அரசியலமைப்பும் நிறுவனங்களும்

இலங்கையில் பெண்களின் சமத்துவத்தையிட்டு அரசியலமைப்பு அங்கீகாரமும், பெண்களுக்கு எதிரான வன்முறையும்


இலங்கையில் அரசாங்க இயந்திரத்தினதும், அரசாங்கச் செயற்பாட்டினதும் வழிகாட்டும் தத்துவமொன்றாக பெண்களின் பால்நிலைச் சமத்துவமும், பாகுபாடு காட்டாமையும் இருக்க வேண்டும்.
1978இல் பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பின் உறுப்பு 12 (2)ஆனது பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு பதிலிறுப்பதில் பயன்படுத்தப்படக்கூடிய பால்நிலையின் காரணம் (அத்துடன் வேறு குறித்துரைக்கப்பட்ட காரணங்கள்) மீது பாகுபாடு காட்டாமையின் தத்துவத்தைக் குறித்துரைக்கின்றது.
பால்நிலைச் சமத்துவம் மீதான உறுப்புரை 12ஆனது பெண்களுக்கு எதிரான வன்முறையின் விடயங்களில் பயன்படுத்தப்படவில்லை. எனினும், சித்திரவதை மீதான உறுப்புரை 11ஆனது அரசாங்க உத்தியோகத்தர்களின் பாதுகாவலில் உள்ள வேளையில் பொதிந்துள்ள பாலியல்வல்லுறவாகவும், பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகமாகவும் சித்திரவதையை பொருள் விளக்கமளித்துள்ளது.
அரசியலமைப்பின் உறுப்புரை 11ஆனது சித்திரவதையிலிருந்தும், மிருகத்தனத்துடன் தரக்குறைவாக நடத்துவதிலிருந்து சுதந்திரத்திற்கான உரிமையை அங்கீகரிக்கின்றது.
அரசியலமைப்பின் உறுப்புரை 17இன் பிரகாரம் அத்தியாயம் IIIஇன் ஏற்பாடுகளின் கீழ் உரித்தினைக் கொண்டுள்ள அத்தகைய ஆளுக்கான அடிப்படை உரிமையொன்றின் நிறைவேற்று அல்லது நிருவாக நடவடிக்கையினால் மீறலின் அல்லது நிகழவுள்ள மீறலின் தொடர்பில் உறுப்புரை 126இல் வழங்கப்பட்டுள்ளவாறு உயர் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு ஒவ்வொரு ஆளும் உரித்தினைக் கொண்டிருக்க வேண்டும்.

 

இலங்கைப் பெண்கள் பட்டயம்

1993 மார்ச் 3 அன்று இலங்கைப் பெண்கள் பட்டயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பெண்களுக்கு எதிரான பாகுபாட்டின் சகல வடிவங்களை அகற்றுவதற்கும், அவற்றுக்குத் தொடர்பான முக்கியமான பிரச்சனைகளைக் கவனத்திற்கெடுப்பதற்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பினை பெண்கள் உரிமை சம்பந்தமான அரசாங்கத்தின் பிரதான கொள்கை அறிக்கை வெளிப்படுத்துகின்றது.பால் அடிப்படையிலான பாகுபாட்டினை ஒழிப்பதையும், பால்நிலைச் சமத்துவத்தை சாதிப்பதையும் பட்டயம் குறிக்கோளாகக் கொண்டுள்ளதுடன், ஏழு பரந்த துறைகளில் அவதானிக்கப்படவுள்ள நியமங்களைத் தாபிக்கின்றது.

