறிய உடலுறவு
பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம்
ஆட்கடத்தல்
வன்முறை தொடர்பிலான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்