புதிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களின் அறிமுகத்துடன் பெண்களுக்கு எதிராக வன்முறையின் புதிய வடிவங்களை பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறையின் சகல வடிவங்கள் மீதான 2006 ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அறிக்கை (http://www.un.org/womenwatch/daw/vaw/violenceagainstwomenstudydoc.pdf) அங்கீகரித்துள்ளது. பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறை தொடர்பிலான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களின் நிகழ்வுகள் இலங்கையில் உயர்வடைந்து வருகின்றன. தனிப்பட்டவருக்கு கெடுதலை விளைவிக்கும் செயல்நோக்கத்துடன் தனிப்பட்ட தகவலையும், படங்களையும் அடைவதற்கும், விநியோகிப்பதற்கும் குற்றத்தை இழைப்பவர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் இலகுவாக்குவதனால் பாலியல் தொந்தரவுக்கும், துஷ்பிரயோகத்திற்கும் பெண்களும், பெண்பிள்ளைகளும் குறிப்பிட்ட விதத்தில் ஊறுபடத்தக்கவர்களாக விளங்குகின்றனர்.


 


மூலம்: http://www.planusa.org/becauseiamagirl/docs/girlsincyberspace.pdf

 

Cyber Space இல் பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறையின் தன்மையினதும், அளவினதும் மீதான புள்ளிவிபரங்களை வழங்கும் தரவுகளும், ஆராய்;ச்சியும் இல்லை என்ற போதிலும், பெண்களின் மனித உரிமைகளினதும், பாதுகாப்பினதும் பாரதூரமான மீறலொன்றாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், பிரச்சனையைக் கவனத்திற்கெடுக்குமாறு பெண்களுக்கு எதிரான வன்முறை மீதான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அறிக்கை உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, Cyber Space தொடர்பான வன்முறையிலிருந்தும், துஷ்பிரயோகத்திலிருந்தும் பெண்களையும், பெண்பிள்ளைகளையும் பாதுகாப்பதற்கு போதியளவு சட்டங்களை இலங்கை கொண்டிருக்கவில்லை. எனவே, உதாரணமாக சமூக வலைப்பின்னல் தளங்கள், ஈமெயில் ஆகியன ஊடாக இன்டர்நெட்டில் படங்களை மேலேற்றும் போது அல்லது இன்டர்நெற் ஊடாக தனிப்பட்ட தகவலை பரிமாறிக்கொள்ளும் போது பெண்களும், பெண்பிள்ளைகளும் முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

2006இன் 16ஆம் இலக்க தண்டச் சட்டக்கோவை (திருத்த) சட்டம்

Cyber வன்முறையைத் தடுப்பதற்கான முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதில், 2006இன், தண்டனைச் சட்டக்கோவைக்கான திருத்தமொன்றை இலங்கை அறிமுகப்படுத்தியது. இது |சிறுவர் ஒருவரின் பாலியல் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதே கணனியினால் சேவையை வழங்கும் நபரின் கடமை| எனக் குறிப்பிட்டிருந்தது.
சிறுவர் ஒருவரின் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான குற்றமொன்றை அடக்கியுள்ள செயற்பாடொன்றை மேற்கொள்வதற்கு இத்தகைய கணனி வசதி பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கணனியொன்றின் வழிவகைகளினால் சேவைகளை வழங்கும் அத்தகைய நபருக்கு பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது என பிரிவு 286 ஆ (1) குறிப்பிடுகின்றது.
இக் குற்றம் மீதான தகவல் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் என பிரிவு 286 ஆ (2) குறிப்பிடுகின்றது. இச் சட்டத்தை மீறுவதற்கான தண்டனை இரு வருடங்களை மீறாத சிறைத்தண்டனை அல்லது ஓர் அபராதம் அல்லது சிறைத்தண்டனையும், அபராதமும் ஆகும். (http://www.oecd.org/dataoecd/38/0/46817262.pdf)

 

2007இன் 24ஆம் இலக்க கணனிக் குற்றம்

முதனிலையாக கணனி தொடர்பான குற்றங்களையும், ஊடறுக்கும் குற்றங்களையுமே கணனிக் குற்றச்சட்டம் கையாளுகின்றது. கணனியொன்றுக்கு அல்லது ஏதாவது கணனியில் உள்ள ஏதாவது தகவலுக்கு அங்கீகாரமற்றவிதத்தில் அடைய முற்படுவதை அத்துடன் ஏதாவது வேறு குற்றத்தை இழைப்பதை சட்டம் குற்றமாக்குகின்றது. ஆபாசப்புகைப்படம் மற்றும் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பக் கருவிகள் ஆகியன ஊடாக இழைக்கப்படும் தொந்தரவு போன்ற உள்ளடக்கம் தொடர்பான குற்றங்களை இச்சட்டம் கையாளவில்லை. (http://www.icta.lk/pdf/ComputerCrimesActNo24of2007.pdf)