அரசியல் மற்றும் குடியியல் உரிமைகள்

குடும்பத்தினுள் உரிமைகள்

கல்விக்கும், பயிற்சிக்குமான உரிமை

பொருளாதாரச் செயற்பாட்டுக்கும், நன்மைகளுக்குமான உரிமை

சுகாதாரப் பராமரிப்புக்கும், போஷாக்குமான உரிமை

சமூகப் பாகுபாடின்மையிலிருந்து பாதுகாப்புக்கான உரிமை

பால்நிலை அடிப்படையிலான வன்முறையிலிருந்து பாதுகாப்புக்கான உரிமை

பெண்களுக்கான ‘உரிமைகளின் சட்டமூலம்’ ஒன்றே பெண்கள் பட்டயமாகும். பிறவற்றுள்ள பால்நிலையில் காரணங்கள் மீதான பாகுபாடின்மையையிட்டு நாட்டின் அரசியலமைப்பு உத்தரவாதம் இருந்த போதிலும், அத்துடன் பெண்களுக்கு எதிரான சகல விதமான பாரபட்சங்களை இல்லாதொழித்தல் மீதான சமவாயம் (CEDAW) போன்ற அத்தகைய பாகுபாட்டுக்கு எதிரான சர்வதேசக் கருவிகளை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், இலங்கையில் பெண்களுக்கு எதிரான பாரபட்சம் உண்மைநிலையொன்றிலானதாகும் என்பதை அங்கீகரித்து, பெண்கள் பட்டயத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், பெண்கள் மீதான தேசிய குழுவையும் தாபித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை பட்டயம் கவனத்திற்கெடுக்கின்றது

வீட்டு வன்முறை, வேலைத்தளத்தில் பாலியல் தொந்தரவு, பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொந்தரவு, ஆயுத மோதலைக் கொண்ட பகுதிகளில் வன்முறையின் பலதரப்பட்ட வடிவங்கள் மற்றும் சமூகத்தின் எல்லா பிரிவுகளிலும் பாலியல்வல்லுறவு போன்ற பாரதூரமான குற்றங்கள் என்றவாறு பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் விசேட தருணங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. பால்நிலை அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதில் பரந்த முடிவுகளை பெண்கள் பட்டயம் வலியுறுத்துகின்றது. மனித உரிமைகளாக பெண்களின் உரிமைகள அங்கீகரிக்கப்படுவதையும், ஏற்றுக்கொள்ளப்படுவதையும் அத்துடன் வன்முறையையிட்டு அச்சமின்றியும், கௌரவத்துடனும் பெண்கள் வாழக்கூடிய சூழலொன்றை உருவாக்குவதையும் பட்டயம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
அத்தகைய நடவடிக்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்க வேண்டும்:


நிலையான சட்டத்தின் பிரகாரம் மட்டுமன்றி, ஆனால் வன்முறைக்குப் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளைத் தெளிவாக அங்கீகரிக்கும் தடுப்பிலானதும், தண்டனைக்குரியதுமான நடவடிக்கைகள் தொடர்பில் சட்டவாக்கச் சீர்திருத்தங்களை முன்னேற்றுதல்.
பெண்களுக்கு எதிராகத் திசைதிருப்பப்பட்ட வன்முறையின் குற்றங்களைக் கையாள்வதற்காக கட்டமைப்பிலான சீர்திருத்தங்களின் ஆற்றலளவைப் பலப்படுத்தும் வகையில், சட்ட வினைப்படுத்தல் இயந்திரத்தினுள்ளும், வினைப்படுத்தல் அதிகாரமுள்ளவர்களை கூருணர்வுப்படுத்தியும் கட்டமைப்பிலான சீர்திருத்தங்களை முன்னேற்றுதல்.

ஆயுதப் பிணக்கினாலும், சிவில் மோதலினாலும் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட வன்முறைக்குப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆதரவையும், ஆற்றுப்படுத்தல் சேவைகளையும் வழங்கும் அரசாங்கச் சார்பற்ற தாபனங்களுக்கும், சனசமூக அடிப்படையிலான தாபனங்களுக்கும் மற்றும் செயற்றிட்டங்களுக்கும் ஆதரவின் ஏற்பாடு (உறுப்புரை 16, இலங்கை பெண்கள் பட்டயம்)


அரசாங்க உறுப்புக்கள்


சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் அலுவல்கள் அமைச்சு

சிறுவர் அபிவிருத்தியினதும், பெண்களை அதிகாரமளிப்பதினதும் பிரச்சனைகளைக் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கத்துடன் 2005இல் சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் அலுவல்கள் அமைச்சு தாபிக்கப்பட்டது.


இலங்கைப் பெண்கள் பணியகம்

இலங்கையில் பெண்களின் உரிமைகளை அடைவதற்காக கொள்கைகளையும், திட்டங்களையும் அபிவிருத்தி செய்வதற்கும், அமுலாக்குவதற்கும், கண்காணிப்பதற்கும், மதிப்பாய்வதற்கும் அத்துடன் ஒருங்கிணைப்பதற்குமான பணியினை பெண்கள் பணியகம் கொண்டுள்ளது.


பெண்கள் மீதான தேசியக் குழு

பெண்கள் மீது தேசியக் குழுவையும், ஜனாதிபதி குழுவொன்றையும் (உறுப்புரைகள் 17-23) உருவாக்கியமையே பட்டயத்தினால் செய்யப்பட்ட பெண்களின் உரிமைகளை நோக்கி பணியாற்றுவதற்காக அரசாங்க இயந்திரத்திற்கான மிகவும் குறிப்பிடத்தக்க அறிமுகம் விளங்குகின்றது. இது பட்டயத்தின் கீழ் உரிமைகளைக் கண்காணிப்பதற்கு பதினைந்து உறுப்பினர் குழுவொன்றைக் கொண்டுள்ளது. சட்டம், சுகாதாரம், பொருளாதார அபிவிருத்தி, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சூழல் போன்ற பெண்களுக்கு குறிப்பான கரிசனையைக் கொண்ட பெருமளவு துறைகளில் தகுதியைக் கொண்ட நபர்களும் அத்துடன் தொண்டர் தாபனங்களின் அல்லது பெண்களின் செயற்பாடுகளின் அம்சங்களில் தம்மை வேறுபடுத்திக்காட்டிய நபர்களும் குழுவின் உறுப்பினர்களாவர்.

 

குழுவின் பணிகள் வருமாறு:

பால்நிலைப் பாகுபாட்டின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளுதலும், நுண்ணாய்தலும், அத்துடன் அவசியமான நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட நிருவாகத்தில் அதிகாரமுள்ளவர்களுக்கும், கரிசனையிலான நபர்களுக்கும் அல்லது உறுப்புகளுக்கும் அத்தகைய முறைப்பாடுகளை அனுப்பி வைத்தலும்.
நிவாரணத்திற்கும், சட்ட உதவிக்கும் அத்துடன்/அல்லது மத்தியஸ்த சேவைகளுக்கும் அரசாங்க மற்றும் அரசாங்க சார்பற்ற தாபனங்களுக்கு இப்பட்டயத்தில் அடங்கியுள்ள ஏற்பாடுகளின் மீறல்களின் முறைப்பாடுகளையிட்டு ஆலோசனை கேட்டல்.
அத்தகைய நடவடிக்கையைக் கண்காணித்தலும், சம்பந்தப்பட்ட நிருவாகத்தில் அதிகாரமற்றவர்களிடமிருந்து முன்னேற்றத்தின் வருடாந்த அறிக்கைகளை கோருதலும், நாட்டினுள் இந்த அறிக்கைகளைப் பரந்தரீதியில் கிடைக்கச் செய்தலும்.
இப் பட்டயத்தில் அடங்கியுள்ளவாறு பெண்களின் உரிமைகளினதும், பொறுப்புக்களினதும் மீது சகல சட்டவாக்க மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளின் தாக்கத்தை மதிப்பாய்தல்.
சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிக்கு ஊக்கமளிப்பது ஊடாக பட்டயத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உதவுதலும், அத்தகைய ஆராய்ச்சி மீதான அடிப்படையில் சீர்திருத்தங்களுக்கான விதந்துரைப்புக்களைச் செய்தலும்.
அதன் கரிசனைக்காக குழுவிடம் அமைச்சர் ஆலோசனை கேட்கின்றவாறாக, அல்லது பொருத்தமானது என குழு கருதுகின்றவாறாக பெண்களின் நிலை தொடர்பில் அத்தகைய விடயங்கள் மீது அமைச்சருக்கு (பெண்களின் நிலைக்குப் பொறுப்பான) ஆலோசனை வழங்குதல்.


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

1998இன் 50ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தாபிக்கப்பட்டது. சிறுவர்களின் பாதுகாப்புக்கும், சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கும் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்தமைப்பதே இந்த அதிகாரசபையின் பிரதான கடப்பாடாகும். ( http://www.childprotection.gov.lk/ )


இலங்கை வெளிநாட்டுத் தொழில் பணியகம்

இலங்கையின் புலம்பெயர் ஊழியர்களினதும், அவர்களது குடும்பங்களினதும் சேமநலன் அம்சங்களைக் கவனிப்பதற்கான முக்கியமான தாபனமே இலங்கை வெளிநாட்டுத் தொழில் பணியகமாகும். 1994இன் 4ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டதும், 21ஆம் இலக்கச் சட்டத்தினதும் வெளிநாட்டுத் தொழிலைக் கையாளும் முதனிலைச் சட்டவாக்கத்தினதும் கீழ் பணியகம் தாபிக்கப்பட்டுள்ளது: (http://www.slbfe.lk/)